health mix

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஒரு சத்துமாவு போதும்

      சத்துமாவு (Best Immunity Booster for kids) என்பது பல்வேறு வகையான தானியங்கள், கொட்டைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்ற சேர்த்து வறுத்து அரைத்த ஒரு கலவையாகும். இதை ஹெல்த் மிக்ஸ் என்றும் கூறுவார்கள். இந்த ஆரோக்கியம் நிறைந்த மாவில் நமக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை அதிக அளவு உள்ளது. இதை சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். இதை காலை உணவாக எடுத்துக் கொண்டால் அந்த நாள் முழுவதும் நமக்கு நீடித்த ஆற்றலை தருகிறது.

சத்துமாவு அரைப்பதற்கு தேவையான பொருட்கள்

whole grains
  • கேழ்வரகு 2 கிலோ (ராகி)
  • சம்பா கோதுமை 1/4 கிலோ
  • கம்பு 1/4 கிலோ 
  • வெள்ளை சோளம் 1/4 கிலோ 
  • மக்காச்சோளம் 1/4 கிலோ
  • கருப்பு உளுந்து 1/4 கிலோ
  • கருப்பு கொண்டை கடலை 1/4 கிலோ
  • வெள்ளை கொண்டை கடலை 1/4 கிலோ
  • கொள்ளு 1/4 கிலோ
  • சிவப்பு ராஜ்மா 1/4 கிலோ
  • சோயா 1/4 கிலோ
  • பார்லி அரிசி 1/4 கிலோ
  • ஜவ்வரிசி 1/4 கிலோ
  • பச்சரிசி 1/4 கிலோ
  • மூங்கில் அரிசி 1/4 கிலோ 
  • சிவப்பு அரிசி 1/4 கிலோ
  • கருப்பு கவுனி அரிசி 1/4 கிலோ
  • கைக்குத்தல் அரிசி 1/4 கிலோ
  • திணை 1/4 கிலோ 
  • சாமை 1/4 கிலோ 
  • வரகு 1/4 கிலோ 
  • குதிரை வாலி 1/4 கிலோ
  • வேர்க்கடலை 100 கிராம்
  • பொட்டுக்கடலை 100 கிராம்
  • முந்திரி 15
  • பாதாம் 15
  • பிஸ்தா 10
  • வால்நட் 10 
  • ஏலக்காய் 10 முதல் 15
  • சுக்கு 10 Rs
  • வெள்ளரி விதை 3 டேபிள் ஸ்பூன் 
  • பூசணி விதை 3 டேபிள் ஸ்பூன்
  • மிளகு 2 டேபிள் ஸ்பூன்
  • கசகசா 25 கிராம்
nuts immunity booster for kids

     மேற்கண்ட இந்த அனைத்து பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்து ஒரு கடாயில் நன்கு வறுத்து கொள்ள வேண்டும். வறுத்த அனைத்து பொருட்களையும் நன்றாக வெயிலில் காய வைத்து மாவு மில்லில் கொடுத்து அரைத்த வாங்கிக் கொள்ளவும். இந்த அரைத்த மாவை சல்லடையில் நன்றாக சலித்து ஸ்டோர் பண்ணி கொள்ளலாம். இவற்றை நன்கு வறுத்து காயவைத்து அரைப்பதன் மூலம் மாவானது வெகு நாட்களுக்கு கெடாமல் பாதுகாப்பாக இருக்கும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக உண்ணலாம்.

     துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாசிப்பயிறு போன்ற பருப்புகளை தவிர்க்கலாம். ஏனென்றால் இவற்றை சேர்த்தால் சீக்கிரமாக வண்டு, பூச்சி போன்றவை வைத்து விடும். வெகு நாட்களுக்கு உபயோகிக்க முடியாது.

    இந்த சத்து மாவை கொண்டு சத்துமாவு கஞ்சி, தோசை, பணியாரம், கேக் போன்ற போன்ற பல வகை உணவாக செய்து சாப்பிடலாம்.

நன்றி !!

Share

Leave a Reply