Chicken Biryani recipe - south Indian food yummy taste. payanali

Tasty Chicken Biriyani recipe – Must try South Indian delight Yummy tasty dish

பிரியாணி பிடிக்காதவங்க யாராவது இருக்காங்களா உலகத்திலேயே அதிகப்படியான மக்கள் விரும்புவது பிரியாணி மட்டும்தான். இப்படி எல்லாருக்கும் பிடிச்ச இந்த பிரியாணியில நம்ம இப்போ சிக்கன் பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். நிஜமாவே இது பாய் கடை பிரியாணி விட ரொம்பவே டேஸ்டா இருக்கும் நான் சொல்றத அப்படியே வந்து செஞ்சு பாருங்க

Chicken Biryani recipe செய்வதற்கு தேவையான பொருட்கள்

சிக்கன் – 1kg
சீரக சம்பா அரிசி – 1kg
இஞ்சி – 150g
பூண்டு – 150g
பெரிய வெங்காயம் – 2nos
சின்ன வெங்காயம் – 100kg
தக்காளி – 3nos
பச்சை மிளகாய் – 5nos
மிளகாய் தூள் – 50g
கொத்தமல்லி தழை – 50g
புதினா – 50g
பட்டை – 5-10 nos
கிராம்பு – 5-10 nos
ஏலக்காய் – 3
நெய் – 5nos
சமையல் எண்ணெய் – 50ml
தயிர் – 1packet
எலுமிச்சை பழம் – 1

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய்யும் ஊற்றி சூடான பிறகு பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் பட்டை கிராம்பு, ஏலக்காய் பிரியாணி இழை இதையெல்லாம் போட்டு நன்றாக வதக்கவும்.

இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிறிது கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய் இரண்டு இஞ்சி பூண்டு டேஸ்டே ரெடி செய்யவும். ரெடி செய்த இஞ்சி பூண்டு பேஸ்ட் பாத்திரத்தில் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதைக்கிவிட்டு நறுக்கி வைத்த தக்காளியை போடவும். நன்றாக வதக்கிய பின் ஒரு கிலோ சிக்கனை உள்ளே போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். சிக்கனை போட்ட உடனே மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு தயிர் ஒரு கப் எலுமிச்சை பழச்சாறு பாதி அளவு எடுத்துக்கொண்டு அதையும் சேர்க்கவும்.

பின்பு ஒரு கிலோ சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி அதனுடன் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

பத்து நிமிடம் ஆவியில் நன்றாக வேக விடவும் இப்பொழுது சுவையான சிக்கன் பிரியாணி ரெடி

நன்றி !!

Share

Leave a Reply