Nutritious foods for babies

List of nutritious foods for babies from birth to one year.

உணவு என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். அதுவும் குழந்தைகளுக்கு அதன் முதல் உணவு என்பது மிகவும் அத்தியாவசியமாகும். ஒரு குழந்தையின் முக்கியமான காலகட்டம் என்பது பிறந்தது முதல் 12 மாதங்கள் வரை தான் ஏனென்றால் அந்த காலகட்டத்தில் தான் குழந்தைகள் குப்புவித்தல், தவழுதல், எட்டி வைத்து நடத்தல் முக்கியமான வேலைகளை செய்கிறது.

          ஆதலால் இந்த காலகட்டத்தில் நாம் குழந்தைகளுக்கு அதிக ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை மட்டுமே தான் கொடுக்க வேண்டும். எந்த மாதிரியான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது என்று குழப்பமாக உள்ளதா இனி அந்த கவலை வேண்டாம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மிகுந்த உணவு பட்டியலை இப்பொழுது பார்க்கலாம். இதை குழந்தைகளுக்கு கொடுத்தாலே போதும் உங்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். 

           குழந்தைகளின் முதல் 12 மாதங்களை மூன்று வாரியாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறந்தது முதல் நான்கு மாதங்கள், ஐந்து முதல் 8 மாதங்கள் மற்றும் ஒன்பது முதல் 12 மாதங்கள் எனும் மூன்றாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த முறையில் தான் குழந்தைகளுக்கு உணவுகளை அதிகப்படுத்திக் கொண்டு போக வேண்டும். 

         முக்கிய குறிப்பு ஒரு சில குழந்தைகள் பார்ப்பதற்கு மிகவும் மெலிதாக காணப்படுகிறது. அதற்கு கவலைப்பட வேண்டாம் ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு உடல் வாகு அமைப்பை கொண்டிருக்கும். இந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்பதை மட்டும் பார்த்தாலே போதும். இந்த குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை கொடுத்தால் மட்டுமே போதும்.

பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரை

         ஒரு பிறந்த குழந்தைக்கு முதல் உணவானது அதன் தாய் பால். தாய்ப்பாலுக்கு மிஞ்சிய உணவு இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. அதுவும் ஒரு குழந்தை பிறந்ததும் முதலில்  குடிக்கும் தாயின் சீம்பால் ஆனது மிகவும் அதிக ஊட்டச்சத்து மிகுந்ததாக காணப்படுகிறது. முதல் நான்கு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்ததாக விளங்குகிறது. 

         தாய்ப்பால் இல்லாத தாய்மார்கள்  ஃபார்முலா மில்க் பவுடர் என்று அழைக்கப்படும் பால் பவுடரை கொடுக்கவும். மாட்டுப்பால் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் மாட்டுப் பாலில் புரதச்சத்தானது மிகவும் அதிகமாக உள்ளது அதை குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே கொடுத்தால் சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஐந்து முதல் எட்டு மாதம் வரை

           இந்த காலகட்டத்தில் அரை திரவ உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம். காலையில் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் கொடுக்கவும். பிறகு காலை 11 மணி அளவில் காய்கறிகள் அல்லது பழங்கள் ப்யூரி என்றழைக்கப்படும் கூழை கொடுக்கவும். ஆப்பிள், கேரட், உருளைக்கிழங்கு, பேரிக்காய், பீட்ரூட், அவகாடோ ப்யூரி என்றழைக்கப்படும் கூழ் வகைகளை தினம் ஒன்று கொடுத்து வர வேண்டும். 

காய்கறிகள் மற்றும் பழங்கள் கூழ் செய்முறை 

            மேற்கண்ட காய்கறிகள் அல்லது பழங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு நன்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்து நன்கு அரைத்து அல்லது மசித்து கொள்ளவும். இப்பொழுது காய்கறிகள் மற்றும் பழங்கள் கூழ் தயாராகியுள்ளது. பிறகு ஒரு மணி அளவில் ராகி பால் கொடுக்கலாம். ராகி பாலானது மிகவும் முக்கியமான ஒரு உணவாகும். இந்த ராகி பாலில் உள்ள சத்தானது தாய்ப்பால் உள்ள சத்துக்கு நிகரானது. 

ராகிப் பால் செய்முறை

           இரண்டு டேபிள் ஸ்பூன் ராகியை  காலையில் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். மதியம் நன்கு ஊறியதும்  அதை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். அந்த அரைத்த கலவையை வடிகட்டினால் பால் போன்ற ஒரு திரவம் கிடைக்கும். அதை சிறிது நேரம் தெளிய விட்டால் மேல் பகுதியில் பால் போன்ற ஒரு திரவம் இருக்கும். இந்தப் பாலை எடுத்து  காய்ச்சி சிறிது நாட்டு சர்க்கரை போட்டு குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

          பிறகும் மாலை நாலு மணி அளவில்  பருப்பு சூப் கொடுக்கலாம்.

பருப்பு சூப் செய்முறை

            இரண்டு டேபிள் ஸ்பூன் பருப்பு அதில் சிறிது சீரகம், இரண்டு சின்ன வெங்காயம், ஒரு பல் பூண்டு, உப்பு சிறிதளவு, தக்காளி துண்டு சிறிதளவு, சிறிது மஞ்சத்தூள் ஆகியவற்றை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி நாலு முதல் ஐந்து விசில் விட்டு எடுத்துப் பார்த்தால் பருப்பு சூப் தயாராகி இருக்கும்.

           இப்பொழுது இரவு நேரத்தில் தயாரிக்கப்பட்ட சிரளாக் கொடுக்கவும். 

ஹோம் மேட் சிரளாக் செய்முறை

            ஒரு கடாயில் அரை டம்ளர் அரிசி, மூன்று முதல் நான்கு பாதாம், இரண்டு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, சிறிது சீரகம் ஆகியவற்றை நன்கு வறுத்து மிக்ஸியில் அரைத்து சலித்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஹோம் மேட் சிரளாக் பவுடர் தயார். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்த உடன் அரை ஸ்பூன் சிரளாக் பவுடர் போட்டு நன்கு கூழ் போல் காய்ச்சி குழந்தைக்கு கொடுக்கவும்.

Baby food 2

ஒன்பது முதல் 12 மாதம் வரை

              காலையில் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் கொடுக்கவும். காலை 11 மணி அளவில் ராகி பால் கொடுக்கவும். மதியம் ஒரு மணி அளவில் விருப்பமான காய்கறிகளை போட்டு பருப்பு சாதம் செய்து நன்கு மசித்து கொடுக்கவும். மாலை ஒரு நாலு மணி அளவில் பருப்பு சூப் அல்லது காய்கறிகள் சூப் கொடுக்கலாம். இரவு ஏழு மணி அளவில் இட்லி கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தினமும் ஒரு பழச்சாறு கொடுப்பது நல்லது.

நன்றி !!

Share

Leave a Reply