healthy diet for hypothyroidism

The best healthy diet food for hypothyroidism

ஹைப்போ தைராய்டிசத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு பட்டியலை பற்றி இங்கு பார்ப்போம்.

      உங்களுக்கு எந்த விதமான தைராய்டு உள்ளது என்பதை உங்களது மருத்துவ ஆலோசகரை அணுகி உறுதி செய்து கொள்ளுங்கள். பிறகு அதற்கு தகுந்தார் போல் நீங்கள் உணவுகளை தேர்ந்தெடுங்கள்.

      நம் தைராய்டு சுரபியில் தைராய்டு ஹார்மோன்களின்(T3 & T4) உற்பத்தி அளவு மிகவும் குறைவாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. தைராய்டு சுரப்பியின் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க நாம் பின்வரும் உணவுகளை கண்டிப்பாக நாம் தினசரி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஹைப்போ தைராய்டிசத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

அயோடின் நிறைந்த உணவுகள்

iodine scaled

       தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு அயோடின் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். தைராய்டு சுரப்பிக்கு தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய இந்த அயோடின் மிகவும் உதவுகிறது. அதிக அளவு ஹைப்போ தைராய்டிசம் இந்த அயோடின் குறைபாட்டினால் மட்டுமே ஏற்படுகிறது. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்துகிறது. உடலுக்குத் தேவையான அளவு அயோடின் இல்லாத பட்சத்தில் இந்த அயோடின் உணவுகளை உட்கொண்டால் ஹைப்போ தைராய்டிசத்தை சரி செய்யலாம். இவை T3 மற்றும் T4 ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

       மீன், இறால், கடல்பாசி மற்றும் மட்டி ஆகியவை அயோடின் நிறைந்த உணவுகள் ஆகும். பால் மற்றும் பால் பொருட்கள், தயிர், சீஸ் போன்றவற்றில் அயோடின் உள்ளது. முட்டை, அயோடின் உப்பு ஆகியவற்றை நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிகளவு ஆயோடின் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே நம் மருத்துவரிடம் ஆலோசித்து நமக்குத் தேவையான அயோடின் அளவை எடுத்துக் கொள்வது நல்லது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

foods rich in fiber

        ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனை இந்த மலச்சிக்கல். எனவே இந்த மலச்சிக்கலை ஒழுங்குபடுத்த அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ரத்த ஓட்டத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் உடல் எடையை கட்டுப்படுத்தவும் இந்த நார்ச்சத்தானது பயன்படுகிறது. மேலும் அதிக அளவு நார்ச்சத்து உள்ள உணவுகளில் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமாக நமக்கு கிடைக்கிறது.

       இவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்களும், ஆப்பிள், பெர்ரி, பேரிக்காய், வாழைப்பழங்கள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்களும், கீரை, கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளும், பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை, பட்டாணி போன்ற நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகளும், ஆளி விதை, சியா விதை, அக்ரூட், பூசணி விதை, பாதாம் ஆகியவற்றை தினமும் நம் உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.

ஆரோக்யமான கொழுப்புகள் நிறைந்த உணவுகள்

healthy fat foods

       இந்த உணவுகள் ஹார்மோன் சமநிலைக்கு உதவியாக உள்ளது. மேலும் ரத்தத்தின் சர்க்கரை அளவை சரி செய்கிறது மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. எடை குறைப்பிற்கும் உதவியாக உள்ளது. ஆலிவ் எண்ணெய், அவகேடோ ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும, வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

       சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன அவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் விதைகள், பாதாம், அக்ரூட், பருப்பு வகைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பொருட்களில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது.

செலினியம் நிறைந்த உணவுகள்

selenium hypothyroidism

       செலினியம் என்பது ஒரு மினரல் ஆகும். இவை தைராய்டு ஹார்மோன்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு இந்த செலினியம் உட்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் குறைந்த ஹார்மோன் அளவுகள் ஆட்டோ இம்யூன் தைராய்டு நோயின் அபாயத்தை தரும். மேலும் இந்த செலினியம் ஆனது நம் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.   

       இந்த செலினியம் ஆனது ஆட்டோ இம்யூன் தைராய்டு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. பிரேசில் பருப்புகள், டுனா மீன்கள், ஹாலிபுட் மீன்கள், மத்தி மீன்கள், சிவப்பு இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, பழுப்பு அரிசி, பார்லி, ஓட்ஸ், பால், சீஸ் போன்றவை செலினியம் நிறைந்த உணவுகளாகும்.

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்

        ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு கால்சியம் அளவு குறைவாக இருக்கலாம். எனவே இந்த வைட்டமின் டி கால்சியத்தின் அளவை கட்டுப்படுத்துவதற்கும், ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதற்கும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு செயல்பாட்டினை ஆதரிக்க பயன்படுகிறது. கால்சியத்தின் அளவை சீராக்கவும், எலும்புகளை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கும் இந்த வைட்டமின் டி மிகவும் முக்கியமாக பயன்படுகிறது. கால்சியம் நிறைந்த உணவுகளான சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள், காளான்கள் மற்றும் பால் பொருட்கள், தானிய வகைகள் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஹைப்போ தைராய்டிசத்திற்கு எடுத்துக் கொள்ள கூடாத உணவுகள்

சோயா பொருட்கள்

soy products

       சோயாவில் இயற்கையாகவே கோய்ட்ரோஜன்கள் உள்ளன. இந்த கோய்ட்ரோஜன்கள் தைராய்டு சுரப்பியின் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதில் தலையிடுகிறது. ஆதலால் குறைந்த அளவு தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தி ஆகிறது. ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் சோயா பொருட்களை தவிர்ப்பது நல்லது. டோஃபு, டெம்பே, சோயா பால், சோயா பருப்புகள், சோயா சாஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

சிலுவை (cruciferous) காய்கறிகள்

cruciferous vegetables

        பொதுவாக cruciferous காய்கறிகளில் நார்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் போன்ற அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இந்த வகையான காய்கறிகள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும் இந்த காய்கறிகளில் கோய்ட்ரோஜன்கள் உள்ளன. அவை தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு. ஆதலால் இந்த வகையான காய்கறிகளை ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. ப்ரோக்கோலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலே போன்றவற்றை cruciferous காய்கறிகள் ஆகும்.

க்ளுட்டன் (Gluten) தவிர்த்தல்

gluten free food various pasta bread and snacks 2021 08 26 17 43 14 utc hypothyroidism

       செலியாக் நோய் அல்லது க்ளுட்டன் சென்சிட்டிவிட்டி உள்ளவர்களுக்கு க்ளுட்டன் உட்கொள்ளும் போது நம் உடலிலே நமக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி சிறுகுடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சேதத்தை உருவாக்குகிறது. தைராய்டு செயல்பாட்டிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை பாதிக்கிறது. இவை தன்னுடல் தாக்க கோளாறுகளுக்கு பங்களிக்கிறது. கோதுமை, பார்லி, கம்பு போன்றவற்றை க்ளுட்டன் நிறைந்த உணவுகள் ஆகும்.

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

        சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகப்படியான ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றுள் அதிக கலோரிகள், உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் ஆகியவை இருக்கலாம். இவை தைராய்டு சுரப்பிக்கு தீங்கு விளைவித்து தைராய்டு செயல்பாட்டை பாதிக்கிறது. இந்த உணவுகளில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் எடை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது.

நன்றி !!

Share

Leave a Reply