pirandai chutney

உங்களுக்கு பசியின்மையா? இந்த துவையலை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

     ஒரு சிலருக்கு பசி எடுக்காமல் ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள். இவர்கள் செரிமான பிரச்சனையை சந்திக்கிறார்கள். செரிமான பிரச்சனையின் காரணமாக வயிறானது சற்று மந்தமாகவும், வீக்கமாகவும், வாயுக்கள் நிரம்பியிருக்கும். இந்த சமயத்தில் பசி உணர்வு எடுக்காது. எனவே இந்த இரண்டு சட்னியை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொண்டால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி  பசி அதிகமாக எடுக்கும். இந்த சட்னியை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

இஞ்சி துவையல்

inji thuvayal

     இந்த இஞ்சியில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது. இஞ்சியை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனை, குமட்டல், கொழுப்புகளின் அளவை குறைத்தல், அடிக்கடி ஏற்படும் தலைவலி, மூளையின் செயல்பாட்டை அதிகரித்தல், மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் போன்ற எண்ணற்ற நன்மைகளை தருகிறது.

இஞ்சி துவையல் செய்ய தேவையான பொருட்கள்

  • காய்ந்த மிளகாய் 4 முதல் 5 
  •  பச்சைக் கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் 
  •  உளுத்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
  •  காய்ந்த கொத்தமல்லி விதை அரை டேபிள் ஸ்பூன் 
  •  இஞ்சி 50 கிராம் 
  •  பூண்டு 4 பல் 
  •  புளி சிறிதளவு 
  •  உப்பு தேவையான அளவு 
  •  எண்ணெய் தேவையான அளவு 
  •  கடுகு சிறிதளவு 
  •  கருவேப்பிலை ஒரு கொத்து

இஞ்சி துவையல் செய்முறை

      ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் சூடு ஏறியதும் அதில் சிறிதளவு ஆயில் ஊற்றி அதில் காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே எண்ணையில் ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைக் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை டேபிள் ஸ்பூன் காய்ந்த கொத்தமல்லி விதை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு அதில் 4 பல் பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய 50 கிராம் இஞ்சி, உப்பு தேவையான அளவு, புளி சிறிதளவு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.

     இறுதியாக சூடு ஆறியதும் இதை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தாளிப்பு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சிறிதளவு உளுந்தம் பருப்பு, பச்சைக் கடலைப்பருப்பு, கடுகு, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து அந்த துவையலில் எடுத்துக் கொட்டவும். இப்பொழுது சுவையான மற்றும் அதிக மருத்துவ குணங்கள் வாய்ந்த இஞ்சித் துவையல் தயார்.

பிரண்டைத் துவையல்

pirandai thuvayal pirandai chutney

      ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இதுவும் முக்கியமான ஒரு பொருளாகும். இந்தப் பிரண்டையானது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கை சீராக்குகிறது. வாயு பிடிப்பு, ஜீரணக் கோளாறு, பசியின்மை, வாயு கோளாறு, பல் நோய்கள், ஆஸ்துமா, கை கால் வலிகள் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

பிரண்டை துவையல் செய்வதற்கு தேவையான பொருட்கள்

  • பிரண்டை ஒரு கைப்பிடி
  • பச்சைக் கடலை பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த கொத்தமல்லி விதை அரை டேபிள் ஸ்பூன் 
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு 
  • புளி சிறிதளவு
  • பூண்டு 4 பல்
  • சிறிய வெங்காயம் ஆறு முதல் ஏழு பல்
  • தக்காளி சிறியது ஒன்று 
  • காய்ந்த மிளகாய் 4 முதல் 5  
  • கருவேப்பிலை ஒரு கொத்து 
  • கடுகு சிறிதளவு
  • தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

பிரண்டை துவையல் செய்முறை

        முதலில் பிரண்டையை தோல் மற்றும் நார் ஆகியவற்றை சீவி சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரண்டையை நன்றாக வேகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் 5, ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை கடலைப்பருப்பு ,ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு மற்றும் காய்ந்த கொத்தமல்லி விதை அரை டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

       பின்பு அதில் சிறிய வெங்காயம், பூண்டு, தக்காளி மற்றும் புளி சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இறுதியாக தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து வதக்கவும். அனைத்தையும் நன்றாக ஆற வைத்து அதை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தாளிப்பு கடையில் சிறிதளவு எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சைக் கடலைப்பருப்பு, கருவேப்பிலை ஒரு கொத்து ஆகியவற்றை சேர்த்து தாளித்து அந்த துவையலில் சேர்க்கவும். இப்பொழுது சுவையான பிரண்டை துவையல் தயார்.

நன்றி !!

Share

Leave a Reply