How to make vathal kuzhambu in hotel style

How to make vathal kuzhambu in hotel style. Home Cooking Show

வத்தல் குழம்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது..

எப்படி வைத்தாலும் அந்த சுவை உங்களுக்கு வரமாட்டேங்குதா? இனி அந்தக் கவலை வேண்டாம் ஹோட்டல் ஸ்டைலில் வத்தல் குழம்பு எப்படி செய்வது  என்று பார்ப்போம். ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் எல்லோரும் கேட்பார்கள் இதை எப்படி செய்தீர்கள் என்று?

            சைவ பிரியர்களின் ஒரு முக்கியமான குழம்பு வகைகளில் இந்த வத்தல் குழம்பு ஒன்று. அப்படிப்பட்ட இந்த வத்தல் குழம்பை எப்படி வைத்தாலும் ருசியாக வரவில்லையா கவலை வேண்டாம் வீடே மணக்கும் அளவிற்கு ருசியாகவும், மணமாகவும் எப்படி வைப்பது என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

          சுண்டவத்தல், காய்ந்த வத்தல் தேவையான அளவு 

          சிறிய வெங்காயம் 10 முதல் 20 

          தக்காளி இரண்டு 

          புளி ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவு 

          சுத்தமான நல்லெண்ணெய் தேவையான அளவு 

          குண்டு வர மிளகாய் தேவையான அளவு 

          கடுகு தாளிப்பதற்கு 

          வெந்தயம் தாளிப்பதற்கு 

           பூண்டு 10 முதல் 15 பல் 

           வெல்லம் தேவையான அளவு

           வத்தல் குழம்பு மிளகாய் பொடி தேவையான அளவு

           மஞ்சள் தூள் தேவையான அளவு

வத்தல் குழம்பு மிளகாய் பொடி அரைக்க தேவையான பொருட்கள்

            துவரம் பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் 

             பச்சைக் கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் 

             குண்டு மிளகாய் ஐந்து முதல் பத்து 

             காய்ந்த தனியா இரண்டு டேபிள் ஸ்பூன் 

             வெந்தயம் அரை டீஸ்பூன் 

             மிளகு ஒரு டீஸ்பூன் 

             சீரகம் ஒரு டீஸ்பூன் 

             அரிசி ஒரு டீஸ்பூன் 

             பெருங்காயம் தேவையான அளவு

வத்தல் குழம்பு மிளகாய் பொடி செய்முறை

              ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, தனியா, வரமிளகாய், சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து எடுத்து ஆற வைக்கவும். இப்பொழுது அந்த ஆறிய கலவையை நன்றாக பொடி செய்து கொள்ளவும். இப்போது நமக்கு ரகசிய மிளகாய் பொடி தயார்.

வத்தல் குழம்பு செய்ய தேவையான பாத்திரங்கள்

          1 கடாய் 

          1 கரண்டி 

          1 பாத்திரம்

வத்தல் குழம்பு செய்முறை 

           ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேறியதும் வெந்தயம், கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் போட்டு வதக்கவும். பிறகு சிறிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நல்ல மசிய வதக்கவும். வதக்கியவுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும். இறுதியாக புளியை நன்றாக கரைத்து புளித்தண்ணீரை அந்த தாளிப்பில் ஊத்தவும். இப்பொழுது குழம்பு நன்றாக கொதித்த உடன் நாம் அரைத்த மிளகாய் பொடியை அதில் சேர்க்கவும். இறுதியாக குழம்பு கொதித்த உடன் வெல்லம் சேர்த்து இறக்கவும். 

           இப்போது ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் நல்லெண்ணெய் ஊற்றி பூண்டு, சுண்ட வத்தல், மிளகு தக்காளி வத்தல் ஆகியவற்ற சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கி நாம் செய்து வைத்துள்ள அந்த குழம்பில் ஊற்றவும். சரியாக குழம்பை ஒரு கொதி விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.

நன்றி !!

Share

Leave a Reply