Robo Shankar controversial Speech

ஜாலியாக பேசுவதாக நினைத்து வம்பில் மாட்டிக் கொண்ட நடிகர். ஹன்சிகாவை தொட முடியவில்லை என மேடையில் வருத்தப்பட்டு பேசியதால் நேர்ந்த சர்ச்சை

ஹன்சிகா மோத்வானியை பற்றி நடிகர் ரோபோ சங்கர் வரவிருக்கும் பார்ட்னர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியது மிகவும் மோசமாக இருந்தது. படத்தில் ஒரு காட்சி என்பது ஹன்சிகாவை தொட அனுமதி இல்லை என அவர் கூறிவிட்டார். நடிகர் மட்டுமே என்னை தொட அனுமதி உண்டு என்று ஹன்சிகா ரோபோ சங்கரிடம் கூறியுள்ளார். ஆனால் ரோபோ சங்கர் ஒரு தடவையாவது உங்கள் காலை நான் தொட வேண்டும் அனுமதி கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லி ஹன்சிகாவை வற்புறுத்தவே ஹன்சிகா அதை மறுத்துள்ளார். ஒரு ஹீரோவாக இருப்பது தான் பாக்கியம் என்று ரோபோ சங்கர் அந்த விழாவில் கூறியுள்ளார்.

பார்ட்னர் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட செய்தியாளர் ஒருவர் ரோபோ சங்கரின் பேச்சை கேட்டு இந்த பேச்சு மிகவும் கொச்சையானது ஒரு பெண்ணை அவமதிப்பது போன்று உள்ளது என்று பகிரங்கமாக கூறினார்.

அந்தச் செய்தியாளர் பொது ஒழுக்கம் தெரியாதவர்கள் நடிக்க தகுதியற்றவர்கள் தயவு செய்து அது போன்றவர்களை மேடையில் அனுமதிக்காதீர்கள். சமூக வலைத்தளங்களில் நடிகைகளை கேவலப்படுத்துவார்கள் குறித்து நாம் புகார் கூறுகிறோம் இந்த மாதிரியான மனிதர்கள் தான் இது போன்ற மோசமான கருத்துகளுக்கு வழிவகைக்கிறார்கள். ரோபோ சங்கர் இந்த நிகழ்வின் போது மேடையில் இருந்து வெளியேறி விட்டார். மேடையில் இருந்த நடிகர் ஜான் விஜய் மைக்கை எடுத்து ரொபோசங்கர் மற்றும் ஒட்டுமொத்த அணி சார்பாக மன்னிப்பு கேட்கிறேன் ரோபோ சங்கர் படத்தில் வரும் காட்சியை தான் அப்படி விவரிக்க முயன்றால் ஆனால் அவர் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை இதுதான் பிரச்சனைக்கு காரணம் என்று ஜான் விஜய் அனைவரிடம் மன்னிப்பு கேட்டார்

ரோபோ சங்கர் பல மாதங்களாக மஞ்சள் காமாலை நோயினால் ஆபத்தான நிலையில் இருந்து இப்பொழுது தான் மீண்டு வந்துள்ளார்

நன்றி !!

Share

Leave a Reply