How-To-Create-an-Ovulation-calculator-Pre-Pregnancy-Tips

Create an ovulation calculator | Pre-Pregnancy Tips | Ovulation day

இன்னைக்கு நாம் பார்க்க இருப்பது ஓவலேஷன் நாட்களை எப்படி கண்டு பிடிப்பது? அதன் அறிகுறிகள் என்ன?

ஓவலேஷன் என்றால் நம் கர்ப்பப்பையிலிருந்து கருமுட்டை வெளிவரும் நாட்களை குறிப்பது. ஓவலேஷன் நாளை நாம் சரியாக கண்டு பிடிப்பதன் மூலம் நாம் விரைவில் கர்ப்பம் அடைய முடியும். பொதுவாக பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும். சிலருக்கு 29 நாள், 30 நாள் என்று மாதவிடாய் நாட்கள் வரும், அதனால் உங்களது மாதவிடாய் நாட்களை குறித்துக் கொள்ளுங்கள். பொதுவாக நம்மளுடைய மாதவிடாய் நாள், முதல் நாளில் இருந்து நான்காம் நாட்களுக்குள் கருமுட்டை வளர்ச்சி அடைய ஆரம்பித்துவிடும்.

இப்பொழுது நமது ஓவலேஷன் நாளை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம். 

எடுத்துக்காட்டாக உங்களது மாதவிடாய் நாள் தேதி ஒன்றாக இருந்தால் அதிலிருந்து உங்களுடைய 11வது நாள் உங்கள் கருமுட்டை வெளி வர ஆரம்பிக்கும். அதனால் நீங்கள் 11, 12, 13, 14, 15, 16 இந்த நாட்களில் நீங்கள் ஒன்றாக இருப்பதன் மூலம் உங்களுக்கு கரு உருவாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதேபோல் தான் 29, 30, 31 ஆகிய நாட்களில் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கும், அவர்கள் தேதியிலிருந்து கரெக்டாக ஒரு நாள் தள்ளி, அதாவது 29 நாள் மாதவிடாய் ஆகும் பெண்ணுக்கு அவர்களுடைய 12வது நாளும், 30 நாளில் மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு அன்றிலிருந்து 13 நாட்களும், 31 நாள் மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு அன்றில் இருந்து 14-வது நாள் என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஓவலேஷன் அறிகுறி நம் உடம்பிலிருந்து வெளிவரும் ஒரு வெள்ளை திரவத்தின் மூலம் நம் கண்டுபிடிக்கலாம். இது அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் ஒரு அறிகுறி மட்டுமே. இதேபோல்தான் மாத விடாய் சரியாக வராத பெண்களுக்கும் ஒரு சிலருக்கு எப்பொழுது மாதவிடாய் வரும் என்று தெரியாது. அந்த மாதிரி பெண்களுக்கும் அவர்கள் பிறந்த முதல் நாளில் இருந்து அவர்களுடைய பதினோராவது நாளில் நீங்கள் சேர்ந்து இருப்பதன் மூலம் கர்ப்பம் அடையலாம்.

நன்றி !!

Share

Leave a Reply