Skin Brightening | 3 days Challenge | Anti Aging | Anti Pigmentation

Skin Brightening | 3 days Challenge | Anti Aging | Anti Pigmentation

இன்னிக்கு நம்ப முகம் ரொம்பவும் அழகாகவும் பொலிவுடனும் இருக்க கொஞ்சம் Tips and Face pack தான் சொல்லப்போறேன்.

பொதுவா பெண்களுக்கு கலர் ஆகணும்னு ஆசை அதிகமா இருக்கும். அது மட்டும் இல்லாம, நம்ம Face வந்து Fat இல்லாமல் ஸ்லிம்மா இருக்கணும் நினைப்பாங்க. அப்போ நான் சொல்லப்போற இந்த Face pack & Tips அ ட்ரை பண்ணுங்க. இதுல எந்த Side Effect ம் இருக்காது..

Face pack 1

அதிமதுரம் பொடி 2 ஸ்பூன் எடுத்துக்கோங்க, அதிமதுரம் பொதுவாய் எல்லாருக்குமே Suit ஆகும். இது Sensitive Skin இருக்கிறவங்களும் இதை ட்ரை பண்ணலாம். இந்த அதிமதுரம் உங்க Skin க்கு நல்ல Color கொடுக்கும். Sun Damage ல இருந்து உங்களை பாதுகாக்கும். இது கூடவே லெமன் 2 ஸ்பூன் use பண்ணுங்க லெமன் ல வைட்டமின் C இருக்கு. இது உங்க Skin Irritation, Infections ல இருந்து பாதுகாக்கும். உங்க Skin ல இருக்கற Dead Cells யை Remove பண்ணும். அப்புறம் உங்க Skin ல இருக்கிற அழுக்குகளை Clear பண்ணும்.

அதிமதுரம் ரெண்டு ஸ்பூன் அப்புறம் லெமன் ரெண்டு ஸ்பூன் எடுத்து நல்லா மிக்ஸ் பண்ணுங்க. இத உங்க Face ல apply பண்ணுறதுக்கு முன்னாடி, உங்க முகத்தை நல்லா கழுவி விடுங்க. அப்புறம் இந்த Face pack யை உங்க Face ல apply பண்ணிடுங்க. 15 to 1/2hr உங்க முகத்துல அப்படியே இருக்கட்டும், அப்புறம் ஒரு நல்ல Cold Water ல Face Wash பண்ணுங்க. வாரத்துல மூணு நாள் இந்த Face Pack யை Apply பண்ணுங்க. நல்ல Result கிடைக்கும்.

Face pack 2

உங்க Face நல்ல Bright அ  ஆக வைட்டமின்  C ரொம்ப முக்கியம். வைட்டமின்  C அதிகமாக ஆரஞ்சு தோல் ல இருக்கு. ஆரஞ்சு தோலை நன்கு காய வைத்து அரைத்து எடுங்கள், அது கூட கஸ்தூரிமஞ்சள், முல்தானி மட்டியை சேர்த்துக்கோங்க, லெமன் ஒரு ஸ்பூன் இதெல்லாம் மிக்ஸ் பண்ணிக்கோங்க. இத Face ல Apply பண்ணறதுக்கு முன்னாடி, உங்க Face யை நல்ல Wash பண்ணிக்கோங்க. அப்புறம் இந்த Face Pack யை  apply பண்ணுங்க. 15 to 1/2hr உங்க முகத்துல அப்படியே இருக்கட்டும். அப்புறம் ஒரு நல்ல Cold Water ல Face Wash பண்ணுங்க. வாரத்துல மூணு நாள் இந்த FacePack யை Apply பண்ணுங்க. நல்ல Result கிடைக்கும்.

 இந்த ஆரஞ்சு தோலில் இருந்து உங்க முகத்துக்கு தேவையான Toner யை நம்ப Ready பண்ணலாம். ஆரஞ்சு தோலை நல்லா தண்ணீரில் கொதிக்கவிட்டு, அதோட கலர் வந்து நல்ல ஆரஞ்சு கலர் வரணும்.  தண்ணிய நல்லா கொதிக்க விடுங்க.  அப்புறம் அந்த தண்ணிய ஆறவிட்டு வடிகட்டி யூஸ் பண்ணுங்க இப்போ உங்க முகத்திற்கு தேவையான Toner Ready.

Face pack 3

உங்க Face நல்ல Whitening ஆகணும்னா அப்போ கண்டிப்பா, இந்த Face Pack யை ட்ரை பண்ணுங்க..  அதுக்குத் தேவையான பொருட்கள் என்ன அப்படிங்கறது பார்க்கலாம்..

1- பச்சை பயிறு

2- ஆரஞ்சு தோல்

3- கஸ்தூரி மஞ்சள்

4- துளசி

5- கடலைப் பருப்பு

6- வேப்பிலை

7- வெட்டிவேர்

8- லெமன்

9- ரோஸ் வாட்டர்

இது எல்லாமே நல்லா அரைச்சு லெமன் ரெண்டு ஸ்பூன்,  ரோஸ் வாட்டர் ல  வாஷ் பண்ணி உங்க முகத்துக்கு Apply பண்ணுங்க. 20 to 40 mints உங்க முகத்துல அப்படியே இருக்கட்டும்.  இந்த Pack நல்ல Dry ஆனதும், கொஞ்சம் தண்ணி எடுத்து உங்க முகத்துல நல்லா ரெண்டு நிமிஷம் Scrub பண்ணுங்க. அப்புறம் நல்லா முகத்தை கழுவி விடுங்கள். இப்படி பண்றப்ப உங்க முகம்  நல்லா Whitening ஆகவும் உங்க முகத்துல இருக்கற TONE ம் Remove ஆயிடும். மறக்காமல் நான் சொன்ன இந்த Face Pack யை ட்ரை பண்ணுங்க, நல்ல Result கிடைக்கும். இதுல எந்த Side Effect ம் இருக்காது.

நன்றி !!

Share

Leave a Reply