home remedies for cure dandruff

Home remedies to get rid of dandruff permanently

பொடுகு எதனால் வருகிறது அதை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றி இனி பார்ப்போம்.

பொடுகு(Dandruff) என்றால் என்ன?

       பொடுகு என்பது ஒரு நோய் அல்ல இது ஒரு சாதாரண நிலையாகும். உச்சந்தலையில் இறந்த சரும செல்கள் அதிக அளவில் வெளியேறுகிறது. இதன் காரணமாக உச்சந்தலையில் முடி மற்றும் தோள்களில் காணப்படும் வெள்ளை அல்லது மஞ்சள் நிற செதில்கள் உருவாகின்றன. இதை பொடுகு என்று கூறப்படுகிறது.

பொடுகு வருவதற்கான காரணங்கள்

மலாசீசியா

      இது இயற்கையாகவே நமது உச்சந்தலையில் உள்ள ஈஸ்ட் போன்ற ஒரு பூஞ்சை ஆகும். இந்த பூஞ்சை ஆனது அதிகமாக வளரும் போது உச்சந்தலையில் எரிச்சலை உருவாக்கி பொடுகை ஏற்படுத்துகிறது.

முடி பராமரிப்பு(Hair care) பொருட்கள்

      சில முடி பராமரிப்பு பொருட்களில் உள்ள ரசாயனமானது ஒரு சிலருக்கு சேராமல் போகலாம். அதன் காரணமாக தலையில் அரிப்பு மற்றும் எரிச்சல் உருவாகலாம். இதனால் பொடுகு உருவாகிறது. 

வறண்ட சருமம்

       வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பொடுகு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஏனென்றால் அவர்களின் உச்சந்தலையில் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான அளவு இயற்கை எண்ணெய் உற்பத்தி செய்வதில்லை. ஆதலால் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது. இதன்  காரணமாகவும் பொடுகு உருவாகிறது.

ஊறல் தோலழற்சி(seborrheic dermatitis)

      இது ஒரு பொதுவான தோல் நிலை ஆகும். இது தோல் சிவத்தல், அரிப்பு மற்றும் ஊறுதல் போன்றவற்றை ஏற்படுகிறது. பொதுவாக இது உச்சந்தலையை பாதிக்கிறது. இது மலாசீசியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக பொடுகு உருவாகிறது.

மருத்துவ நிலைமைகள்

      சிலருக்கு இயற்கையாகவே தடிப்பு தோல் அலர்ஜி அல்லது அரிக்கும் தோல் அலர்ஜி இருக்கும். இந்த வகையான மருத்துவ நிலமைகளும் பொடுகுக்கு காரணமாகும்.

பொடுகு வராமல் தடுக்கும் வழிமுறைகள்

தொடர்ச்சியாக முடி அலசுதல்

      தலைமுடியை மிதமான ஷாம்புவை கொண்டு தவறாமல் அலசி சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஏனென்றால் அவை நமது உச்சந்தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்களை அகற்றி பொடுகை குறைக்க உதவுகிறது.

முடி பராமரிப்பு(Hair care) பொருட்களை தவிர்த்தல்

      ஆல்கஹால் உள்ள முடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை நமது உச்சந்தலையை வறண்டத்தன்மையாக மாற்றி பொடுகை உருவாகும். ஆதலால் முடி பராமரிப்பு பொருட்களை தவிர்ப்பது நல்லது. முடி சாயங்கள் மற்றும் ரசாயன சிகிச்சைகளையும் மேற்கொள்ளக்கூடாது.

பொடுகு எதிர்ப்பு(Anti-dandruff) ஷாம்பு

       மார்க்கெட்டில் பொடுகு தொல்லைக்கு ஏற்றவாறு நிறைய ஆன்ட்டி டான்ரப் ஷாம்புகள் உள்ளது. நாம் அந்த ஷாம்புவை வாங்கும் போது முக்கியமாக Zinc pyrithione, Salicylic acid அல்லது Ketoconazole போன்ற பொருட்கள் உள்ள ஷாம்புகளை தேர்ந்தெடுப்பது நல்லது. இவை பொடுகு பிரச்சனைகளை சரி செய்கிறது.

உணவுமுறை

       வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சமச்சீர் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நமது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆதலால் பொடுகு வராமல் தடுக்க உதவியாக உள்ளது.

மன அழுத்தத்தை குறைத்தல்

       மன அழுத்தத்தின் காரணமாக நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமானது மிகவும் பலவீனமாக மாறுகிறது. இதனால் நமது உச்சந்தலையில் பொடுகு ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம்.

தோல் மருத்துவரை அணுகுதல்

       வீட்டு வைத்தியம் மற்றும் கடைகளில் வாங்கப்படும் பொருட்கள் பயனளிக்கவில்லை என்றால் தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனென்றால் அவ்வாறு அணுகுவதன் மூலம் அவர்கள் நமக்கு ஏற்றார் போல் மருந்துகளை பரிந்துரைக்கலாம் அல்லது பிற சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

பொடுகு தொல்லையை சரி செய்வதற்கான ஹோம் ரெமடி

home remedy

ஹோம் ரெமடி 1

      ஒரு கைப்பிடி வேப்பிலையில் சிறிது தேங்காய் பால் மற்றும் 4 முதல் 5 மிளகு ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து நமது உச்சந்தலையில் மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து முடியை அலச வேண்டும்.

ஹோம் ரெமடி 2

      2 ஸ்பூன் தயிர், சிறிதளவு கற்றாழை ஜெல் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக கலந்து நமது உச்சந்தலையில் மசாஜ் செய்து 10 முதல் 15 நிமிடம் கழித்து முடியை அலச வேண்டும்.

ஹோம் ரெமடி 3

      2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 கிராம்பு, சிறிது கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் ஊற வைத்த வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து நமது உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். பிறகு 15 முதல் 20 நிமிடம் கழித்து முடியை அலச வேண்டும்.

ஹோம் ரெமடி 4

      சுத்தமான தேங்காய் எண்ணெய் 2 முதல் 3 ஸ்பூன், துளசி மற்றும் கற்பூரவள்ளி இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து நமது  உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். பிறகு 20 நிமிடம் கழித்து முடியை அலச வேண்டும்.

     இவற்றுள் ஏதேனும் ஒரு ஹோம் ரெமடியை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தி வர பொடுகை சரி செய்யலாம்.

பொடுகு தொல்லையை சரி செய்வதற்கான ஹேர் ஆயில்

hair oil dandruff remedies

       500 ml சுத்தமான தேங்காய் எண்ணையை மிதமான தீயில் சூடு படுத்த வேண்டும். ஒரு பெரிய நெல்லிக்காய், ஒரு ஸ்பூன் வெந்தயம், 4 முதல் 5 சிறிய வெங்காயம், ஒரு சிறிய துண்டு கற்றாழை, 5 முதல் 6 மிளகு, ஒரு கைப்பிடி கருவேப்பிலை, 2 முதல் 3 செம்பருத்தி பூ, ஒரு கொத்து வேப்பிலை ஆகியவற்றை அந்த தேங்காய் எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் சூடு படுத்த வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் அந்த தேங்காய் எண்ணெயில் வெந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும். 24 மணி நேரம் இந்த பொருட்களை இந்த எண்ணெயில் ஊற வைத்து பிறகு அதை நன்றாக வடிகட்டி தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை நீங்கி முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

நன்றி !!

Share

Leave a Reply