symptoms of girl baby

Symptoms of girl baby during pregnancy

     கர்ப்பம் என்பது ஒரு பெண்ணிற்கு மிகவும் முக்கியமான ஒரு தருணம் ஆகும். அந்த தருணத்தின் போது அதிக உற்சாகமும், எதிர்பார்ப்பும் கொண்டிருப்பார்கள்.

    எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் தனது வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று அதிக எதிர்பார்ப்பும், ஆசையும் இருக்கும்.

    ஆனால் இன்றைய காலகட்டத்தில் சட்டரீதியாக வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை தெரிவிப்பதை தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில அறிகுறிகளை வைத்து நம் வயிற்றில் வளர்வது ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டறியலாம்.

     வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்பதற்கான அறிகுறிகளை பற்றி விரிவாக காண்போம்.

இதயத்துடிப்பு

      பொதுவாக வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பானது நிமிடத்திற்கு 120 முதல் 160 வரை இருக்கும். அதுவே இதயத்துடிப்பானது 140-க்கும் மேல் இருந்தால் அவை பெண் குழந்தையாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது எவ்வாறு கண்டறிவது என்றால் உங்களது முதல் ஸ்கேன் ரிப்போர்ட்டில் இருந்து இறுதி ஸ்கேன் ரிப்போர்ட் வரை ஒப்பிட்டுப் பார்த்தால் இதயத்துடிப்பானது அதிகரித்துக் கொண்டிருந்தால் அதாவது 140 க்கு மேல் இருந்தால் பெண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது.

வயிற்றின் வடிவமைப்பு

     கர்ப்பிணிப் பெண்ணின் வயிறானது அகலமாகவும், தட்டையாகவும் இருந்தால் அது பெண் குழந்தையாக இருக்கலாம். மேலும் அவரின் மேல் வயிறானது பெரிதாக காணப்படும்.

காலை சோம்பல்

     காலை நேரத்தில் மிகவும் மந்தமாகவும், களைப்பாகவும், வாந்தி போன்ற சில தொந்தரவுகள் ஏற்பட்டால் பெண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது.

முகத்தோற்றம்

      வயிற்றில் இருப்பது பெண் குழந்தையாக இருந்தால் அந்த கர்ப்பிணி பெண்ணின் முகமானது மிகவும் பளிச்சென்றும், அழகாகவும் தோற்றமளிக்கும்.

மார்பக அளவு

     ஒரு பெண்ணின் மார்பகமானது கர்ப்பம் தரித்த உடனே பெரிதாக ஆரம்பிக்கிறது. அதுவும் வலது மார்பகத்தை விட சற்று இடது மார்பகம் பெரிதாக இருந்தால் அவை பெண் குழந்தைக்கான ஒரு முக்கிய அறிகுறியாகும்.

சுவைத்தன்மை

     வயிற்றில் இருப்பது பெண் குழந்தையாக இருந்தால் அவர்கள் இனிப்பு சுவையை விரும்புவார்கள்.

சிறுநீரகத்தின் நிறம்

     சிறுநீரகத்தின் நிறமானது வெளிர்மஞ்சள் நிறமாக காணப்பட்டால் வயிற்றில் இருப்பது பெண் குழந்தையாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

     இதில் உள்ள அறிகுறிகள் 80 சதவீதம் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் குழந்தை கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. எனவே எந்த குழந்தையாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றி !!

Share

Leave a Reply