dhaba style paneer masala

How to make tasty dhaba style paneer masala?

சுவையான தாபா ஸ்டைல் ​​பன்னீர் மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

        தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா என்பது நம் இந்திய உணவு வகை சார்ந்ததாகும். நாம் ரோடு ஓரங்களில் உள்ள தாபாவில் பன்னீர் மசாலா சாப்பிட்டு இருப்போம். அது மிகவும் சுவையாக இருக்கும். அதற்காக இனி அடிக்கடி நாம் தாபா செல்ல அவசியம் இல்லை.

       இனி வீட்டிலேயே தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா அதே சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பன்னீர் 200 கிராம் 

தக்காளி பெரியது இரண்டு 

பெரிய வெங்காயம் இரண்டு 

எண்ணெய் அல்லது நெய் 

பச்சை மிளகாய் 3 அல்லது 4 

இஞ்சி பூண்டு விழுது 

பிரியாணி இலை சிறியது இரண்டு 

கிராம்பு இரண்டு 

ஏலக்காய் மூன்று

1 டேபிள் ஸ்பூன் வர கொத்தமல்லி

3 டீஸ்பூன் சீரகம் 

2 டீஸ்பூன் மிளகு 

2 டீஸ்பூன் சோம்பு 

1 துண்டு பட்டை

1 ஸ்பூன் மிளகாய் தூள்

1 ஸ்பூன் கரம் மசாலா தூள்

அரை ஸ்பூன் மிளகு தூள் 

சிறிதளவு எலுமிச்சை சாறு

உப்பு தேவையான அளவு 

அரை கப் தயிர் 

1 ஸ்பூன் காய்ந்த கஸ்தூரி மேத்தி

கொத்தமல்லி இலை சிறிதளவு

       முதலில் நாம் தாபா மசாலாவிற்கு தேவையான பன்னீரை ரெடி பண்ணி எடுத்து வைத்துக் கொள்வோம். முதலில் ஒரு பவுலில் துண்டு துண்டாக நறுக்கி வைத்துள்ள 200 கிராம் பன்னீரை போட்டு அதில் சிறிதளவு உப்பு, 1 ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மிளகு தூள், 1 ஸ்பூன் கரம் மசாலா தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற விட வேண்டும். 

      பிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து நாம் ஊற வைத்துள்ள பன்னீரை சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்து ஃபிரை பண்ணி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது தாபா மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தாபா மசாலா செய்முறை

paneer masala

        ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அது சூடு ஏறியதும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வரக்கொத்தமல்லி, 2 டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் மிளகு, 2 கிராம்பு, 3 ஏலக்காய், 2 டீஸ்பூன் சோம்பு, ஒரு துண்டு பட்டை ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த கலவையை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான, மணமான தாபா மசாலா ரெடி.

தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்முறை

         ஒரு கடாயை எடுத்து சூடு ஏறியதும் அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி இரண்டு பிரியாணி இலை, ஒரு டீஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கி வைத்த இரண்டு பெரிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்கு வதங்கும் வரை விட வேண்டும். வெங்காயம் வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விட வேண்டும். 

        அந்த இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனதும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள இரண்டு பெரிய தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்க வேண்டும். இப்பொழுது பச்சை மிளகாய் 3 அல்லது 4 நீளவாக்கில் கீரி போடவும்.

        பிறகு அதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள தாபா மசாலா இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். உப்பு தேவையான அளவு சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.  பிறகு அரை கப் தயிர் சேர்க்க வேண்டும்.

       இறுதியாக நாம் தனியாக ஃப்ரை செய்த பன்னீரை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் காய்ந்த கஸ்தூரி மேத்தியே பொடி செய்து தூவி விட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம். 

        இப்பொழுது தாபா சுவை மாறாத சுவையான பன்னீர் மசாலா நம் வீட்டிலேயே தயார்.

        இது சப்பாத்தி, புல்கா, நாண் போன்றவற்றிற்கு சிறந்த சைடு டிஷ்ஷாக இருக்கும்.

        இதுபோன்று நிறைய குறிப்புகளை தெரிந்து கொள்ள எங்களது பக்கத்தை பின் தொடரவும்.

நன்றி !!

Share

Leave a Reply