Worried-about-your-hair-loss-Try-these-3things

How to prevent hair loss? Try these 3things

முடி ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பது நாம எல்லாருக்கும் தெரியும். முடி இல்லாமல் இருபவர்களிடம் கேட்டால் தான் அதன் அருமை நமக்கு புரியும். அப்படி பட்ட இந்த முடியை நாம வளர வைக்க சில இயற்கையான முறைகளை பார்க்கலாம் .

பொதுவாகவே ஆண்கள் பெண்கள் இருவருக்கும் முடி தான் அழகு தரும். நாம் என்னதான் செய்தாலும் முடி உதிர்தல், இளநரை, வறண்ட கூந்தல், கலையிழந்தா கூந்தல் பிரச்சனைகள் சுத்தி சுத்தி வரும்.

முடி உதிர்வு எதனால் வேண்டுமானாலும் இருக்கலாம். பொடுகு, கர்ப்ப காலத்திற்கு பிறகு முடி உதிர்தல், நாம் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்த நீரிலிருந்து திடீரென வேறு நீருக்கு மாறுதல், மன அழுத்தம், வேலை அழுத்தம் உடம்பில் உள்ள சத்துக்கள் குறைவாக இருப்பது என இப்படிப் பல பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம்.

நம் தலையில் ஒரு லட்சத்திற்கும் மேல் முடி இருக்கும், அதிலிருந்து தினமும் 100 க்கும் மேற்பட்ட முடிகள் உதிரும், அது இயற்கையான ஒன்று தான்.

இப்ப இருக்கும் காலத்தில் பெண்கள் கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது இல்லை. கெமிக்கல் கலந்த பொருள்களை தான் அதிகமாக உபயோகிக்கிறார்கள். அது தற்சமயம் அவர்களது முடியை அழகுப்படுத்திக் காட்டும் ஆனால் அது நிரந்தரம் இல்லை.

முடி உதிர்வது எப்படி தடுக்கலாம்?

வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் மசாஜ், நம் முடிக்கு மிகவும் சிறந்தது. இது நமது மன அழுத்தத்தையும் சரி செய்து விடும். வாரத்தில் மூன்று முறை அல்லது நான்கு நாட்களுக்கு தலைக்கு குளிக்க, ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே மசாஜ் பண்ணி விடுங்கள். தேங்காய் எண்ணெய் கூட ஆலிவ் ஆயில், இல்லை என்றால் லேவண்டர் ஆயில் யூஸ் பண்ணி மசாஜ் பண்ணுங்க. உங்க கூந்தல் பளபளவென மாறுவதுடன் இல்லாமல் சீக்கிரம் வளரவும் உதவும்.

Egg mask

முட்டையை விட உங்கள் முடிக்கு ஒரு நல்ல போஷாக்கு இருக்கவே முடியாது. முட்டையில் இருக்கிற புரோட்டின் உங்கள் முடிக்கு நல்ல போஷாக்கு அளித்து முடியை வேகமாக வளர உதவுகிறது. முட்டையோட வெள்ளைக்கருவுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து உங்கள் கூந்தலுக்கு அப்ளை பண்ணி விடுங்கள். குறைந்தது அரை மணி நேரமாவது உங்கள் தலையில் அப்படியே முட்டை மாஸ்க் இருக்கட்டும். அப்புறம் நல்ல மைல்டான ஷாம்பு போட்டு வாஷ் பண்ணுங்கள். மாதத்திற்கு இரண்டு முறை இப்படி யூஸ் பண்ணுங்க, நல்ல முடி வளர்ச்சி இருக்கும். உங்கள் கூந்தலுக்கு தேவையான புரோட்டின் போஷாக்கும் கிடைக்கும்.

Onion mask

நம் உடம்பில் இயற்கையாகவே இருக்கும் ஹைட்ரஜன் பெராக் ஆக்சைடு அதிக அளவில் சுரக்கும் போது சின்ன வயதிலேயே முடி நரைக்க தோன்றும். வெங்காயச் சாறு நரை முடியைத் தடுக்க பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யும். உங்கள் கூந்தலின் அளவிற்கேற்ப வெங்காயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக ஆக்குங்கள் நல்ல மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் தண்ணீர் சேர்க்கக் கூடாது. ஒரு வெள்ளை துணியில் அழைத்து வைத்து வெங்காயத்தை பிழிந்தால் சாறு கிடைக்கும். ஒரு நல்ல பஞ்சு கொண்டு வெங்காயச்சாறு எடுத்து உங்கள் முடியின் வேர் பகுதியில் நன்றாக படும்படி வைக்க வேண்டும்.

இப்படி எல்லா பகுதியிலும் படும்படி வைக்க வேண்டும். முதலில் இந்த மாஸ்க்கை 20 நிமிடம் வரை உங்கள் தலையில் காயவைக்க விடுங்கள், படிப்படியாக ஒரு மணி நேரம் வரைக்கும் உலர விடலாம். இதனால் உங்களுக்கு எந்த சைட் எஃபெக்ட் வராது. வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு வாஷ் பண்ணுங்கள், வாரத்தில் இரண்டு முறையாவது யூஸ் பண்ணுங்க இப்படி செய்து வந்தால் உங்கள் கூந்தல் உதிர்வு கட்டுப்படும். லங்கை பிரச்சினை படிப்படியாக மறையும். நரைமுடி புதிதாக வராது. 

வெந்தய ஷாம்பு

வெந்தயம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், சருமத்திற்கு நல்ல அழகையும் தரும். வெந்தயத்தை முன்தினம் இரவு கால் டம்ளர் நீரில் 3 ஸ்பூன் அளவு எடுத்து ஊற வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் வெந்தயத்தை ஊற வைத்த நீரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்க அரைக்க தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே போகும். மீண்டும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து விட வேண்டும். இப்படி அரைக்கும் பொழுது நுரை அதிகமாக பொங்கி சிம்புவாக வரும், இந்த ஷாம்புவுடன் புளித்த தயிர் ஒரு கரண்டி விட்டு மீண்டும் அரைக்கவும். இப்போ ஷாம்பு ரெடி ஆகிவிட்டது. உங்களுக்கு வாசனை வேண்டுமென்றால் பன்னீர் எஸ்என்ஸ் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்படி நீங்கள் தொடர்ந்து உபயோகிக்கும் பொழுது உங்கள் கூந்தலுக்கு முதலில் நல்ல வலு கிடைக்கும். கூந்தல் உதிர்வை தடுக்கும், உஷ்ணத்தால் முடி வளர்வதை தடுக்கும். போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இளநரை பிரச்சினைக்கு உள்ளாகும் கூந்தலுக்கு தேவையான ஊட்டச் சத்து கிடைப்பதால் இளநரை கருமையாகும், வளர்ச்சியும் கிடைக்கும்.

கண்டிப்பாக இந்த மூன்று விஷயங்களையும் உபயோகித்து பாருங்கள், உங்கள் கூந்தல் நல்ல வலுவும் ஆரோக்கியமும் அழகும் பெறும்.

நன்றி !!

Share

Leave a Reply