Tomato rice

How to make tasty tomato rice (தக்காளி சாதம்) ?

தேவையான பொருட்கள்

  • ஆயில் 2 டேபிள் ஸ்பூன் 
  • நெய் 2 டேபிள் ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் 3
  • பச்சை மிளகாய் 2 
  • தக்காளி 400 கிராம் 
  • அரிசி 2 கப்
  • பூண்டு பெரிய பல் 7 
  • இஞ்சி 2 துண்டு 
  • தயிர் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு 
  • தனி மிளகாய் தூள் 2 டீஸ்பூன் 
  • காஷ்மீர் மிளகாய் தூள் 1 டீஸ்பூன் 
  • கொத்தமல்லி ஒரு கைப்பிடி 
  • புதினா ஒரு கைப்பிடி
  • பிரியாணி இலை 1
  • பட்டை 1 துண்டு 
  • சோம்பு 1 டீஸ்பூன்
  • கிராம்பு 3
  • ஏலக்காய் 2
  • மராட்டி மொக்கு 1 துண்டு
  • நட்சத்திர சோம்பு 1 துண்டு
  • கல்பாசி 1 டீஸ்பூன்

Preparation Time

30 to 45 min

Serving people

4 to 5

தக்காளி சாதம் (Tomato Rice) செய்முறை

  1. முதலில் இரண்டு கப் அரிசியை அரை மணி நேரத்திற்கு முன்னரே ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. நாம் எடுத்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. இப்பொழுது அடுப்பில் குக்கரை வைத்து குக்கர் சூடு ஏறியதும், அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஆகியவற்றை ஊற்ற வேண்டும்.
  4. எண்ணெய் சூடு ஏறியதும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள பிரியாணி இலை, பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், மராட்டி மொக்கு, நட்சத்திர சோம்பு, கல்பாசி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
  5. அதில் நீளவாக்கில் அறிந்து வைத்துள்ள மூன்று பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். 
  6. பின்பு அதில் பச்சை மிளகாய்  மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்ற சேர்க்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். 
  7. அவை வதங்கியதும் அதில் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள 400 கிராம் தக்காளி சேர்க்க வேண்டும்.
  8. தக்காளி நன்கு மசிந்ததும் அதில் தனி மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், தயிர் சிறிது மற்றும் உப்பு தேவையான அளவு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
  9.  இறுதியாக கொத்தமல்லி ஒரு கைப்பிடி மற்றும் புதினா ஒரு கைப்பிடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இப்பொழுது தக்காளி சாதத்திற்கு தேவையான சுவையான மசாலா ரெடி ஆகி விட்டது. இதில் 2 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதி வந்ததும் அதில் 2 கப் அரிசியை போட்டு கிளறி விட்டு குக்கரை மூடி வைக்க வேண்டும்.
  10. பிறகு 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். விசில் அடங்கியவுடன் குக்கரை நீக்கி தக்காளி சாதத்தை லேசாக கிளறி விட வேண்டும். இப்பொழுது சுவையான மணக்க மணக்க தக்காளி சாதம் (Tomato Rice) தயார். இதை சூடாக பரிமாற வேண்டும்.

இதே போல் சுவையான எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்றும் தெரிந்து கொள்ளலாமே!

நன்றி !!

Share

Leave a Reply