symptoms and reasons for irregular periods

Symptoms and reasons for irregular periods

    இந்த காலகட்டத்தில் அதிகப்படியான பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை Irregular periods ஆகும். ஒரு சில உடல்ரீதியான பிரச்சனைகளின் காரணமாக இந்த Irregular periods ஏற்படுகிறது. எனவே அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை பற்றி விரிவாக இனி காண்போம்.

Irregular periods என்றால் என்ன?

       பொதுவாக மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாகும். ஒழுங்கான மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை நீடிக்கும். இரத்தப்போக்கு இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். இதுவே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி அல்லது Irregular periods என்பது 21 நாட்களுக்கு குறைவாகவும், 35 நாட்களை விட அதிகமாகவும் சுழற்சி இருக்கும். இவை பெண்களுக்கு பெண்கள் மாறுபடும்.

     ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை குறிக்கிறது. இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியில் அதன் அதிர்வெண், கால அளவு, இரத்தப்போக்கு அளவு ஆகியவை அடங்கும். ஹார்மோன் சமநிலையின்மை, மருத்துவ நிலைமைகள், மன அழுத்தம் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் ஆகிய காரணங்களால் இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியானது ஏற்படுகிறது.

Irregular periods அறிகுறிகள்

  •  ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
  •   கனமான அல்லது லேசான ரத்தப்போக்கு
  •   அதிக வலி கொண்ட மாதவிடாய்

Irregular periods காரணங்கள்

ஹார்மோன் சமநிலையின்மை

hormone imbalance

      ஒரு முக்கியமான காரணம் இந்த ஹார்மோன் சமநிலையின்மை ஆகும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் மாதவிடாயை கட்டுப்படுத்தும் முக்கியமான ஹார்மோன் ஆகும். ஈஸ்ட்ரோஜன் கர்ப்பப்பை சுவரை அடர்த்தியாக்க உதவுகிறது. அதே நேரத்தில் புரோஜெஸ்ட்டிரோன் கர்ப்பப்பை சுவரை பராமரிக்க உதவுகிறது. இரண்டு ஹார்மோன்களும் பெண்களுக்கு மிகவும் உதவுகிறது. இதில் ஈஸ்ட்ரோஜன் முதல் பாதி சுழற்சியிலும் புரோஜெஸ்ட்டிரோன் அடுத்த பாதி சுழற்சியிலும் வேலை செய்கிறது. ஈஸ்ட்ரோஜன் ஆனது கருமுட்டை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த ஹார்மோன்களில் ஏதேனும் ஒன்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உற்பத்தி செய்தால் அது ஒழுங்கற்ற மாதவிடாயை ஏற்படுத்துகிறது. 

       PCOS என்பது ஒரு பொதுவான ஹார்மோன் கோளாறு. இதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்துகிறது. PCOS உள்ள பெண்களுக்கு ஆண்ட்ரோஜன்கள் இயல்பான அளவை விட அதிகமாக இருக்கும். அப்படி என்றால் பெண்களில் இருக்கும் ஆண் ஹார்மோன்கள். இந்த ஹார்மோன் சமநிலையின்மை ஒழுங்கற்ற மாதவிடாயை ஏற்படுகிறது.

       தைராய்டு பிரச்சனைகளும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறது. தைராய்டு சுரப்பியானது நம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அதுவே தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ ஹார்மோன்களை உற்பத்தி செய்வது ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்துகிறது.

மருத்துவ நிலைகள்

pcos and thyroid symptoms of irregular periods

Polycystic ovary syndrome(PCOS)

    கருப்பையில் உருவான நீர் கட்டினால் ஏற்படும் ஹார்மோன் பக்கவிளைவுகளை PCOS என்று கூறப்படுகிறது. ஆதலால் ஆண்ட்ரோஜன்கள் இயல்பான அளவை விட அதிகமாக இருக்கும் போது ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை உருவாக்குகிறது.

Uterine fibroids

      கர்ப்பப்பையில் உருவாகும் புற்று நோய் அல்லாத கட்டிகள் அதிக அளவு ரத்தப்போக்கு மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுகிறது.

Thyroid problem

    ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்கு தைராய்டு சுரப்பியானது தைராய்டு ஹார்மோன்களை நிலையான ஹார்மோன் அளவுகளை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உற்பத்தி செய்கிறது. ஆதலால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறது. இறுதியாக இவை மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது.

Premature ovarian failure (or) முன்கூட்டிய கருப்பை செயலிழப்பு

    ஒரு பெண்ணிற்கு 40 வயதிற்கு முன்பு கருப்பைகள் முட்டைகளை உற்பத்தி செய்வதை நிறுத்தும் போது ஒழுங்கற்ற அல்லது மாதவிடாய் இல்லாததை ஏற்படுத்துகிறது.

Pelvic inflammatory (or) இடுப்பழற்சி நோய்

பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் இந்த அலர்ஜியானது இடுப்பு வலி மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாயை ஏற்படுகிறது.

மன அழுத்தம்

stress

       ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு மற்றொரு காரணம் இந்த மன அழுத்தம் ஆகும். பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கும் போது நம் உடலில் அதிக அளவு கார்டிசோலை உற்பத்தி செய்கிறது. இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை பாதிக்கிறது. ஆதலால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு காரணமாகிறது.

      மேலும் மன அழுத்தம் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் எடையில் மாற்றங்களை ஏற்படுத்தும். அதிக அளவு எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு ஹார்மோன் சமநிலைமையை உருவாக்கி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்துகிறது. எனவே மன அழுத்தத்தை குறைப்பதற்காக ஆழ்ந்த சுவாச பயிற்சி, தியானம், யோகா போன்ற பயிற்சிகளை செய்யலாம். மேலும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் போதுமான தூக்கம் இவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

ஆரோக்கியமற்ற வாழ்கை முறை

 ஊட்டச்சத்து பற்றாக்குறை

     நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாதது நமது மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது.

அதிக உடற்பயிற்சி செய்வது

      அதிக அளவு உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் ஹார்மோன் சமநிலையை பாதித்து ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.

     மேலும் மது, புகையிலை, தூக்கமின்மை, உடல் பருமன் ஆகிய காரணங்களாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.

நன்றி !!

Share

Leave a Reply