korean skin care routine

This Korean Skin Care Routine will make your face white and shiny like glass.

உங்கள் முகம் கருப்பாக இருக்கிறது என்று கவலைப்படுகிறீர்களா!! இனி அந்த கவலை வேண்டாம் உங்கள் முகம் வெண்மையாகவும் கண்ணாடி போல் ஜொலிக்கவும் இந்த Korean skin care routine ஃபாலோ பண்ணுங்க.

           நம் அனைவரும் கொரியன் மக்களை பார்த்திருப்போம் அவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு வெள்ளையாகவும், பளபளவென்றும் இருக்கிறார்கள் ஏதாவது மேக்கப் போடுவார்களா அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்களா என்று அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா அவர்கள் தினமும் பயன்படுத்தும் இந்த ஸ்கின் கேர் ரொட்டீன் தான்.

          நீங்களும் இந்த 10 குறிப்புகளை தினமும் பயன்படுத்தி வந்தால் உங்களது முகமும் வெள்ளையாகவும், பளபளவென்றும் ஜொலிக்கும். இப்பொழுது நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி இந்த ஸ்கின் கேர் ரொட்டீனை செய்யலாம் என்று பார்ப்போம். 

korean skin care routine 1 korean skin care

 1.ஆயில் கிளன்சிங்

           ஆயில் கிளன்சிங்  செய்வதற்கு நமக்கு தேவையான பொருட்கள் பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், விட்டமின் ஈ மாத்திரை. இப்பொழுது ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு விட்டமின் ஈ மாத்திரை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும். 

           இப்பொழுது நமக்கு ஆயில் கிளன்சிங் தயாராகி உள்ளது. இந்த பேஸ்ட்டை எடுத்து நமது முகத்தில் சுழற்சி முறையில் ஒரு நிமிடம்  மசாஜ் செய்யவும். இப்போது முகத்தை துடைத்துக் கொள்ளவும். இந்த ஆயில் கிளன்சிங் நம் முகத்தில் உள்ள மாசுக்களையும், தேவையில்லாத இறந்த செல்களையும் போக்கிறது.

2.ஃபோம்  கிளன்சிங்

             இது செய்வதற்கு ஒரு பவுலில் சிறிது ரோஸ் வாட்டர், 1 ஸ்பூன் தேன், விட்டமின் ஈ மாத்திரை, ஒரு ஸ்பூன் டீட்ட்ரீ ஆயில் எடுத்து கொள்ளவும். பிறகு நீங்கள் உபயோகிக்கும் மில்க் கலந்த சோப்பில் சிறிதளவு துருவிக் கொள்ளவும். இந்த சோப்பில் சிறிது தண்ணீர் கலந்து  ஊருக்கி கொள்ளவும். இப்போது இந்த சோப் வாட்டரில் அந்த கலவையை கலந்து கொள்ளவும். இந்த சோப் வாட்டரை ஃபேஸ் வாஸ் ஆக பயன்படுத்தவும்.

3.எக்ஸ் போலியன்ட் ஸ்க்ரப்

              நாம் உபயோகிக்கும் கடலை மாவும், பாசிப்பயிறு மாவும் ஒரு நல்ல ஸ்கிரப் ஆக விளங்குகிறது. இதை நாம் ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.

4.டோனர்

               நாம் உபயோகிக்கும் ரோஸ் வாட்டர் நல்ல டோனர் ஆக பயன்படுகிறது. தினமும் இரண்டு முறை இந்த டோனரை பயன்படுத்தினால் நமது தோல் மிகவும் மென்மையாக மாறும்.

 5.எசன்ஷியல் ஆயில்

             இதற்கு நாம் ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு ஆயில், ஒரு ஸ்பூன் டீட்டரீ ஆயில், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், விட்டமின் ஈ மாத்திரை ஒன்று கடைசியாக இதில் ரோஸ் வாட்டர் சேர்த்து ஷாம்பு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இது நம் முகத்தில் உள்ள கருமை நிறத்தை குறைக்க பயன்படுகிறது.

 6.விட்டமின் சி சீரம்

               மிகவும் முக்கியமான ஒரு குறிப்பாகும். ஒரு பவுலில் மூன்று ஸ்பூன் ஆரஞ்சு சாற்றை எடுத்துக் கொள்ளவும் அதில் சிறிது கற்றாழை ஜெல் கலந்து எடுத்துக் கொள்ளவும். இதை ஃப்ரிட்ஜில்  இரண்டு வாரம் வரை வைத்து கொள்ளலாம். இதை உபயோகிப்பதால் முகம் பொலிவு பெறும்.

7.சீட் மாஸ்க்

              அரிசி ஊற வைத்த நீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் மூன்று டேபிள் ஸ்பூன் அரிசி நீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் தேனை கலந்து கொள்ளவும். இதில் பிளைன் சீட் மாஸ்க்கை நனைத்து முகத்தில் போட்டுக் கொள்ளவும். பத்து நிமிடம் அப்படியே விடவும். இது உங்கள் முகத்தை வெண்மையாக்க  பயன்படுகிறது.

8.அண்டர் ஐ கிரீம்

               ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லில் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவு இவைகளை நன்றாக கலந்து ஐ கிரீம் ஆக பயன்படுத்தலாம். இது கண் கருவளையம் சரி செய்கிறது.

9.மாய்ஸ்ட்ரைசர்

               ஆளி விதையை எடுத்து சிறு தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். பின்பு அந்த ஜெல்லை சிறிது எடுத்து ஒரு ஸ்பூன் அரிசி மாவு கலந்து உபயோகிக்கலாம். இது நமது தோலை இறுக்கமாக்குகிறது. ஆதலால் நாம் பார்ப்பதற்கு இளமையாக தோன்றுவோம்.

10.சன் ஸ்கிரீன்

                இது மிகவும் முக்கியமான ஒன்று தோல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஒரு ஸ்பூன் பாதாம் ஆயில் உடன் ஒரு ஸ்பூன் கேரட் சாறு சேர்த்து கலக்கவும். அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது நமது சன் ஸ்கிரீன் தயார்.

நன்றி !!

Share

Leave a Reply