rules for pregnant mother

Guidelines to pregnant women care – Healthy baby Tips

ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க கர்ப்பம் தரித்த தாய்மார்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

ஆரோக்கியமான உணவு முறைகளை கையாளுதல்

        கர்ப்ப காலத்தில் சமச்சீரான உணவானது தாய் மற்றும் கருவில் உள்ள குழந்தை இருவருக்கும் மிகவும் முக்கியமானது. இந்தக் காலகட்டத்தில் அதிகப்படியான பழங்கள் மற்றும் காய்கறிகள் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுகளை நமக்கு தருகிறது. கோழி, மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த  உணவுகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இது கருவின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. மேலும் பச்சையாகவோ, வேக வைக்கப்படாத இறைச்சியோ மற்றும் சில வகையான சீஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் உணவுப்பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனவே அதிக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவை உண்பது மிகவும் நல்லது.

sleep well

தேவையான அளவு தூக்கம் மற்றும் ஓய்வு பெறுதல்

        கர்ப்ப காலத்தில் போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு ஒவ்வொரு தாய்மார்களுக்கும் மிகவும் அவசியம். ஏனென்றால், கர்ப்ப காலத்தில் வளரும் கருவை ஆதரிக்க உடல் கடினமாக உழைக்கிறது. மேலும் தூக்கம் நமக்குத் தேவையான ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாமல் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. கர்ப்பம் தரித்த தாய்மார்கள் ஒரு இரவுக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் தேவைப்பட்டால் பகலிலும் சிறிது நேரம் உறங்க வேண்டும். நான் தூங்கும் போது நமக்கு வசதியான தூக்க நிலைகளை கையாள வேண்டும். ஏனென்றால், இது கருவின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

நடைப்பயிற்சி அல்லது யோகா போன்ற மிதமான உடற்பயிற்சி செய்தல்

        கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. எனவே நடைப்பயிற்சி அல்லது மகப்பேருக்கு முற்பட்ட யோகா போன்ற மிதமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இது நமது எடையை பராமரிக்கவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் உதவுகிறது. மேலும் தூக்கத்தை மேம்படுத்தவும் வழிவகிக்கிறது. இருப்பினும் ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது எனவே கர்ப்ப காலத்தில் எந்த ஒரு உடற்பயிற்சியும் தொடங்குவதற்கு முன்  மகப்பேறு ஆலோசகரை கலந்து ஆலோசிப்பது அவசியம்.

yoga and drinking

நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்

        கர்ப்ப கால கட்டத்தில் நம் உடலானது எப்போதும் நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், இந்த நீரேற்றமானது நமக்கு செரிமானத்திற்கும் மற்றும் சரியான சுழற்சி முறைக்கும் பயன்படுகிறது. கர்ப்பம் தரித்த தாய்மார்கள் கண்டிப்பாக ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நம் உடலில் நீரேற்றத்தை சீராக்க தண்ணீர் ஒரு சிறந்த தேர்வாகும். அதிகப்படியான கஃபைன் மற்றும் சர்க்கரை பானங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். ஏனென்றால், இவை நீர் இழப்புக்கு வழிபடுகிறது.

ஆல்கஹால், புகையிலை மற்றும் சில மருந்துகள் போன்ற பொருட்களை தவிர்க்கவும்

        கர்ப்ப காலத்தில் மது, புகையிலை மற்றும் சில மருந்துகளை தவிர்ப்பது தாய் மற்றும் வளரும் கருவின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மது மற்றும் புகையிலை பயன்பாடு கருவின் பிறப்பு குறைபாடுகள் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. அத்துடன் தாய்க்கு சில கர்ப்ப சிக்கல்களை தருகிறது.

         கர்ப்ப காலத்தில் ஏதேனும் புதிய மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன் சுகாதார ஆலோசகரிடம் பேசுவது மிகவும் நல்லது. ஏனென்றால், சில மருந்துகள் வளரும் கருவுக்கு பாதுகாப்பாக இருக்காது. கருவுற்றிருக்கும் போது நாம் கடைகளில் கிடைக்கும் மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு சில மருந்துகள் நஞ்சு கொடியை கடந்து கருவில் உள்ள குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். எனவே எந்த ஒரு பொருளையும் உபயோகிப்பதற்கு முன்னால் சுகாதார ஆலோசகரை  பரிந்துரைப்பது நல்லது.

மகப்பேறு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுதல்

        கர்ப்ப காலத்தில் மகப்பேறு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அவற்றில் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பயன்படுகிறது.

        ஃபோலிக் அமிலம் நரம்பு குழாயை உருவாக்க உதவுகிறது. இது குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பாக மாறும். மேலும் சில பிறப்பு குறைபாடுகளை தடுக்க உதவுகிறது. கருவுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்பு உதவுகிறது.

மகப்பேருக்கு முன்னர் உங்கள் பாதுகாப்புக்காக சுகாதார ஆலோசகரை தவறாமல் பார்வையிடவும்

        கர்ப்ப காலத்தில் உங்கள் மகப்பேறு மருத்துவர் தவறாமல் சந்திப்பதே தாய் மற்றும் வளரும் கருவின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது ஆகும். இவ்வாறு அடிக்கடி பார்வையிடுவது மூலம் நமது உடல்நல பிரச்சனைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், கருவின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான பிரசவத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.

        பொதுவாக முதல் மற்றும் இரண்டாவது மூன்று மாதங்களில் மாதாந்திர வருகைகளையும், மூன்றாவது மூன்று மாதங்களில் அடிக்கடி வருகைகளையும் மேற்கொள்வது நல்லது. ஒவ்வொரு சோதனையின் போதும் தாயின் ரத்த அழுத்தம், எடை மற்றும் கருப்பை அளவு ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளப்படுகிறது. இந்த சோதனைகள் தாய் மற்றும் கருவில் உள்ள குழந்தையின் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

check up

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் ஒதுக்குதல்

        கர்ப்ப காலத்தில் குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவை கண்டறிவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பம் மற்றும் தாய்மை ஆகிய இரண்டும் உற்சாகமான ஒரு தருணமாகும். ஆதரவான உறவுகளை கொண்டிருப்பது மன அழுத்தம் மற்றும் தனிமை உணர்வுகளை போக்குகிறது.

சுய கவனிப்புக்கு நேரம் ஒதுக்குதல்

        கர்ப்ப காலத்தில் சுய கவனிப்பு என்பது மிகவும் முக்கியமானது. இது நமது மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

           மசாஜ் செய்தல், ஓய்வெடுத்தல், குளியல் அல்லது புத்தகம் படிப்பது போன்ற சுய கவனிப்பு நடவடிக்கைகளுக்கு நேரம் ஒதுக்குவது நல்லது. பொதுவாக மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தளர்வை மேம்படுத்தவும் உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் குளிப்பதன் மூலம் தசைகளை மேம்படத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதைகிறது.

நன்றி !!

Share

Leave a Reply