Foods to Avoid for Diabetics

Foods that should be avoided by people with diabetes (நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்)?

      நீரிழிவு அல்லது சர்க்கரை நோயால் (diabetes) பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த அவர்களின் உணவை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் பின்வரும் உணவு பட்டியலில் உள்ள உணவுகளை கட்டாயமாக தவிர்க்க  வேண்டும்.

சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த பானங்களை தவிர்த்தல்

juices diabetes

      வெள்ளை சர்க்கரை, தேன், கருப்பட்டி, நாட்டு சர்க்கரை போன்ற இனிப்புகளால் தயாரிக்கப்பட்ட உணவுகள் ரத்தத்தின் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்க செய்து விடும். எனவே சாக்லேட், மிட்டாய், குக்கிகள், கேக்குகள், சக்கரை கலந்த திண்பண்டங்கள், சோடா மற்றும் சர்க்கரை கலந்த பழச்சாறுகள் ஆகியவற்ற தவிர்ப்பது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை தவிர்த்தல்

carbohydrates

      வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா மற்றும் வெள்ளை ரவை போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை நம் உணவில் இருந்து தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் கார்போஹைட்ரேட்டின் அளவுகள் அதிகமாக இருக்கும். சர்க்கரை நோய் (diabetes) உள்ளவர்கள் அதிக கார்போஹைட்ரேட்டுகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்கள் ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க செய்து விடும். இதற்கு மாற்றாக சுத்திகரிக்கப்படாத முழு தானியங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகள்

processed food

      பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் அதிகளவு சோடியம் உள்ளது. ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை அளவை பாதிக்கிறது. எனவே நம் உணவில் ஊறுகாய், கருவாடு போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

அதிக சோடியம் உள்ள உணவுகளை தவிர்த்தல்

high sodium

      அதிக சோடியம் உள்ள உணவுகள் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து விடும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஊறுகாய், வத்தல், அப்பளம், கருவாடு போன்ற உப்பு அதிகம் கொண்ட உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.

உலர்ந்த பழங்களை எடுத்துக் கொள்ள கூடாது

dry fruits diabetes

      பேரிச்சம்பழம், காய்ந்த திராட்சை, உலர்ந்த அத்திப்பழம் போன்றவைகளை  தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய பழங்கள்

fruits

       மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா பழம், அண்ணாச்சி பழம், சீதாப்பழம், திராட்சை, செர்ரி, லிச்சி, தர்பூசணி போன்ற பழங்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இயற்கையாகவே இந்த பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.

தவிர்க்க வேண்டிய காய்கறிகள்

vegetables

     உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, சோளம், பட்டாணி, பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த காய்கறிகளில் கார்போஹைட்ரேட்டின் அளவுகள் அதிகமாக இருக்கிறது. பரங்கிக்காய், வாழைக்காய், மாங்காய் ஆகியவற்றையும் தவிர்த்தல் நல்லது.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது

     அதிக கொழுப்புள்ள இறைச்சிகளான மட்டன், இறால், நண்டு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முழு கொழுப்புள்ள பால் பொருட்கள், வறுத்த உணவுகள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதிக அளவு கொழுப்பானது இதய நோய்க்கான பயத்தை ஏற்படுத்தும்.

மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்த்தல்

drinks with smoke diabetes

 மது அருந்துதலும், புகைப்பிடித்தலும் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. எனவே இந்த இரண்டையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

நன்றி !!

Share

Leave a Reply