TN Government schemes for women Update | Pregnancy scheme 2021 - Payanali

TN Govt Benefit Scheme Update | Pregnancy scheme 2021 | Offers and Schemes by Tamil Nadu Government

இன்று நாம் எதைப்பற்றி பார்க்கப் போறோம் என்றாள், கர்ப்பமான பெண்கள் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் உதவி மூலமாக தமிழ்நாடு அரசு நமக்கு தரும் சலுகைகளை பற்றி பார்க்க போகிறோம்.

நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள் என்றால் உடனே ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனை சென்று உங்கள் கர்ப்பத்தை பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்வதின் மூலம் உங்களுக்கு கர்ப்ப பதிவு எண் கொடுப்பார்கள். அதை பிக் மீ  நம்பர் என்று கூறுவோம். இதன் மூலமாக மட்டுமே உங்கள் குழந்தைக்கு நீங்கள் பிறப்பு சான்றிதழ் பெற முடியும்.

இதனுடன் உங்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் நிதியுதவி தருகிறார்கள், இந்த நிதி உதவி உங்களுக்கு ஐந்து தவணைகளாக, உங்கள் வங்கி கணக்கில் வந்து சேரும். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது போடப்படும் தடுப்பூசிகள் உங்களுக்கு அங்கேயே இலவசமாகவே வழங்கப்படுகிறது.  3, 7, 9 இந்த மாதங்களில் நீங்கள் முக்கியமாக தடுப்பூசி போட்டு ஆக வேண்டும். இந்தத் தடுப்பூசி போடுவதன் மூலம் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்  மகப்பேறு காலத்தில் பாதுகாப்பாக இருக்கும்.

இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் தருகிறார்கள். ஊட்டச்சத்து பெட்டகத்தில் உங்களுக்கு 

2box புரோட்டின் பவுடர், 

3 இரும்பு சத்து டானிக்கை, 

அரை கிலோ ஆவின் நெய், 

அரைக்கிலோ பேரிச்சம்பழம் – 2 Pack, 

ஒரு குடல் புழு மாத்திரை,

ஒரு பருத்தி துண்டு, 

ஒரு டீ கப் 

தராங்க. உடனே நீங்களும் போய் உங்க கர்ப்பத்தை பதிவு செய்து இந்த சலுகைகளை பெறுங்கள்.

நன்றி !!

Share

Leave a Reply