6 types tomato chutney

Try these six types of tomato chutney that are delicious and fragrant.

Table of Contents

ஒரே மாதிரி தக்காளி சட்னி அரைத்து போர் அடித்து விட்டதா? இனி சுவையான, மணமான இந்த ஆறு வகையான தக்காளி சட்னியை ட்ரை பண்ணி பாருங்க.

        சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான ஒரு சட்னி இந்த தக்காளி சட்னி ஆக விளங்குகிறது. ஒரே மாதிரியான சட்னி அரைத்து போர் அடித்து விட்டதா? இனி அந்த கவலை வேண்டாம் இதோ உங்களுக்காக ஆறு வகையான தக்காளி சட்னி எப்படி அரைப்பது என்று பார்ப்போம்.

1.ரெஸ்டாரன்ட் ஸ்டைல் அல்லது சவுத் இந்தியன் ஸ்டைல் தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்

தக்காளி 3 முதல் 4 

சின்ன வெங்காயம் 10 முதல் 15 

பூண்டு 3 முதல் 4 பல்

காய்ந்த மிளகாய் 4 முதல் 5

உப்பு தேவையான அளவு

கொத்தமல்லி இலை சிறிதளவு

சமையல் எண்ணெய் சிறிதளவு

தாளிப்புக்கு சிறிது கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு

ஒரு கொத்து கறிவேப்பிலை

செய்முறை

          ஒரு கடாய் எடுத்துக் கொண்டு அது சூடு ஏறியதும் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் 4 முதல் 5 காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் 10 முதல் 15 சிறிய வெங்காயம், 4 தக்காளி மற்றும் 4 பல் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதங்கியவுடன் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது கொத்தமல்லி இலை ஆகியவற்றைப் போட்டு சிறிது வதக்கியவுடன் இறக்கவும். பின்பு அதை ஆற வைத்து இந்தக் கலவையில் வறுத்து வைத்த வர மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இறுதியாக தாளிப்புக்கு ஒரு தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சிறிது உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு, கடுகு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு அந்த சட்னியில் எடுத்து கொட்டவும். இப்பொழுது சுவையான ஹோட்டல் ஸ்டைல் அல்லது சவுத் இந்தியன் ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.

2.ரோடு சைடு தக்காளி அல்லது ரா டொமட்டோ சட்னி  சட்னி

         இது மிகவும் எளிமையான சட்னி ஆகும். ஆனால் சுவை மிகவும் அதிகம்.

தேவையான பொருட்கள்

தக்காளி 3

காய்ந்த மிளகாய் 4 முதல் 5

பூண்டு 3 முதல் 4 பல்

உப்பு தேவையான அளவு 

எண்ணெய் தேவையான அளவு

தாளிப்புக்கு சிறிது கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு

ஒரு கொத்து கறிவேப்பிலை

செய்முறை

         ஒரு மிக்ஸி ஜாரில் 3 தக்காளி பழத்தை நறுக்கி போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அதில் 3 முதல் 4 பல் பூண்டு, 4 முதல் 5 வரமிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு தாளிப்பு கரண்டி எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு ஏறியதும் அதில் கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து கடுகு பொரிந்ததும் அதில் ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு தாளித்து அந்த சட்னி கலவையில் சேர்க்கவும். இது மிகவும் சுவையாகவும், மணமாகவும் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சட்னி ஆகும்.

tomato chutney

3.சுட்ட தக்காளி சட்னி அல்லது ரோஸ்டட் டொமேட்டோ சட்னி

தேவையான பொருட்கள்

தக்காளி 3 முதல் 4 

பெரிய வெங்காயம் 2 

பச்சை மிளகாய் 3 முதல் 4

உப்பு தேவையான அளவு 

பூண்டு 3 முதல் 4 பல் 

கொத்தமல்லி இலை சிறிதளவு

செய்முறை

          அடுப்பில் ஒரு கிரில் ஸ்டாண்டை வைத்துக் கொள்ளவும். சூடு ஏறியதும் நாம் எடுத்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றில் சிறிது எண்ணெய் தடவி அந்த கிரில் ஸ்டாண்டில் வைத்து நன்றாக வேகும் வரை சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அது நன்றாக வெந்ததும் எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும் அதன் தோலை உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ள வேண்டும் பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக வாசத்திற்கு கொத்தமல்லி இலை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மிகவும் சுவையான சுட்ட தக்காளி சட்னி தயார்.

4.ஆந்திரா ஸ்டைல் தக்காளி(டொமேட்டோ) சட்னி

தேவையான பொருட்கள்

தக்காளி 3 முதல் 4

பூண்டு 3 முதல் 4 பல் 

பச்சை மிளகாய் 6 முதல் 7

உப்பு தேவையான அளவு 

சீரகம் 2 ஸ்பூன் 

வரக்கொத்தமல்லி 2 டீஸ்பூன் 

கொத்தமல்லி இலை சிறிதளவு

செய்முறை

          ஒரு கடாயை எடுத்து அது சூடு ஏறியதும் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறியதும் அதில் பச்சை மிளகாய், வரக்கொத்தமல்லி 2 டீஸ்பூன் மற்றும் சீரகம் 2 டீஸ்பூன், பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்க வேண்டும். இறுதியாக உப்பு தேவையான அளவு மற்றும் சிறிது கொத்தமல்லி இலை தூவி வதக்கியவுடன் இறக்கவும். இந்த கலவையில் உள்ள சூடு ஆறிய பிறகு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான காரசாரமான ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.

5.அரேபியன் ஸ்டைல் தக்காளி(டொமேட்டோ) மந்தி சட்னி

தேவையான பொருட்கள்

தக்காளி 3 முதல் 4

பெரிய வெங்காயம் 2

பூண்டு 3 முதல் 4 பல் 

பச்சை மிளகாய் 4 முதல் 5

கொத்தமல்லி இலை சிறிதளவு 

உப்பு தேவையான அளவு 

எலுமிச்சை சாறு சிறிதளவு

செய்முறை

          ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு ஆகியவற்றை போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும். முக்கிய குறிப்பு இந்த கலவையை நைசாக அரைக்க கூடாது ஏனென்றால் அந்த சுவை வராது எனவே ஒன்று இரண்டாக கொரகொரவென்று அரைக்கவும்.

6.ஸ்ரீலங்கன் ஸ்டைல் ஸ்வீட் தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்

தக்காளி 4 

பெரிய வெங்காயம் 2 

உப்பு தேவையான அளவு 

மிளகாய் தூள் தேவையான அளவு 

தாளிப்பிற்கு எண்ணெய் தேவையான அளவு 

சர்க்கரை ஒரு ஸ்பூன் 

எலுமிச்சை சாறு தேவையான அளவு 

சிறிதளவு பட்டை மற்றும் கிராம்பு பொடி சிறிதளவு

செய்முறை

          முதலில் 4 தக்காளி பழத்தை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாய் எடுத்து அந்த கடாய் சூடு ஏறியதும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் வேகவைத்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை போட்டு மசியும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கொள்ள வேண்டும். பச்சை வாசனை போன உடன் பட்டை மற்றும் கிராம்பு பொடி சிறிதளவு சேர்க்க வேண்டும். இறுதியாக சர்க்கரை ஒரு ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து நன்றாக ஒரு சட்னி பதத்திற்கு வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஸ்ரீலங்கன் ஸ்டைல் டொமேட்டோ ஸ்வீட் சட்னி தயார்.

நன்றி !!

Share

Leave a Reply