Mutton-soup recipe

ஆட்டுக்கால் – Mutton leg Soup Recipe and Benefits

ஆட்டுக்கால் சூப்புல இவ்வளவு நன்மைகள் இருக்கா? மூட்டு வலி முதுகு வலி மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளால் அவதிப்படுறவங்களுக்கு ஆட்டுக்கால் சூப் மிகவும் நல்லது என்று பலர் சொல்லி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க கண்டிப்பா நம்ம பாட்டிங்க எல்லாருமே சொல்லி இருப்பாங்க ஆமாங்க அது உண்மைதான்.

இந்த பிரச்சனைகளுக்கு மட்டும் தான் ஆட்டுக்கால் சூப் நல்ல தான் கேட்டீங்கன்னா கண்டிப்பா இல்ல இன்னும் சொல்லப்போனால் கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வர்கள் அதிக நாள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறவர்களுக்கு உடல் மெலிந்து இருப்பவர்கள் கூட ஆட்டுக்கால் சூப்பை அருந்தி வந்தால் உடல் தோற்றம் பெறுவதற்கு மிகச்சிறந்த வெளியாகும்.

ஆட்டுக்கால் சூப்பை நாம் தினமும் சாப்பிட்டு வரும்போது நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதில் அதிகப்படியான கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து விட்டமின் ஏ மற்றும் கே லிங்க் என ஏராளமான விட்டமின் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது இப்படி அதிகம் நன்மைகள் தரும் ஆட்டுக்கால் சூப்பை எப்படி செய்வது என்பதை நாம் பார்க்கலாம்

ஆட்டுக்கால் சூப் செய்ய தேவையான பொருள்கள்

ஆட்டுக்கால் – 2
கொத்தமல்லி – 2 ஸ்பூன்
சீரகம்  – 2 ஸ்பூன்
மிளகு  – 2 ஸ்பூன்
பட்டை கிராம்பு சோம்பு – சிறிதளவு
பூண்டு –  10 பல்
இஞ்சி – சின்ன துண்டு
கருவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
வரமிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 2
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

மேலே உள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்

ஆட்டுக்காலை கழுவி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விடவும் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். நன்றாக வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு கொதிக்க விட வேண்டும். தாளிப்பதற்காக சின்ன வெங்காயம் சிறிதளவு பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாத்திரம் சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு போட்ட பின் அறுத்து வைத்த சின்ன வெங்காயம் கொத்தமல்லி தழை மற்றும் தக்காளி இவைகளை போட்டு தாளித்து இறக்கி விடவும். தாளித்த பொருளை ஆட்டுக்கால் சூப் போட்டால் போதும். 

இப்பொழுது மிகவும் சுவையான ஆட்டுக்கால் சூப் ரெடி

நன்றி !!

Share

Leave a Reply