drumstick tree leaves Soup

Murungai Keerai Soup Recipe and health Benefits

Murungai keerai soup – இயற்கையாகவே அதிக மருத்துவ குணம் கொண்ட முருங்கைக் கீரையில் உள்ள நன்மைகளை நாம் தெரிந்து கொள்ளலாம். முருங்கை இலையில் புரதம் அதிகம் நிறைந்துள்ளது. நம் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளது.

ஆஸ்துமா மார்புச்சளி சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது முருங்கை இலை சூப்பு மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும். தலைவலி இடுப்பு வலி உடல் வலி பித்தம் அனைத்தையும் குணப்படுத்தும். அது மட்டுமா கர்ப்பப்பையை வலுப்படுத்தும் தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் முருங்கை இலை சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்த தடவ முகப்பருக்களும் கூட மறையும். இவ்வளவு நன்மைகளை தரும் முருங்கைக் கீரையில் நாம் ஒரு சூப் செய்தால் எப்படி இருக்கும்? வாங்கள் அந்த சூப்பின் ரெசிபி என்னவென்று ரகசியத்தை உங்களுக்கு சொல்கிறேன்.

Murungai keerai soup செய்ய தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – 1 கட்டு
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 50 கிராம்
மஞ்சத்தூள் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
பூண்டு – 5 பல்

பாசிப்பருப்பு – 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை

ஒரு கட்டு Murungai keerai யை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்பு மிக்ஸி ஜாரில் பாசிப்பருப்பு பூண்டு சீரகம், மிளகு, காரத்திற்கு ஏற்றவாறு மிளகு சேர்த்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் தக்காளி கீரையில் பாதி பகுதியை இவை எல்லாம் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் தாளிப்பதற்காக எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு சின்ன வெங்காயம் சிறிதளவு போட்டு வதக்கவும் பின்பு கீரையை போட்டு வதக்கவும் கீரையை நன்றாக வதக்கிய பின் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு மஞ்சத்தூள் உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொண்டு நன்றாக கொதிக்க வைக்க விடவும். இப்பொழுது சுவையான முருங்கைக்கீரை சூப் ரெடி

பெண்களுக்கு அதிகப்படியான முடி கொட்டுதல் பிரச்சனை இருந்தால் வாரத்துக்கு இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை தொடர்ந்து அருந்தி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.

நன்றி !!

Share

Leave a Reply