hotel style | Coconut rice | easy recipe

How to make Hotel Style Coconut Rice (தேங்காய் சாதம்) ?

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு 
  • உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன் 
  • கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் 
  • வேர்க்கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் 
  • முந்திரி 8 முதல் 10
  • கடுகு 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை 1 கொத்து
  • வர மிளகாய் 2 முதல் 3
  • வேக வைத்த சாதம் 1 கப் 
  • தேங்காய் அரை மூடி

குறிப்பு 1

    தேங்காய் சாதத்திற்கு தேவையான தேங்காய் கலவையை சிறிது நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த தேங்காய் சாதமானது வெகு நேரம் ஆனாலும் கெட்டுப்போகாது.

குறிப்பு 2

      இந்த தேங்காய் சாதம் தயாரிப்பதற்கு  தேங்காய் எண்ணெய்யை உபயோகப்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்துவதால் தேங்காய் சாதம் ஆனது தேங்காயின் வாசனையோடு மிகவும் சுவையாக இருக்கும்.

Preparation Time

20 to 30 min

Serving People

2

தேங்காய் சாதம் (Coconut rice) செய்முறை

  1. முதலில் சூடாக நாம் எடுத்து வைத்துக் கொண்டுள்ள ஒரு கப் சாதத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 
  2. அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை கடலை பருப்பு, வேர்க்கடலை பருப்பு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. இறுதியாக அதில் தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
  4. இந்த கலவையில் நாம் ஆற வைத்து எடுத்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி விட வேண்டும்.
  5. இப்பொழுது சூடான, மணமான, சுவையான தேங்காய் சாதம் (Coconut rice) தயார்.

இதே போல் சுவையான கோவில் ஸ்டைல் புளி சாதம் செய்வது எப்படி என்றும் தெரிந்து கொள்ளலாமே!

நன்றி !!

Share

Leave a Reply