Table of Contents
வெள்ளைப்படுதல் (white discharge) இதை லுகோரியா என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பருவம் அடைந்தது முதல் வயது முதிர்வு வரை உள்ள பெண்கள் சந்திக்கும் ஒரு சாதாரணமான நிகழ்வு ஆகும். இது ஒரு வகை யோனி வெளியேற்றமாகும். பொதுவாக இந்த வெள்ளைப்படுதல் ஆனது வெள்ளை அல்லது பால் போன்ற நிறத்தில் காணப்படும் மற்றும் இதன் நிலைத்தன்மையிலும் மாறுபடும்.
இந்த வெள்ளைப்படுதல் ஆனது கருப்பை வாய் மற்றும் பிறப்பு உறுப்பினால் உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கியமாக இவை யோனி (Vaginal) ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது கருப்பை வாய் மற்றும் பிறப்புறுப்பில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்றுவதன் மூலம் யோனியை சுத்தம் செய்கிறது. மேலும் யோனி திசுக்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. வெள்ளைப்படுதல் ஆனது பிறப்புறுப்பின் PH அமிலத்தன்மையை பராமரிக்கிறது.
வெள்ளைப்படுதலுக்கான (white discharge) காரணங்கள்
மாதவிடாய் சுழற்சி
ஒரு பெண்ணின் மாதவிடாய்க்கு முந்தைய மூன்று நாட்கள் மற்றும் மாதவிடாய் முடிந்தவுடன் பிறகு மூன்று நாட்கள் இந்த வெள்ளைப்படுதல் ஆனது ஏற்படுகிறது. இது ஒரு சாதாரண நிகழ்வாகும்.
கர்ப்ப காலம்
ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் அவளது உடல் அமைப்பில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதுவே கர்ப்ப காலத்தில் அதிக அளவு வெள்ளைப்படுதல் ஏற்பட ஒரு காரணமாகும். இவை வழக்கத்தை விட தடிமனாகவும், அதிகமாகவும் இருக்கும்.
பாலியல் தூண்டுதல்
இதுவும் வெள்ளைப்படுதலுக்கு ஒரு முக்கியமான காரணமாகும். பாலியல் தூண்டுதலின் காரணமாக வெள்ளைப்படுதலின் அளவு அதிகமாக இருக்கும். இவை உடலுறவு செயல்பாடுகளுக்கு உடலை தயார் படுத்துவதற்கான ஒரு இயற்கையான நிகழ்வாகும்.
மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றம்
பொதுவாக இவை அதிக அளவு மன அழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் பல வகையான ஹார்மோன் மாற்றங்களின் காரணமாகவும் இந்த வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது.
நோய் தொற்றுகள்
அனைவரும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இதுதான். வெள்ளைப்படுதல் ஒரு இயற்கையான நிகழ்வு தான் ஆனால் நிறத்தாலும் மற்றும் அதன் நிலைத்தன்மையும் கொண்டு மாறுபடும். மேற்கண்ட அனைத்து காரணங்களை தவிர மற்ற எல்லா நாட்களும் வெள்ளைப்படுதல் ஏற்பட்டாலோ மற்றும் அதனால் அதிக அளவு துர்நாற்றம் ஏற்பட்டாலோ கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. ஏனென்றால் இவை தொற்று நோய்க்கான ஒரு அறிகுறி ஆகும்.
வெள்ளை வெளியேற்றத்தின் வண்ண குறியீடு அல்லது வகைகள்
இந்த வெள்ளைப்படுதல் ஆனது அதன் நிறம், நிலைத்தன்மை மற்றும் அதன் அளவு ஆகியவற்றை கொண்டு மாறுபடும். எனவே வெவ்வேறு வகையான வெள்ளை வெளியேற்றம் வெவ்வேறு விஷயத்தை குறிக்கும். அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Clear and stretchy (egg white-like)
இந்த வகையான வெள்ளைப்படுதல் பெரும்பாலும் அண்டவிடுப்புடன் (ovulation) தொடர்புடையது. பொதுவாக இவை மெல்லியதாகவும், வழுக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் இந்த வெள்ளைப்படுதலை கவனிக்கலாம்.
Thick and milky
இயல்பான மற்றும் ஆரோக்கியமான வெள்ளை வெளியேற்றம் தடிமனாகவும், பால் போன்ற அமைப்பிலும் இருக்கும். இந்த வகையான வெளியேற்றம் மாதவிடாய் சுழற்சி முழுவதும் பொதுவாக இருக்கும். எனவே இவை எந்த ஒரு பிரச்சனையையும் குறிக்காது.
Cloudy or yellowish
சிறிது மேகம் மூட்டம் அல்லது மஞ்சள் நிறத்தில் இந்த வெள்ளை வெளியேற்றம் இருந்தால் அவை ஒரு சாதாரண நிகழ்வாகும். குறிப்பாக மாதவிடாய்க்கு முன் அல்லது பின் இந்த வகையான வெள்ளை வெளியேற்றும் இருக்கும். இருப்பினும் மஞ்சள் நிறம் அதிகமாக இருந்தாலும் அல்லது அதிக அளவு துர்நாற்றம் இருந்தாலும் இதைத் தொற்று நோய்க்கான ஒரு அறிகுறியாக கருதப்படுகிறது. எனவே மருத்துவரை அணுகுவது நல்லது.
பாக்டீரியல் வஜினோசிஸ் அல்லது பாலியல் ரீதியாக பரவும் தொற்று நோய்க்கான அறிகுறி ஆகும்.
Cottage cheese-like
தடிமனான, பருமனான அல்லது பாலாடை கட்டி போன்றும், அரிப்பு மற்றும் எரிச்சலும் இருந்தால் இவை ஈஸ்ட் தொற்றுக்கான ஒரு அறிகுறியாக இருக்கும். இது பொதுவாக கேண்டிடா பூஞ்சையின் அடிப்படையான வளர்ச்சியால் ஏற்படுகிறது.
Watery
பொதுவாக மாதவிடாய் சுழற்சியின் போது சில நேரங்களில் நீர் வெளியேற்றம் இயல்பானது. இருப்பினும் அது அதிகமாகி விட்டால் அல்லது மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து இருந்தால் அது ஹார்மோன் மாற்றங்கள் அல்லது தொற்று நோய்க்கான அறிகுறி ஆகும்.
Brown and pink
இந்த வகையான வெள்ளை வெளியேற்றமானது வெள்ளையாக இல்லாவிட்டாலும் மாதவிடாயின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ பழுப்பு அல்லது இளைஞ்சவப்பு வெளியேற்றம் ஏற்படலாம். மாதவிடாய் ஹார்மோன் மாற்றங்கள் அல்லது எரிச்சல் ஆகியவற்றிற்கு இடையில் லேசான ரத்தப்போக்கு ஏற்படலாம்.
Green
பாக்டீரியல் வஜினோசிஸ்(BV) மற்றும் டிரிகோமோனியாசிஸ் போன்ற பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணியால் ஏற்படும் தொற்றுக்கான ஒரு அறிகுறியாகும். பாலியல் ரீதியாக பரவும் தொற்று நோய்கள் (STIs) அதாவது கிளமிடியா அல்லது கோனோரியா போன்ற தொற்றுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் தொற்று அல்லது கர்ப்பப்பை வாய் அலர்ஜி போன்ற பிரச்சினைகளாலும் பச்சை நிற வெளியேற்றம் ஏற்படலாம். ஆதலால் இந்த வகையான veginal discharge ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
வெள்ளைப்படுதல் என்பது அதன் தன்மைகளை பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு சிலருக்கு இயல்பாக இருக்கும். அதுவே மற்றொருவருக்கு இயல்பாக இருக்காது. ஆதலால் வெள்ளைப்படுத்தலில் ஏதேனும் மாற்றத்தை கண்டறிந்தால் குறிப்பாக அரிப்பு, எரிச்சல், அதிக அளவு வெள்ளை வெளியேற்றம், மாறுபட்ட நிறம் மற்றும் கெட்ட துர்நாற்றம் ஆகியவற்றைக் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
நன்றி !!
FAQ
பெண்களில் வெள்ளைப்படுதல் ஏற்படும் பொதுவான காரணங்கள் என்ன?
பெண்களில் வெள்ளைப்படுதல் பெரும்பாலும் ஓவுலேஷன் அல்லது கர்ப்பகாலத்தில் ஹார்மோனிகளின் மாற்றங்களால் ஏற்படுகிறது. அது மாத உறுப்புகள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்றுவதன் மூலம் யோனி தன்மையை சுத்தம் செய்யும் வகையாகும்.
மாதவிடாய் போன்றதில் வெள்ளைப்படுதல் சாதாரணமா?
ஆமாம், பல பெண்களுக்கு மாதவிடாயின் போது வெள்ளைப்படுதல் சாதாரணமாகும். இது மாதவிடாய் நடைமுறையின் மூலம் உறுப்புகளின் அளவு மற்றும் அளவுக்கு பாரம் செய்கின்றது.
சாதாரண வெள்ளை வெளியேற்றம் என்ன பார்க்கப்படுகிறது மற்றும் வாசனை எப்படி இருக்கிறது?
சாதாரண வெள்ளை வெளியேற்றம் பொதுவாக தேங்காயமானது அல்லது இல்லாமல், மெதுவான வளைவுடன், மெதுவான வாசனையுடன் இருக்கும். அது ஓவுலேஷன் சுழற்சியின் சிறப்பான நாளில் அதிகமாகும். அகற்றுவது, சேதப்புற்றும், எரிச்சல், அல்லது வலி உடன் செய்கிற வெளியேற்றம் தவிர்க்கப்படும் தொல்லைகளைப் பெறுமாறு ஒரு இடைநிலையாகும்.
என் யோனிவில் மாற்றங்களை கண்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டுமா?
உங்கள் யோனிவில் மாற்றங்களை கண்டால், அது அழகுப் பற்றினால், மற்றும் இதயப்பூர்வமான வாசனை, பிடிவான நாகரிகள், அல்லது வலி என்ன என்பதைக் கொண்டு இருக்கும். அருகிலுள்ள உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய மருத்துவ உதவியை கேட்கவும் முக்கியம்.
Next Article to Read
- Are you suffering from White discharge or vaginal discharge? Let’s find out the reasons
- Foods that should be avoided by people with diabetes (நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்)?
- நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (diabetic diet) உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.
- நீரிழிவு (diabetes) அல்லது சர்க்கரை நோயால் கஷ்டப்படுகிறீர்களா? Follow these simple steps – Payanali
- Lice and Dandruff Problem? வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அவற்றை முற்றிலுமாக எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.
- Weight loss program | Foods and Proteins importance – Payanali
- இந்த இரண்டு பொருள் போதும் எப்படிப்பட்ட வாயு தொல்லையாக இருந்தாலும் ஒரே மணி நேரத்தில் சரிசெய்யலாம்.
- குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஒரு சத்துமாவு போதும்
- What are the best home remedies for treating thyroid disease?
- The best healthy diet food for Hyperthyroidism
Share