home remedies for irregular period

Home remedies for cure irregular period

ஒழுங்கற்ற மாதவிடைக்கான ஹோம் ரெமடியை பற்றி விரிவாக பார்ப்போம்.

      இந்த காலகட்டத்தில் அதிகப்படியான பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை Irregular periods ஆகும். ஒரு சில உடல்ரீதியான பிரச்சனைகளின் காரணமாக இந்த Irregular periods ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கான ஹோம் ரெமடியை பற்றி விரிவாக பார்ப்போம்.

இஞ்சி டீ

ginger tea

     இஞ்சியில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது. இஞ்சி ஆனது ஒரு வலி நிவாரிணியாகவும், நம் உடம்பில் உள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதற்கும் உதவுகிறது. இவ்வாறு ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதன் மூலம் மாதவிடாய் சுழற்சியானது சீராகிறது. எனவே ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை இஞ்சி டீ பருகி வர மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யலாம்.

     உங்கள் காரத்திற்கு தகுந்தாற்போல் ஒரு துண்டு இஞ்சி எடுத்துக் கொண்டு அதை சீவி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 300ml அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் துருவி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்பொழுது அந்த 300ml தண்ணீரானது 150ml ஆகும் வரை கொதிக்க விட வேண்டும். இப்பொழுது உங்களுக்கு தேவையான அளவு  கருப்பட்டி சேர்த்து வடிகட்டி பரகலாம்.

இலவங்கப்பட்டை டீ

cinnamon tea

      இந்த இலவங்கப்பட்டையிலும் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த இலவங்கப்பட்டையானது நம் உடலில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும்  உதவுகிறது. எனவே இந்த ஹார்மோன் சமநிலை காரணமாக மாதவிடாய் சுழற்சியானது சீராகிறது. எனவே தினமும் இந்த இலவங்கப்பட்டையை டீயாக வைத்தும் குடிக்கலாம் அல்லது நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மஞ்சள் பால்

turmeric milk home remedies

      மாதவிடாய் சுழற்சியை சீராக உதவும் மற்றொரு மருத்துவ குணம் நிறைந்த பொருள் மஞ்சளாகும். இதில் உள்ள  Anti-inflammatory பண்புகள் மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. எனவே ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருகிவர மாதவிடாய் சுழற்சியை சீராக்கலாம்.

பப்பாளி பழம்

papaya fruit home remedies

      பப்பாளி பழத்தில் அதிக அளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இந்த பப்பாளி பழத்தில் papain என்ற ஒரு நொதி உள்ளது. இவை நம் உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்த ஊக்குவிக்கிறது. இதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை சீராக்கலாம். எனவே பப்பாளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் ஒரு கப் தயிர் சேர்த்து தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது இவற்றை பழச்சாறாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

      இந்த ஹோம் ரெமடியுடன் சேர்த்து நமது அன்றாட வாழ்வில் ஒரு சில பழக்கங்களை சரி செய்வதன் மூலம் இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை செய்யலாம்.

உடற்பயிற்சி

exercise

       ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு நாளைக்கு 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு உடற்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது மற்றும் நமது உடலில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. இதன் மூலம் மாதவிடாய் சுழற்சி சீராகிறது.

ஆரோக்கியமான உணவு

healthy food

      ஆரோக்கியமான உணவு மற்றும் சரிவிகித உணவு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு தேவையான அனைத்து உட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதன் மூலம் மாதவிடாய் சூழ்ச்சியானது சீராகிறது. எனவே பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஒல்லியான புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

போதுமான தூக்கம்

sleep

      சராசரியாக ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். அவ்வாறு தூங்கவில்லை என்றால் நமது உடலின் ஹார்மோன் சமநிலை பாதிக்கிறது.

மன அழுத்தத்தை போக்குதல்

      இந்த irregular periods க்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகும். இந்த மன அழுத்தமானது நம் உடம்பில் உள்ள ஹார்மோன் சமநிலையை தாக்குகிறது. ஆதலால் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது எனவே மன அழுத்தத்தை போக்குவதற்காக உடற்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.

நன்றி !!

Share

Leave a Reply