User Gastric problem | Honey | Asafoetida | Hot-water

இந்த இரண்டு பொருள் போதும் எப்படிப்பட்ட வாயு தொல்லையாக இருந்தாலும் ஒரே மணி நேரத்தில் சரிசெய்யலாம்.

     வாய், உணவுக் குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் மற்றும் ஆசனவாய் போன்றவற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் இரைப்பை பிரச்சினைகள் என்று கூறப்படுகிறது. நெஞ்செரிச்சல், வீக்கம், வாயு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, எரிச்சல் கொண்ட வயிற்று வலி போன்றவை இரைப்பை நோய்களின் அறிகுறிகள் ஆகும்.

     நாம் உண்ணும் உணவானது நமது செரிமான அமைப்பில் ஒரு சில தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியம் இல்லாத அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு சுவை அதிகம் கொண்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகள், குளூட்டன் அதிகம் உள்ள உணவுகள், அதிக அளவு கார தன்மை கொண்ட உணவுகள் மற்றும் அதிக அளவு பால் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் நெஞ்செரிச்சல், வாயு தொல்லை, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.   

     மேலும் நாம் உண்ணும் உணவை வேகமாக சாப்பிடுவது அல்லது ஒழுங்காக மெல்லாமல் அப்படியே விழுங்குவது போன்ற பழக்கங்கள் உணவை ஜீரணிக்க மிகவும் கஷ்டப்படுகிறது. இதன் காரணமாகத்தான் வீக்கம் மற்றும் வாயு தொல்லை ஏற்படுகிறது.

      இந்த காலகட்டத்தில் அதிகப்படியான மக்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை இந்த வாயு தொல்லையாகும். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். நெஞ்சு இழுத்து பிடித்தல், கால் இழுத்து பிடித்தல், வயிற்று வலி, ஏப்பம், வாயு பிரிதல், வயிறு உப்புசம் ஆகியவை இந்த வாயு தொல்லைக்கான அறிகுறிகள் ஆகும். மேலும் நமது வாழ்க்கை முறையில் உள்ள ஒரு சில பழக்கவழக்கங்களும் இந்த வாயு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அவற்றுள் சில, நேரம் தவறி சாப்பிடுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சாப்பிட்ட உடன் குளித்தல் போன்ற பழக்கங்களும் வாயு தொல்லையை ஏற்படுகிறது.

asafoetida

இந்த வாயு தொல்லையை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சில வழிமுறைகள்

இந்த வாயு தொல்லையை சரி செய்ய முதலில் உணவு முறையை தான் சரி செய்ய வேண்டும். எனவே மேலே கூறப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்களையும் தவிர்த்தல் வேண்டும். ஏனென்றால் அந்த பழக்கத்தின் போது ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாகவும் இந்த வாயு தொல்லை ஏற்படும். நம் உண்ணும் உணவுகளை சிறிது சிறிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் நன்கு மென்று விழுங்க வேண்டும்.

இந்த வாயு தொல்லைக்கான ஹோம் ரெமடி

honey

      இந்த இரண்டே பொருள் போதும் ஒரே மணி நேரத்தில் உங்களது வாயு பிரச்சனையை சரி செய்கிறது. கட்டிப் பெருங்காயம் மற்றும் தேன் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். பெருங்காயம் என்பது நம் சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருளாகும். இந்த பெருங்காயத்திற்கு அலர்ஜி எதிர்ப்பு பண்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, வாயு எதிர்ப்பு பண்பு போன்ற தன்மைகள் உள்ளது. எனவே இவை செரிமானத்தை சரி செய்து வாயுவின் அளவை குறைக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் உற்பத்தியாகும் பாக்டீரியாக்களை அகற்றவும் இந்த பெருங்காயம் உதவுகிறது.

      கட்டி பெருங்காயத்தை நன்கு பொடி செய்து கொள்ளவும். ஒரு கப் அளவு சுடுதண்ணீரில் பொடி செய்த கட்டி பெருங்காயத்தை அரை ஸ்பூன் சேர்க்க வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கவும். எப்படிப்பட்ட வாயு தொல்லையாக இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் சரியாகிவிடும். வாயு பிரச்சனை உள்ளவர்கள் அதிக காரத்தன்மை கொண்ட உணவுகள், அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகள், சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்கள், அதிக அளவு தக்காளி சேர்க்கப்பட்ட உணவுகள், காபி, ஆல்கஹால், கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்ற உணவு வகைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

நன்றி !!

Share

Leave a Reply