breast milk and formula milk importance

The importance and benefits of breast milk and formula milk

தாய்ப்பால்

       பிறந்த குழந்தைக்கு இயற்கையான முறையில் கிடைக்கும் தாய்ப்பால் சிறந்த உணவாகும். தாய்ப்பாலில் அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்தானது குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. எனவே பல தொற்று நோயிலிருந்து குழந்தையை பாதுகாக்க தாய்ப்பால் உதவுகிறது. மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இது ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. இந்த தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கும் மற்றும் குழந்தைக்கும் இடையே வலுவான பிணைப்பை ஏற்படுத்துகிறது.

தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள்

       இந்த தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் அதிக அளவு நன்மைகள் உள்ளது. இந்த தாய்ப்பாலில் அதிக அளவு புரதச்சத்து, வைட்டமின், மினரல் மற்றும் ஆன்ட்டி பாடிஸ் ஆகியவை உள்ளது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பல தொற்றிலிருந்து குழந்தையை காப்பாற்றுகிறது. பிறந்த குழந்தைக்கு செரிமான சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும் அதுவே இந்த தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அதன் செரிமானத்தை சீராக்கலாம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் ஏற்றதாக உள்ளது. மேலும் இவை காது, மூக்கு, தொண்டை போன்றவற்றில் ஏற்படும் தொற்றில் இருந்து குழந்தையை பாதுகாக்கிறது.

       இந்த தாய்ப்பால் ஆனது குழந்தையை obesity பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயிலிருந்தும் பாதுகாக்கிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் நோயிலிருந்து இருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள். தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மூலம் அவர்களுக்கு டெலிவரிக்கு  பிறகு வரும் ரத்தப்போக்கு அளவு குறைகிறது மற்றும் டெலிவரிக்கு பிறகு வரும் உடல் எடையை குறைக்கிறது. மேலும் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும் முறை

        முதலில் உங்கள் குழந்தையின் தலை மற்றும் உடலை ஒரே நேர்கோட்டில் வைத்து உங்களது மார்பகத்திற்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தையின் வாயை நிப்பிளில் வைக்க வேண்டும் இதனால் குழந்தையின் வாயானது முடிந்தவரை அரோலாவை மறைக்கும். இப்பொழுது குழந்தை பால் குடிப்பதற்கு ஏற்ற ஒரு நிலையில் இருக்கும். அந்த சமயத்தில் குழந்தையின் தலையை மார்பகத்திற்கு அருகில் கொண்டு வந்து கன்னம் மற்றும் மூக்கு மார்பகத்தில் உரசுவது போல் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது உங்கள் குழந்தை பாலை உறிஞ்சுவதை நீங்கள் உணர முடியும். இதே போல் இரண்டு புறமும் மாற்றி மாற்றிக் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பாலின் அளவு

breast milk

       பிறந்த குழந்தைக்கு வயிற்றின் அளவு மிகவும் சிறிதாக இருக்கும். எனவே அந்த குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பால் தேவைப்படுகிறது. அந்த குழந்தைக்கு பசியின் அறிகுறி தென்பட்டால் பால் கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அதாவது ஒரு நாளைக்கு 8 முதல் 12  முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மேலும் அந்த குழந்தையின் சிறுநீரின் அளவை கண்டறிந்து குழந்தைக்கு தேவையான அளவு பால் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்

        தாய்ப்பால் கொடுப்பது என்பது ஒரு பெரிய சவாலான விஷயமாக இருக்கும் ஏனென்றால் ஆரம்பத்தில் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது மார்பகங்களில் வலி, புண் மற்றும் குறைந்த அளவு பால் சுரத்தல் போன்றவை ஏற்படும். அதுவே நாளடைவில் சரியான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலின் உதவியுடன் சரியாகிவிடும். மேலும் அதிக அளவு பால் சுரக்க அதற்கேற்ற உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஃபார்முலா பால்

formula milk breast milk

        இந்த ஃபார்முலா பால் ஆனது மாட்டு பாலை காட்டிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. முதலில் தாய்ப்பாலுக்கு தான் முன்னுரிமை தர வேண்டும். தாய்மார்களுக்கு உடல் ரீதியாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என்றால் மட்டுமே இந்த ஃபார்முலா பாலை தேர்வு செய்ய வேண்டும். ஃபார்முலா பால் ஆனது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருகிறது மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஃபார்முலா பாலின் நன்மைகள்

        குழந்தைக்கு ஃபார்முலா பால் தருவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். ஏனென்றால் தாய்மார்கள் உடல்நிலை சரியில்லாத போது அந்த குழந்தைக்கு யார் வேண்டுமானாலும் இந்த ஃபார்முலா பாலை தயாரித்து கொடுக்கலாம். இதன் மூலம் தாய்மார்கள் ஓய்வெடுத்துக் கொள்ள நேரம் கிடைக்கும்.

ஃபார்முலா பால் தயாரிக்கும் முறை

        ஃபார்முலா பால் தயாரிப்பதற்கு முன்னர் குழந்தைக்கு பால் கொடுக்கப்படும் பாட்டில் மற்றும் நிப்பிள் ஆகியவற்றை சுடு தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஃபார்முலா பால் பாக்கெட் பின்புறம் தயாரிப்பு முறையை விளக்கமாக கொடுத்திருப்பார்கள். மேலும் அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் குழந்தை மருத்துவரிடம் ஆலோசித்து உறுதி செய்து கொள்வது நல்லது.

ஃபார்முலா பாலின் அளவு

formula feeding

        பிறந்த குழந்தைக்கு வயிறானது மிகவும் சிறிதாக இருக்கும் அந்த குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பால் தேவைப்படுகிறது. எனவே குழந்தை பிறந்த ஒரு சில வாரங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அதாவது 8 முதல் 12 மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்க வேண்டும். மேலும் அந்த குழந்தையின் சிறுநீரின் அளவை கண்டறிந்து குழந்தைக்கு தேவையான அளவு பால் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஃபார்முலா பால் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்

       குழந்தைங்களுக்கு கொடுக்கப்படும் பாலின் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் மற்றும் இவை குழந்தைகளுக்கு வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது.

நன்றி !!

Share

Leave a Reply