puliyodharai recipe - Payanali ecipe

South Indian temple style tamarind or Puliyodharai recipe (புளி சாதம்)

தேவையான பொருட்கள்

  • வேக வைத்த சாதம் 2 கப் 
  • புளி ஒரு பெரிய ஆரஞ்சு பழ அளவு 
  • நல்லெண்ணெய் தேவையான அளவு 
  • உப்பு தேவையான அளவு 
  • பூண்டு சிறிய பல் 10 முதல் 15
  • கருவேப்பிலை 4 கொத்து
  • காய்ந்த கொத்தமல்லி 1 டேபிள் ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் 
  • பச்சை கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன் 
  • வேர்க்கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  • தனி மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  • சீரகம் 2 டீஸ்பூன்
  • மிளகு 2 டீஸ்பூன் 
  • வெந்தயம் 1 டீஸ்பூன்
  • வர மிளகாய் 5
  • காஷ்மீர் மிளகாய் 2
  • மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
  • வெல்லம் ஒரு சிறிய துண்டு

குறிப்பு 1

      புளி சாதம் தயாரிக்கப்படுவதற்காக செய்யப்படும் புளி ரசத்திற்கு புளியை கெட்டியாக கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். புளி கரைசலை கெட்டியாக உபயோகிப்பதால் புளி சாதமானது மணமாகவும், ருசியாகவும்  இருக்கும்.

குறிப்பு 2

     புளி சாதத்திற்கு தேவைப்படும் மசாலா பவுடர் அரைப்பதற்கு மசாலா பொருட்களை லேசாக வறுக்க வேண்டும். வெகு நேரம் வறுக்க கூடாது. அவ்வாறு வெகு நேரம் வறுத்தால் புளி சாதமானது தீயல் வாசம் வீசும்.

Preparation Time

45 min

Serving People

4

கோவில் புளி சாதத்திற்கு தேவையான மசாலா பவுடர் செய்முறை

     ஒரு கடாயில் காய்ந்த கொத்தமல்லி 1 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் 2, காஷ்மீர் மிளகாய் 2, உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், பச்சை கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை ஒரு கொத்து, சீரகம் 2 டீஸ்பூன், மிளகு 2 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன் ஆகியவற்றை நன்றாக வறுத்து ஆற வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கோவில் புளி சாதத்திற்கு தேவையான ரகசிய மசாலா ஆகும்.

புளி சாதம் (Puliyodharai recipe) செய்முறை

  1.  முதலில் சூடான 2 கப் சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் சாதமானது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும். 
  2. அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், பச்சை கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், வேர்கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை, வரமிளகாய் 3 ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  3. பிறகு பூண்டு 10 முதல் 15 பல், மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இப்பொழுது கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றவும். இதில் 2 டீஸ்பூன் தனி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை கொதிக்க விட வேண்டும். 
  4. இறுதியாக நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவில் ஒரு ஸ்பூன் எடுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து நன்கு கொதி விட்டதும் இறக்கி விட வேண்டும். இப்பொழுது சுவையான புளி சாதத்திற்கு தேவையான புளி ரசம் தயாராகி உள்ளது. 
  5. ஆற வைத்து எடுத்து வைத்துள்ள 2 கப் சாதத்திற்கு தேவையான புளி ரசத்தை ஊற்றி கிளறி விட வேண்டும். சாதத்துடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவில் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான, மணமான கோவில் ஸ்டைல் புளி சாதம் (puliyodharai recipe) தயார்.

இதே போல் சுவையான, மணமான கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி என்றும் தெரிந்து கொள்ளலாமே!

நன்றி !!

Share

Leave a Reply