hair loss reasons

Unaware of the causes of hair loss reasons

முடி விடாமல் கொட்டிக் கொண்டே இருக்கிறதா? அதற்கான காரணங்கள் தெரியவில்லையா? முடி உதிர்வதற்கான காரணங்களை நாம் இப்பொழுது பார்ப்போம்.

         முடி என்பது ஒரு மனிதரின் அழகை நிர்ணயிக்கும் ஒரு அங்கமாக விளங்குகிறது. அது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. இப்போ உள்ள காலகட்டங்களில் முடி உதிர்வு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நிறைய காரணங்கள் உள்ளது வாருங்கள் அந்த காரணங்களை தெளிவாக பார்ப்போம்.

முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள்

        முடி உதிர்வை அலோபீஸியா என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த முடி உதிர்வானது மரபியல் காரணங்கள், வைட்டமின் குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் உட்பட பல காரணங்களை கொண்டது.

ஹார்மோன் மாற்றங்கள்

         கர்ப்ப காலத்தில் அல்லது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் முடி உதிர்வை ஏற்படுத்தும். ஹார்மோன் மாற்றங்கள் இரண்டு வழிகளில் முடி உதிர்வை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு சில ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கும். ஆதலால் அவர்களுக்கு முடி அடர்த்தியாக வளரும் அதுவே கற்ப காலம் முடிந்த பின்பு அந்த ஹார்மோன்கள் இயல்பு நிலைக்கு வரும்போது  முடி உதிர ஆரம்பிக்கும். இது ஒரு தற்காலிக முடி உதிர்வு ஆகும். 

        மாதவிடாய் நிறுத்தம் முடி உதிர்தலுக்கு காரணமான ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும். உங்களுக்கு மாதவிடாய் நிற்கும் போது அவர்களின் உடல்கள் குறைவான ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வதால் முடி மெலிந்து விடும். இந்த வகை முடி உதிர்தல் மிகவும் பொதுவான ஒரு செயலாகும்.

மரபியல் காரணம்

           உங்கள் குடும்பத்தில் யாருக்காவது முடி உதிர்வு பிரச்சினை இருந்திருந்தால் அது உங்களுக்கும் வரும். இந்த வகை முடி உதிர்வை ஆண்ட்ரோஜெனடிக் அலோபீஸியா என்றழைக்கப்படுகிறது. இது நம் உடலில் ஆண்ட்ரோஜென்கள் அதாவது ஆண் ஹார்மோன்கள் இருப்பதால் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் ஆனது பயிரிலைகளை சுருங்கச் செய்து முடி உதிர வழி வகிக்கிறது. ஆண்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. பெண்களையும் பாதிக்கலாம்.

ஹேர் ஸ்டைலிங்

hair styling

           முடியை இழுக்கும் சிகை அலங்காரங்கள், இறுக்கமாக போடப்படும் போனிடைல்  அல்லது இறுக்கமாக பின்னப்படும் ஜடை போன்றவை முடி உதிர்வை ஏற்படுத்தும். நம் முடியை இறுக்கமாக இழுக்கும்போது  முடி உதிர்வுக்கு நாமே ஒரு நிலை வழி வகுப்பதற்கு சமம். 

         இந்த சிகை அலங்காரங்களை அடிக்கடி அல்லது நீண்ட காலத்திற்கு அணிவது முடி உதிர்வு அபாயத்தை அதிகரிக்கும். ஆதலால் நம் கூந்தலுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதவாறு உள்ள சிகை அலங்காரத்தை தேர்வு செய்து அதை பயன்படுத்த வேண்டும். நாம் தினமும் செய்யும் ஹேர் ஸ்டைலினால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்று தெரிந்தால் அதை நிறுத்திவிட்டு வேறொரு முறையை பயன்படுத்த வேண்டும்.

உடல் அல்லது உணர்ச்சியின் மூலம் ஏற்படும் அழுத்தம்

           உடல் அல்லது உணர்ச்சியின் மூலம் ஏற்படும் மன அழுத்தம் முடி உதிர்களை ஏற்படுத்தும். மேலும் இந்த வகை முடி உதிர்தல் டெலோஜென் எஃப்ளுவியம் என்று அழைக்கப்படும முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. அறுவை சிகிச்சனால் ஏற்படும் உடல் அழுத்தத்தின் காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படுகிறது மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவத்தால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படுகிறது. ஆதலால் மன அழுத்தத்தை குறைத்துக் கொண்டு எதை பற்றியும் நினைக்காமல் மனதை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மருந்துகள்

medical reason 1 hair loss reasons

           உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்தப் பக்க விளைவுகள் முடி வளர்ச்சி சுழற்சியை மாற்றி முடி உதிர்வை ஏற்படுத்துகிறது.

மருத்துவ ரீதியான நிலைகள்

          இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை மற்றும் ஹைப்போ தைராய்டிசம் போன்ற சில மருத்துவ ரீதியான நிலைகள் முடி உதிர்வை ஏற்படுத்தும்.

  • இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை

              ரத்த சோகை என்பது உடலில் போதுமான ரத்த சிவப்பணுக்கள் இல்லாத ஒரு நிலை ஆகும். முடி உதிர்தலுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

  • ஹைபோ தைராய்டிசம்

              இது ஒரு வகையான தைராய்டு சுரப்பி. முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது தைராய்டு ஹார்மோன்கள். ஆனால் இந்த தைராய்டு சுரப்பி ஆனது  முடி வளர்ச்சிக்கு தேவையான தைராய்டு ஹார்மோன்களை அதிக அளவு உற்பத்தி செய்வதை தடுக்கிறது. தைராய்டு ஹார்மோன்களின் பற்றாக்குறையினால் முடி உதிர்வு ஏற்படுகிறது.

  • டெலோஜேன் எஃப்ளூவியம்

              இது ஒருவருக்கு அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் உடல் அழுத்தம் அல்லது அதிர்ச்சிகரமான சம்பவத்தில் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக முடி உதிர்வு ஏற்படுகிறது.

முதுமை

           நாம் வயதாகும்போது நம் முடியானது மெலிந்து எளிதில் உதிர ஆரம்பிக்கும். இது ஒரு இயல்பான செயலாகும். இதை முதுமை முடி உதிர்வு  அல்லது ஆண்ட்ரோஜெனடிக் அலோபீசியா என்றழைக்கப்படுகிறது. இது மரபியல் மற்றும் ஹார்மோன் மாற்றங்களின் கலவையால் ஏற்படுகிறது. இவை பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு மிகவும் பொதுவான ஒன்றாக அமைகிறது. முதுமையின் போது நம் முடியானது உதிர்ந்து காணப்படும் அல்லது மெலிந்து காணப்படும்.

நன்றி !!

Share

Leave a Reply