delicious marriage style kesari sweet recipe at home now in payanali

Delicious marriage style rava kesari sweet in just 20 minutes at home

கல்யாண வீட்டு கேசரி (Kesari) சாப்பிடணும்னு ஆசையா இருக்கா?

எவ்வளவுதான் ட்ரை பண்ணினாலும் அந்த சுவை வர மாட்டேங்குதா? இந்த முறையை பயன்படுத்துங்கள் யார் வேண்டுமானாலும் கல்யாண கேசரி செய்யலாம்

         ரவா கேசரி மிகவும் பழமையான இனிப்பு வகையை சேர்ந்தது. எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் முதலில் அனைவரின் நினைவிற்கு வருவது இந்த கேசரி தான்.கேசரி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதுவும் குழந்தைகளுக்கு கேசரி என்றாலே ஆனந்தம் தான்.

         இனிப்பு என்றாலே அனைவரின் எண்ணத்திற்கு முதலில் தோன்றுவது இந்த கேசரி தான்… இந்த கேசரி செய்வதற்கு சில பக்குவங்கள் உள்ளன அந்த பக்குவத்தை சரியாக பயன்படுத்தினால் யார் வேண்டுமானாலும் இந்தக் கல்யாண வீட்டு கேசரியை செய்யலாம் வாருங்கள் எப்படி என்று பார்க்கலாம். இந்த கேசரியை ரவா கேசரி, இர்மிக் ஹெல்வாசி, ரவை அல்வா என்றும் அழைப்பார்கள்.

          இந்த கேசரியில் மிகவும் முக்கியமானது பொருட்களின் அளவும் ரவையை வறுக்கும் பக்குவம் தான் முக்கியம்

தேவையான பொருட்கள் :

        வெள்ளை ரவை 200 கிராம் 

         சர்க்கரை 200 கிராம் 

         நெய் 50 கிராம்

         சன் ஃபிளவர் ஆயில் 100 கிராம் 

         முந்திரி திராட்சை தேவைக்கேற்ப

         ஏலக்காய் தேவைக்கேற்ப 

தேவையான பாத்திரம் :

         1 கடாய் 

         1 கரண்டி 

         பரிமாற 1 பவுல்

செய்முறை நேரம் :

         20 நிமிடம்

செய்முறை விளக்கம் :

 முதலில் கடாயை அடுப்பில் வைத்து மிதமாக சூடு படுத்தவும் பிறகு அதில் நெய் ஊற்றி 200 கிராம் வெள்ளை ரவையை எடுத்து அதில் போட்டு மிதமான சூட்டிலே வறுக்கவும். பிறகு அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

        அதே கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை இரண்டையும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு ஸ்பூன் அளவு சர்க்கரை எடுத்துக்கொண்டு அதில் ஏலக்காயை போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும். இப்பொழுது அந்த கடாயில் எந்த கப்பில் ரவை எடுத்தோமோ அதே கப்பில் மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றவும் அதில் சிறிது ஃபுட் கலரை போடவும் நன்றாக கொதித்த பிறகு இப்பொழுது ரவையை அதில் கொட்டவும் கைவிடாமல் களறிக் கொண்டிருக்கவும்.

          பின்பு ரவை நன்றாக வெந்ததும் அதில் சர்க்கரையை கொட்டி கிளறி விடவும் இறுதியாக சன் ஃபிளவர் ஆயிலை ஊற்றி கடாயில் ஒட்டாதவாறு கிளறி கொண்டே இருக்கவும். பிறகு வறுத்து வைத்த முந்திரி திராட்சை மற்றும் அரைத்த ஏலக்காய் பொடியை அதில் கொட்டி கிளறவும். இப்பொழுது சூடான கல்யாண வீட்டு கேசரி தயார்.

இதே போல் வாழைப்பூ குழம்பு மற்றும் வாழைப்பூ சட்னி செய்வது எப்படி என்பதை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Share

Leave a Reply