Herbal tea for cure gallstone disease

Do you have gallstones in your body? Drink this Herbal tea.

பித்த நோயால் மிகவும் அவதிப்படுகிறீர்களா? இந்த டீயை ஒரு முறை குடித்து பாருங்கள் பித்தம் காணாமல் போகும். வாருங்கள் இந்த டீயை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பித்தம் என்றால் என்ன?

             பித்தம் என்பது கல்லீரலில் உருவாகும் மஞ்சள் நிற அமில சுரப்பியாகும். இந்த சுரப்பியானது கல்லீரலில் உற்பத்தியாகி  பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இந்த பித்தநீர் பித்தப்பையில் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அதுவே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப அதிக அளவு பித்தநீர் சுரந்தால் நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

பித்தம் அதிகரிக்க காரணங்கள்

             இப்பொழுது உள்ள காலகட்டங்களில் அனைவரும் கொழுப்பு நிறைந்த உணவும், ஃபாஸ்ட் ஃபுட் உணவையும் தான் விரும்புகிறார்கள். இந்த வகை உணவுகளை அதிகமாக உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். காரணம் என்னவென்றால், கொழுப்பு நிறைந்த உணவானது செரிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆதலால் அப்பொழுது பித்தம் அதிகரிக்கும். 

             ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். அவ்வாறு பருகாவிட்டால் உடலுக்கு தேவையான  நீர் சத்தானது கிடைக்காது. அந்த நீர்ச்சத்து பற்றாக்குறைனாலும் பித்தம் அதிகரிக்கும்.

             இப்பொழுதெல்லாம்  டீ  மற்றும் காபி நிறைய குடிப்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார்கள். அவ்வாறு அதிகமாக எடுத்துக் கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.

             இப்பொழுது உள்ள காலகட்டத்தில் நிறைய பேர் தினமும் நிறைய மாத்திரை மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு பித்த நீர் அதிகமாக சுரக்கும். சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். தூங்காமல் வெகு நேரம் கண் விழித்து இருந்தால் பித்த நீர் அதிகமாக சுரக்கும்.

            புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் நொறுக்கு தின்பண்டங்கள் உண்பவர்களுக்கும் இந்த பித்த நீர் அதிகமாக சுரக்கும்.

பித்தத்தை சீராக்க சில வழிமுறைகள்

            நம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருட்களில் நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் உயிர்ச்சத்து ஆகியவை சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் தேவையில்லாத ஃபாஸ்ட் ஃபுட் இவற்றைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக ஒருவர் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை உறங்க வேண்டும்.   

             இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. அனைவரும் கண்டிப்பாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் உடம்பில் உள்ள பித்த நீர் சரியான அளவு சுரந்து உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்.

             பிறகு நம் மனதில் தேவையில்லாத எண்ணங்கள், அழுத்தம் ஆகியவற்றை போட்டுக் கொள்ளாமல் எப்பொழுதும் நம் மனதை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் பச்சை காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக அனைவரும் தினமும் ஒரு பழங்கள் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நம் உடம்பில் பித்த நீரை சரியான அளவு சுரக்கும் படி செய்து கொள்ளலாம்.

பித்த நோய்க்கான அறிகுறிகள்

                பித்தம் அதிகரிப்பதால் வாந்தி, மயக்கம், குமட்டல், தலைசுற்றல் ஆகியவை இருக்கும். நமது உள்ளங்கால்கள் மற்றும் உதடு வெடித்து காணப்படும். பித்தம் அதிகரிப்பதால் அதிகப்படியான செரிமான பிரச்சனை ஏற்படும். இளம் வயதிலே ஒருவருக்கு பித்தம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு முடி நரைத்து காணப்படும். தோல் சுருக்கம் மற்றும் உடல் வறட்சி ஆகியவை ஏற்படும்.

பித்த நோயை குணப்படுத்தும் மூன்று வகையான டீ

சுக்கு டீ

தேவையான பொருட்கள்

          வர கொத்தமல்லி 50 கிராம்

          சீரகம் 50 கிராம் 

          சுக்கு 50 கிராம் 

          தேன் தேவையான அளவு

செய்முறை

             கொத்தமல்லி, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை மிதமான சூட்டில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி  ஒரு ஸ்பூன் இந்த பொடியை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். இதை வடிகட்டி இதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகிவர  பித்தம் குணமாகும்.

கொய்யா இலை டீ

தேவையான பொருட்கள்

             கொய்யா இலை மூன்று முதல் ஐந்து 

             மிளகு நான்கு 

             எலுமிச்சை சாறு தேவையான அளவு 

             தேன் தேவையான அளவு

செய்முறை

              ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கொய்யா இலை மற்றும் நாளு மிளகு இடித்து அதில் போடவும். நன்கு கொதித்த உடன் அதை வடிகட்டி  அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகிவர பித்தம் சரியாகும்.

இஞ்சி புதினா டீ

தேவையான பொருட்கள்

             இஞ்சி ஒரு துண்டு 

             புதினா ஒரு கைப்பிடி 

             சீரகம் ஒரு ஸ்பூன் 

             எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் 

             தேன் ஒரு ஸ்பூன்

செய்முறை

             ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி இதில் ஒரு கைப்பிடி புதினா, சீரகம் ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு துண்டு இஞ்சி இடித்து போடவும். கொதித்த உடன் வடிகட்டி இதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகவும்.

           இந்த மூன்று வகையான டீயை குடித்துப் பாருங்கள் பித்தம் பறந்து போகும்.

நன்றி !!

Share

Leave a Reply