ven pongal recipe

How to make hotel style ven pongal (வெண்பொங்கல்)?

     வெண்பொங்கல் (ven pongal recipe) என்பது தென்னிந்தியாவின் பிரபலமான ஒரு காலை உணவாகும். இதை கார பொங்கல் அல்லது நெய் பொங்கல் என்றும் கூறுவார்கள். இந்த வெண் பொங்கலை அடிக்கடி செய்ய மாட்டார்கள். பொதுவாக பண்டிகை அல்லது விசேஷ நாட்களில் தான் அதிக அளவு செய்வார்கள். இந்த பொங்கல் ஆனது அரிசி, பருப்பு, சீரகம், மிளகு, இஞ்சி, மிளகாய், நெய் ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் ஒரு காலை உணவாகும். இந்த பொங்கலை சட்னி, சாம்பார், பருப்புடன் சேர்ந்து பரிமாறுவார்கள்.

தேவையான பொருட்கள்

  •      பச்சரிசி ஒரு கப் 
  •      பாசிப்பருப்பு அரை கப் 
  •      நெய் 2 டேபிள் ஸ்பூன்
  •      சீரகம் 2 ஸ்பூன் 
  •      மிளகு 2 ஸ்பூன் 
  •      இஞ்சி ஒரு சிறிய துண்டு 
  •      பச்சை மிளகாய் 2 
  •      கருவேப்பிலை 2 கொத்து 
  •      முந்திரிப் பருப்பு 10 முதல் 15
  •      மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  •      உப்பு தேவையான அளவு

Preparation time

20 to 30 mins

Serving people

3 to 4 people

குறிப்பு 1

      இந்த பொங்கலுக்கு உபயோகப்படுத்தப்படும் பாசிப்பருப்பை சிறிது வறுத்து எடுத்துக் கொண்டால் பொங்கலானது அதிக மணமாக இருக்கும்.

குறிப்பு 2

      தாளிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படும் நெய் சுத்தமான நெய்யாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொண்டால் பொங்கலின் சுவையானது அப்படியே ஹோட்டல் சுவையில் கிடைக்கும்.

செய்முறை

      முதலில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை சுத்தமாக கழுவி 20 முதல் 30 நிமிடம் வரை ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் ஊற வைத்து எடுத்துக்கொண்ட ஒரு கப் பச்சரிசி மற்றும் அரை கப் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் கால் ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் 4 கப் தண்ணீர் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மூன்று முதல் நான்கு விசில் வரும் வரை விட வேண்டும். குக்கரை நீக்கி நன்கு குழைவாக வெந்த பொங்கலை கிளறி விட வேண்டும்.

     இப்பொழுது தாளிப்பிற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அதில் 2 ஸ்பூன் சீரகம் மற்றும் 2 ஸ்பூன் மிளகு சேர்க்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கிளறி விட வேண்டும். 2 கொத்து கருவேப்பிலை மற்றும் அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும். இப்பொழுது இந்த கலவையை எடுத்து குழைவாக வெந்த சாதத்தில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    சுவையான, மணமான ஹோட்டல் ஸ்டைல் வெண்பொங்கல் தயார். இந்த சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெண்பொங்கலை தேங்காய் சட்னியோடு சேர்த்து பரிமாறலாம்.

      இதே போல் சுவையான ஐயர் வீட்டு சாம்பார் சாதம் செய்வது எப்படி என்றும் தெரிந்து கொள்ளலாமே!

நன்றி !!

FAQ

வெண்பொங்கல் எப்போது செய்யப்படும்?

வெண்பொங்கல் பொதுவாக பண்டிகை அல்லது விசேஷ நாட்களில் செய்யப்படும். முதலில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை சுத்தமாக கழுவி ஊற வைத்து, அதனுடன் வெண்பொங்கல் செய்யலாம்.

வெண்பொங்கல் சாப்பிடப்படும் போது அதிக மணமாகுமா?

பொங்கலின் சுவையில் அதிக மணமாக இருந்தால், பாசிப்பருப்பை சிறிது வறுத்து எடுத்துக் கொள்ளலாம். அப்படியும் செய்யலாம்.

வெண்பொங்கல் செய்யும் முறையில் எந்த பொருட்கள் தேவை?

வெண்பொங்கலை செய்வதற்கு பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், சீரகம், மிளகு, இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை தேவை.

வெண்பொங்கல் செய்ய எப்படி நெய் குழந்தை தூளாக உபயோகிக்கலாமா?

வெண்பொங்கலை செய்யும் போது, நெய் அழகுப் பற்றினால் சுத்தமான நெய் குழந்தை தூளாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் பொங்கலின் சுவையானது அப்படியே ஹோட்டல் ஸ்டைல் சுவையில் கிடைக்கும்.

Share