Payanali best Mixed vegetable sambar recipe for breakfast

Try this Marriage style best mixed vegetables sambar recipe for breakfast

நம் தினமும் பயன்படுத்தும் முக்கியமான உணவு பதார்த்தங்களில் ஒன்று சாம்பார் ஆகும்.. சாதம், தோசை, இட்லி என அனைத்திற்கும் பொருந்துவது இந்த சாம்பார் தான் அப்படிப்பட்ட இந்த சாம்பார் எவ்வளவு ட்ரை பண்ணாலும் சுவையாகவும், மணமாகவும் வரமாட்டேங்குதா..? ஒரு முறை இப்படி வைத்துப் பாருங்கள் எப்படி என்று அனைவரும் கேட்பார்கள்.

தேவையான பொருட்கள்

        துவரம் பருப்பு 100 கிராம் 

         புளி எலுமிச்சை அளவு 

         வறுத்து அரைத்த மிளகாய் பொடி  

         சிறிய வெங்காயம் 15 முதல் 20 வரை   

         தக்காளி இரண்டு 

         உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் 300முதல் 400 கிராம் 

         உப்பு தேவையான அளவு 

         கடலை எண்ணெய் தேவையான அளவு

         முழு தனியா தேவையான அளவு 

         தேங்காய் துருவல் சிறிதளவு 

         கொத்தமல்லி தழை தேவையான அளவு  

         விளக்கு எண்ணெய் தேவையான அளவு பருப்பு வேக வைக்க 

         மஞ்சள் தூள் தேவையான அளவு

தாளிப்புக்கு தேவையான பொருட்கள்

        குண்டு மிளகாய்  

         கருவேப்பிலை  

         சீரகம் 

         வெந்தயம்  

         பெருங்காயத்தூள் தேவையான அளவு

வறுத்து அரைத்த மிளகாய் பொடி செய்முறை

ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் முழு தனியா மற்றும் 5முதல் 6 குண்டு மிளகாய் மிதமான சூட்டில் வறுக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகு,  அரை டீஸ்பூன் வெந்தயம்,  கருவேப்பிலை ஒரு கொத்து சிறிது பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும். பிறகு அதை ஆற வைத்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது மணமான சாம்பார் பொடி தயார்.

செய்முறை நேரம்

          25 முதல் 35 நிமிடம்

தேவையான பாத்திரம்

          ஒரு குக்கர்

          ஒரு கரண்டி 

          ஒரு தாளிப்பு கரண்டி

சாம்பார் செய்முறை

100 கிராம் துவரம் பருப்பை அரை மணி நேரத்திற்கு முன்பே ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு குக்கரில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி நன்கு வேகவைத்து கொள்ள வேண்டும். பிறகு வேக வைத்த பருப்பை மத்து வைத்து நன்கு கடைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

           இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் சிறிது கடலை எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை குண்டு மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்பு சாம்பார் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும் நன்கு வதங்கியதும் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை அதில் போட்டு வதக்கவும்.

          காய்கறிகள் வதங்கியதும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த சாம்பார் பொடி போட்டு கிளறி விடவும். பின்பு காய்கறிகள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். காய்கறிகள் வெந்ததும் புளிக்கரைசலை ஊற்றவும். சாம்பார் கொதித்த உடன் கடைந்த பருப்பை ஊற்றி நன்கு கிளறவும் இறுதியாக கொத்தமல்லி தலையும் தேங்காய் துருவலையும் போட்டு இறக்கவும்.

          இப்பொழுது தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை குண்டு மிளகாய்,  சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளித்து அந்த சாம்பாரில் எடுத்து ஊற்றவும். இப்போது வீடே மணக்கும் வறுத்தரைத்த சாம்பார் ரெடி.

நன்றி !!

Share

Leave a Reply