GM diet for weight loss

GM diet plan for fast weight loss.

GM என்றால் என்ன?

       GM டையட் என்பது அனைவரும் அறிந்த ஒரு Weight loss உணவாகும். இது ஏழு நாட்களுக்கு குறிப்பிட்ட உணவுப் பொருட்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு உணவு பட்டியல் ஆகும். முதலில் ஜெனரல் மோட்டார்ஸ் இன் ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த உணவு அட்டவணையானது இப்பொழுது நாளடைவில் அனைவரும் பின்பற்றுகின்றன.

       பொதுவாக நாம் Weight loss மற்றும் உடலை சுத்தப்படுத்த ஒவ்வொரு நாளும் அனைவரும் நம் உணவுகளில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையாக வைத்து தான் இந்த உணவு பட்டியலை உருவாக்கியுள்ளார்கள். ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு உடல்வாகு அமைப்பை கொண்டுள்ளது. எந்த ஒரு புதிய உணவு பட்டியலை தொடங்குவதற்கு முன் உங்கள் சுகாதார ஆலோசகரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

       நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இந்த டையட்டின் போது நாம் அதிக அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.

GM டையட் நாள் 1 (பழங்கள் மட்டும் உண்ணுதல் வாழைப்பழத்தை தவிர)

only fruits

       GM டையட்டின் முதல் நாளில் நாம் வாழைப்பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை உண்ணலாம். அவற்றுள் சில ஆப்பிள்கள், ஆரஞ்சுகள், திராட்சைகள், ஸ்டாபெரிகள், தர்பூசணிகள் போன்ற நீர் சத்து அதிகமாக உள்ள இந்த வகையான பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். நம் உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவையான அளவு கிடைக்கும் வரை அதிக அளவு பழங்களை எடுத்துக் கொள்ளலாம். 

        இந்த பழங்களில் உள்ள நார்ச்சத்து நமக்கு அப்படியே கிடைக்க வேண்டும் என்றால் அதை ஜூஸ் வடிவாக குடிக்க கூடாது. அதை அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து நம் உடலுக்கு அப்படியே கிடைக்கும்.

GM டையட் நாள் 2 (காய்கறிகளை மட்டுமே உண்ணுதல்)

only vegetables

       GM டையட்டின் இரண்டாவது நாளான இந்த நாளில் நாம் காய்கறி மட்டுமே சாப்பிட வேண்டும். காய்கறிகளை தவிர மற்ற உணவுகளை தவிர்க்கவும். கீரை, கேரட், வெள்ளரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளை பச்சையாகவோ அல்லது சாலட் வடிவிலோ சேர்த்துக் கொள்ளலாம். 

      இதில் சிறிது மிளகு தூள் சேர்த்து கூட சாப்பிடலாம். ஆனால் முக்கியமான ஒன்று உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த உருளைக்கிழங்கில் மாவு சத்தானது அதிகமாக உள்ளது. காய்கறிகளை சூப் வடிவிலும் சாப்பிடலாம். காய்கறிகளை தவிர மத்த எந்த ஒரு பொருளையும் சேர்த்து உண்ணக்கூடாது ஏனென்றால் இது தேவையற்ற கலோரியை உருவாக்கலாம்.

GM டையட் நாள் 3 (பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்ணுதல்)

fruits and vegetables 1 GM

      GM டையட்டின் மூன்றாவது நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையும் சேர்த்து சாப்பிடலாம். இதில் நாம் பலவிதமான வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்களை பெறுவது உறுதி செய்யப்படுகிறது. பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். 

      அவற்றை சமைத்தோ அல்லது பச்சையாகவோ எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகளை சாலட் வடிவிலும், பழங்களை அப்படியே எடுத்துக் கொண்டால் அதில் உள்ள நார்ச்சத்தானது நம் உடம்பிற்கு அப்படியே கிடைக்கும். இவற்றில் வேறு எந்த ஒரு பொருளையும் சேர்க்க வேண்டாம் ஏனென்றால் இது தேவையற்ற கலோரிகளை உருவாக்கலாம்.

GM டையட் நாள் 4 (பால் மற்றும் வாழைப்பழம் எடுத்துக் கொள்ளுதல்)

milk and bananas 1 GM

        GM டையட்டின் நாலாவது நாளில் வாழைப்பழம் மற்றும் பால் மட்டுமே உட்கொள்ள வேண்டும். குறிப்பாக எட்டு முதல் பத்து நடுத்தர அளவிலான வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். ஒரு நாள் முழுவதும் மூன்று முதல் நான்கு கிளாஸ் பால் குடிக்க வேண்டும். இந்த வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. மேலும் இந்த பால் நமக்கு புரதம் மற்றும் கால்சியம் தருகிறது.

        முழு பாலில் அதிக அளவு கொழுப்பு சத்து இருக்கும். ஆதலால் குறைந்த கொழுப்புள்ள பாலை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நாள் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதற்கு தேவையான அளவு வாழைப்பழம் மற்றும் பாலை எடுத்துக் கொள்ளலாம்.

GM டையட் நாள் 5 (பிரவுன் ரைஸ், காய்கறிகள் மற்றும் சூப் வகைகளை எடுத்துக் கொள்ளுதல்)

tomato and brown rice

        GM டையட்டின் ஐந்தாவது நாளில் பிரவுன் ரைஸ், காய்கறிகள் மற்றும் சூப் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் பிரவுன் ரைஸ், பலவிதமான காய்கறிகள், தக்காளி மற்றும் ஒரு பவுல் காய்கறி சூப் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பிரவுன் ரைஸ்சில் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், நார்ச்சத்துக்கள் கிடைக்கிறது. 

        காய்கறி சூப் ஆனது நமது உடலை நீரேற்றம் ஆக வைத்திருக்க உதவுகிறது. பொரித்தல் மற்றும் வறுத்தல் போன்ற அதிக கலோரியை உருவாக்கும் முறையை தவிர்த்து வேகவைத்து உண்பது நல்லது.

        ஐந்தாவது நாள் நமக்கு அதிக அளவு புரதம் தேவைப்படுவதால் மெலிந்த புரதம் நிறைந்த கோழி அல்லது மீன் போன்ற உணவுப் பொருட்களை சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

GM டயட் நாள் 6 (மெலிந்த புரதம் நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுதல்)

lean protein food

        GM டையட்டின் ஆறாவது நாளில் பிரவுன் ரைஸ், காய்கறிகள் மற்றும் கோழி அல்லது மீன் போன்ற மெலிந்த புரதம் நிறைந்த உணவுகளை தேவையான அளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். ஒரு வேளை பிரவுன் ரைஸ், அதிக அளவு காய்கறிகள் சமைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். மேலும் மெலிந்த புரதம் நிறைந்த உணவான மீன் மற்றும் கோழி இறைச்சியை தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். 

       இந்த பிரவுன் ரைஸ் நம் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் தருகிறது. காய்கறிகள் நமக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்களை தருகிறது. மேலும் கோழி அல்லது மீன் போன்ற மெலிந்த புரதம் நிறைந்த உணவானது அத்யாவசிய அமினோ அமிலங்களை வழங்குகிறது. இந்த உணவுப் பொருட்களை ஆரோக்கியமான முறையில் அதிக அளவு கலோரியை உருவாக்காத முறையில் சமைத்து உண்பது நல்லது.

GM டையட் நாள் 7 (பழச்சாறு மற்றும் காய்கறிகள் சூப் எடுத்துக் கொள்ளுதல்)

juice and soup

       GM டையட்டின் ஏழாவது நாளான இறுதி நாள் பழச்சாறுகள் மற்றும் காய்கறிகள் சூப் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு சாறு, ஆப்பிள் சாறு அல்லது திராட்சை சாறு போன்ற பல வகையான பழச் சாறுகளை குடிப்பதன் மூலம் நமக்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கின்றது. பழச்சாறுகள் மற்றும் காய்கறிகள் சூப் நமது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், கூடுதல் ஊட்டச்சத்துக்களை நமக்கு தருவதற்கும் பயன்படுகிறது. ஏழாவது நாளில் எந்த ஒரு திடமான உணவையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

GM டையட்டின் நன்மைகள்

  • GM டையட் நமக்கு விரைவான உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  •  வாரத்தில் நாலு முதல் ஐந்து கிலோ வரை எடை குறைக்க உதவுகிறது.
  •  இது மிகவும் ஒரு எளிமையான டையட் முறையாகும்.
  •  இதன் டையட் மூலம் நாம் ஆரோக்கியமான உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவு எடுத்துக்கொள்கிறோம்.

GM டையட்டின் தீமைகள்

  • விரைவான weight loss பெரும்பாலும் நிலையானது அல்ல ஏனெனில் இந்த டையட் முடிந்த பிறகு நாம் வழக்கமான உணவு சாப்பிட ஆரம்பித்தவுடன் குறைந்த எடையானது மீண்டும் ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
  • இதில் சில பக்க விளைவுகளும் ஏற்படும் தலைவலி, தலைச்சுற்றல், சோர்வு மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுத்தவும்.
  • இந்த உணவு முறையானது அனைவருக்கும் பொருந்தாது ஏனென்றால் சில மருத்துவ நிலைமைகள் அல்லது சில மருந்துகள் எடுப்பவர்களுக்கு புதிய உணவுத் திட்டத்தை தொடங்குவது சிறிது கடினம்.
  • இது ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் முக்கியமாக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவு நமக்கு கிடைக்காது.

Share

Leave a Reply