tourist places in tanjavur

Best tourist spots in Thanjavur. Don’t miss these places!

சோழ தேசம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா தளங்களை பற்றி பார்ப்போம். அடுத்த முறை நீங்கள் தஞ்சாவூர் சென்றால் இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க.

            மிகவும் பழமை வாய்ந்த மாவட்டமாக உள்ளது. இப்போது இது மாநகராட்சியாக விளங்குகிறது. தஞ்சை என்ற பெயர் மருவி நாளடைவில் தஞ்சாவூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. சோழநாடு என்றும்  கூறுவார்கள். தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழ்கிறது. இங்கு நிறைய சுற்றுலா தளங்கள் காணப்படுகிறது. தஞ்சாவூர் சென்றால் மறக்காமல் இந்த இடங்களை சுற்றிப் பார்த்து வாருங்கள். வாருங்கள் இப்போது நாம் என்னென்ன சுற்றுலாத்தலங்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.

தஞ்சாவூர் பெரிய கோவில்

             தஞ்சை பெரிய கோவில் இதை பெருவுடையார் கோவில் என்றும் அழைப்பார்கள். கோயிலை பார்க்கும்போது ராஜராஜ சோழனின் கலைநயம் நன்றாக தெரியும். இந்த கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் யார் யார் இந்த கோயிலுக்காக வேலை செய்தார்களோ அவர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த கோயில் ஆனது உலக அதிசயத்தில் சேர்க்கப்படாத ஒரு கோயில் ஆகும். ஏனென்றால் இந்த கோயில் அந்த அளவிற்கு பிரமாண்டமானது.

            கோயில் மொத்த உயரமானது 216 அடி ஆகும். இந்த கோவில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் எடை கொண்ட  கல்லால் கட்டப்பட்டது. இங்குள்ள கோபுரம் 80 டன் எடை கொண்ட ஒற்றைக் கல்லில் உருவாக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் அனைத்தும் இன்றும் புதிது போன்ற தோற்றமளிக்கிறது. அந்தக் காலத்தில் எண்ணற்ற மூலிகைகளை பயன்படுத்தி இந்த ஓவியங்களை வரைந்து உள்ளன.

gangai konda chola puram

கங்கைகொண்ட சோழபுரம்

             ராஜேந்திர சோழன் கங்கையை வென்ற வெற்றியின் ஞாபகமாக கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை கட்டினார். இங்கு ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த சிங்கவாய் கிணறு உள்ளது. சிம்ம கிணறு என்று அழைப்பார்கள். சோழ மன்னர் கங்கை நீரை கொண்டு வந்து இந்த கிணற்றுத் தண்ணீரில் கலந்ததால் கங்கைகொண்ட சோழபுரம் என்று அழைக்கப்படுகிறார்கள். அதனால் இந்த கடவுளுக்கு கங்கைகொண்ட சோழீஸ்வரர் என்ற பெயர்.

சிவகங்கை பூங்கா

              இந்தப் பூங்காவானது தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் நகராட்சியால் அமைக்கப்பட்டது. இங்கு அமைந்துள்ள குளமானது சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் இதை சரியாக பராமரிக்காமல் விட்டனர். ஆனால் இப்பொழுது சிறுவர்களுக்கு ஏற்றவாறு அழகான பூங்காவாக மாற்றி உள்ளனர். இங்கு சிறுவர்களுக்கு தகுந்த  பொழுதுபோக்கு விளையாட்டுகள், படகு சவாரி, பொம்மை ரயில், விலங்கியல் தோட்டம், நூலகம் அமைந்துள்ளது

விஜயநகர் கோட்டை

               இந்த கோட்டையானது பெரிய கோவிலுக்கு பக்கத்தில் உள்ளது. நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்டது. இது ஒரு நல்ல உல்லாச சுற்றுலா தளமாக விளங்குகிறது. தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால், பெரிய நூலகம் ஆகியவை இங்குதான் அமைந்துள்ளது. இங்கு பல அரியவகை ஓவியங்களும் காணப்படுகின்றன. அந்தக் கால மன்னர்களின் கலை நயங்களை வெளிப்படுத்தும் அளவிற்கு ஓவியங்களும், சிற்பங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு இடமாக அமையும்.

தஞ்சை மாமணி கோவில்

               இந்த ஸ்தலமானது தஞ்சைக்கு அருகில் உள்ள வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது. இங்கு அருகருகே அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் திருக்கோவில், மணி குன்ற பெருமாள் கோவில், வீரசிம்ம பெருமாள் கோவில் ஆகியவை ஒரே தளமாக  விளங்குகிறது. இதுவே இதன் சிறப்பாகும்.

சுவாமிமலை கோவில்

               முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான நான்காம் படை வீடாக திகழ்கிறது இந்த சுவாமிமலை. இந்த கோயில் ஆனது திராவிட கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கும்பகோணத்தில் இருந்து வடகிழக்கில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்து அருளியதால் சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

thanjavur fort and beach

சரஸ்வதி மஹால் நூலகம்

               இந்த நூலகம் ஆனது சோழர்களால் தொடங்கப்பட்டு பிறகு தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மராட்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு இது பொது நூலகமாக அறிவிக்கப்பட்டது. அங்குள்ள கல்வெட்டு ஆதாரங்களின்படி ஆரம்ப காலத்தில் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு போன்ற 700 சுவடிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு நாளடைவில் 70 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட ஓலைச்சுவடிகள் பராமரித்து வரப்பட்டுள்ளன. நாளடைவில் மராட்டிய மன்னர்கள்  இந்த நூலகத்தை தன்னுடைமையாக்கி கொண்டு பிறகு அது அரசாங்கத்திற்கு கொடுத்தனர். இப்பொழுது அதை அரசாங்கம் பராமரித்துக் கொண்டு வருகிறார்கள்.

ஆலங்குடி குரு கோவில்

                அறிவு, கல்வி, ஞானம் இதற்கு அதிபதியான குரு பகவானுக்காக கட்டப்பட்ட கோயில். இது ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று தேவாரப் பாடல்கள் கூறப்படுகிறது. இது ஒரு சிறந்த வழிபாட்டு தலமாக விளங்குகிறது. அனைவரும் சிறப்பு வழிபாடு செய்ய இந்த கோவிலுக்கு வருவார்கள்.

தஞ்சாவூர் ராயல் அரண்மனை

                 இந்த அரண்மனை வளாகத்தில் தான் சரஸ்வதி மஹால் நூலகம், தொல்லியல் துறை அலுவலகம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், அரசு கல்லூரி ஆகியவை அமைந்துள்ளது. முதலில் இந்த அரண்மனையானது நாயக்க மன்னர்களால் தொடங்கப்பட்டு பின்னர் மராட்டிய மன்னர்களால் அவர்களின் கட்டிடக்கலை நுணுக்கங்களை பயன்படுத்தி சில பகுதிகள் கட்டப்பட்டது.பிறகு காலப்போக்கில் ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களின் கட்டிடக்கலை நுணுக்கங்களை சிறிது அரண்மனையில் சேர்க்கப்பட்டது. இந்த அரண்மனை 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மணிமண்டபம், தர்பார், ஆயுத சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

சோழனின் மணிமண்டபம் மற்றும் மியூசியம்

                சோழர்களின் மணி மண்டபமும், மியூசியம் பக்கம் பக்கம் தான் அமைந்துள்ளது. இந்த இடம் மிகவும் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இங்கு அந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறை அவர்களின் அணிகலன்கள் பற்றி விளக்கமாக கூறியிருப்பார்கள். மேலும் ராஜராஜ சோழன் ஆண்ட பகுதிகளை பற்றி அறிவித்திருப்பார்கள். இங்கு வரலாறு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் தெரிவித்து இருப்பார்கள்.மேலும் அவர்கள் பயன்படுத்திய பண்ட பாத்திரங்கள், கட்டிய வரிகள், அப்போது உள்ள குடவோலை முறைகள் ஆகிய வகைகளைப் பற்றி தெளிவாக விவரித்துள்ளார்கள்.

தஞ்சாவூர் கலைக்கூடம்

                 200-க்கும் மேற்பட்ட கல் சிலைகள் உள்ளது. இங்கு ஆறாம் நூற்றாண்டில் மற்றும் சோழர் காலத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து கல் சிலைகளும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலைக்கு பின்னாடியும் பெரிய வரலாறு உள்ளது. அங்குள்ள சரபோஜி மகாராஜா அவர்களின் பளிங்கு கல் சிலையானது மிகவும் சிறப்பு மிக்கது. ஏனென்றால் அவரின் கல்லால் செய்யப்பட்ட தலைப்பாகையானது தனியே கழற்றி வைக்க முடியும். இந்த சிலையை இங்கிலாந்து மகாராணியார் சரபோஜி மன்னருக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தது. மேலும் இங்கு 200க்கும் மேற்பட்ட வெண்கல சிலையும் உள்ளது. அங்கு உண்மையான திமிங்கிலத்தின் எலும்பு கூடை பார்வைக்காக இன்னும் பாதுகாத்து வருகிறார்கள்.

மனோரா கடற்கரை மற்றும் மனோரா கோட்டை 

                 இந்த கடற்கரையானது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த கடற்கரை ஒரு சுற்றுலாத்தலமாக உள்ளது. அங்கு அதிக அளவு அலைகள் இருக்காது. முதலில் இங்கு படகு சவாரி இருந்தது. இப்போதெல்லாம் அங்கு ஜெல்லி மீன்கள் அதிகமாக உள்ளதால் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து என்று எண்ணி அரசாங்கம் படகு சவாரியை ரத்து செய்துள்ளது. அந்த கடற்கரையில் இருந்து பார்த்தாலே மனோரா கோட்டை தெரியும். 

                 இந்த கோட்டையானது சரபோஜி மன்னர் ஆட்சி செய்த காலத்தில் ஆங்கிலேயர்கள் நெப்போலியனை தோற்கடித்ததன் நிறைவாக சரபோஜி மன்னரால் இந்த கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டையானது எட்டடுக்கு மாடி கொண்ட ஒரு கட்டிடமாக விளங்குகிறது. அந்த காலத்தில் இந்த கோட்டையில் தான் போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குதிரைகள், ஆயுதங்கள் வைக்கப்பட்டன. சிறை கைதிகளையும் அங்கு தான் அடைக்கப்பட்டது.

நன்றி !!

Share

Leave a Reply