diabetes control

நீரிழிவு (diabetes) அல்லது சர்க்கரை நோயால் கஷ்டப்படுகிறீர்களா? Follow these simple steps – Payanali

ஆரோக்கியமான உணவு

healthy food

      குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள காய்கறிகள், குறைந்த சர்க்கரை அளவுள்ள பழங்கள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை உள்ளடக்கிய ஒரு சீரான உணவு பட்டியலை தயார் செய்து அதை பின்பற்ற வேண்டும். நம் உணவு முறையை சரி செய்தாலே பாதி நோயை குணப்படுத்தி விடலாம். உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமானது. சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை ரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தி விடும்.

உடற்பயிற்சி

exercise

      ஒவ்வொருவரின் உடலும் வெவ்வேறு உடலமைப்பை கொண்டிருக்கும். எனவே உங்களது சுகாதார நிபுணரிடம் கலந்து ஆலோசித்து உங்கள் உடல் உடலமைப்பிற்கு தேவையான உடற்பயிற்சியை தெரிந்து கொண்டு அதை ஒரு வழக்கமாக செய்ய வேண்டும். உடற்பயிற்சியானது நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை  மேம்படுத்தவும் உதவுகிறது. நமது உடல் எடையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்தல்

regular checkup

     உங்கள் மருத்துவரின் உதவியோடு அடிக்கடி ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது. இது உங்கள் உடல் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது.

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்து கொள்ளுதல்

taking medicine diabetes

       நீரிழிவு அல்லது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அவர்களது அறிவுரைகளின் படி குறித்த நேரத்தில் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

எடை மற்றும் மன அழுத்தத்தை குறைத்தல்

depression

       சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக அளவு எடை கொண்டு இருந்தால் உங்களது எடையை குறைப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் இவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். நாள்பட்ட மன அழுத்தம் ரத்த சர்க்கரை அளவை மிகவும் பாதிக்கும். தியானம், சுவாச பயிற்சி, யோகா, உங்களுக்கு விருப்பமான பொழுது போக்கு ஆகியவற்றை செய்து மன அழுத்தத்தை குறைப்பது மிகவும் நல்லது.

மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்த்தல்

drinks and smoke diabetes

      மது அருந்துவதால் அதில் உள்ள ஆல்கஹால் ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தும். புகைப்பிடித்தலை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் ஏனென்றால் சர்க்கரை நோயின் சிக்கல்களை மிகவும் மோசமாக்கிவிடும்.

நீரிழிவு (diabetes) அல்லது சர்க்கரை நோயை பற்றி தெரிந்து கொள்ளுதல்

       நீரிழிவு நோய் (diabetes) என்றால் என்ன? இவை எதனால் வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து நமது உடலானது இப்பொழுது எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

    இந்த வழிமுறைகளுடன் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகளை சேர்த்து கொண்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து வைக்கலாம்.

நன்றி !!

Share

Leave a Reply