screw pine

Do you know why they don’t worship with screw pine (தாழம்பூ) for pooja?

       தாழம்பூவை (screw pine) தாழை மலர், பாண்டனஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இவை ஆசியா மற்றும் பசுபிக் தீவுகள் முழுவதும் உள்ள கடற்கரை ஓரங்கள், நீர்நிலைகளின் கரை ஓரங்களிலும் செழித்து வளர்ந்திருக்கும். பொதுவாக தாழம்பூவானது கடலோரப் பகுதிகளிலும், நீர்நிலைகளின் மணல் பாங்கான பகுதிகளிலும் செழித்து வளர்க்கக்கூடிய ஒரு தாவரமாகும். தாழம்பூவானது இதற்கென ஒரு தனித்துவமான தோற்றத்தையும், நறுமணத்தையும் கொண்டுள்ளது.

Screw Pine

      தாழம்பூ செடிகள் நீண்ட, கூர்முனை மற்றும் ரிப்பன் போன்ற இலைகளைக் கொண்டுள்ளது. இதன் தண்டு பகுதியை மையமாக வைத்து சுற்றி சுழல் வடிவில் வளரும். இதனுடைய இலைகள் பொதுவாக பளபளப்பாகவும், பச்சை நிறத்திலும் காணப்படும் மற்றும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றானது இதன் நறுமணம் ஆகும். இந்த சிறப்பம்சம் மிக்க நறுமணத்தைக் கொண்ட (Screw Pine Aroma)தாழம்பூவை வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்கும் மற்றும் பாரம்பரிய விழாக்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நம்மை மட்டுமல்ல பாம்புகளையும் ஈர்க்கும் வசீகர நறுமணம் கொண்டது இந்த தாழம்பூ.

Screw pine plant - aanmegam Story - Payanali

      இந்த வாசனை மிக்க தாழம்பூவை பெண்கள் தலையில் சூடி கொள்வார்கள். திருமணத்தின் போது மணப்பெண்ணின் கூந்தலை தாழம்பூவோடு சேர்த்து பின்னுவார்கள் மற்றும் திருவிழா காலங்களில் அலங்காரத்திற்கும் இந்த தாழம்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில பகுதிகளில் தாழம்பூவின் இலைகளைக் கொண்டு பாய்கள், கூடைகள் மற்றும் கூரைப் பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கப்பட்டு வருகிறது.

       தாழம்பூமானது நமது பாரம்பரிய மருத்துவத்தில் (Screw Pine medicine) முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வேர்கள், இலைகள் மற்றும் பூக்கள் போன்ற பல்வேறு பாகங்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. தாழம்பூவில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. ஆதலால் இவை உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் தாழம்பூவில் இருந்து எடுக்கப்பட்ட சாறில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை பாக்டீரியா மற்றும் பூச்சிகளை எதிர்த்து போராடும் பண்பு கொண்டுள்ளது. 

தொற்று நோய்களுக்கான சிகிச்சை அளிக்க தாழம்பூவின் சாறானது உதவுகிறது. உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தவும் இந்த தாழம்பூ உதவுகிறது. இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. ஆதலால் நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இது மிகவும் உதவுகிறது.

Screw pine medicine - aanmegam Story - Payanali

      இவ்வளவு சிறப்பு அம்சம் மிக்க தாழம்பூவை பூஜைக்கு எடுக்க வேண்டாம் என்று யாராவது கூறினால் நாம் என்னடா? இது இப்படி சொல்கிறார்கள் என்று ஆச்சரியமாக பார்ப்போம். ஏனென்றால் தூய்மையும், அழகும், தெய்வீக நறுமணமும் மிகுந்த இந்த மலரை பூஜைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு சில காரணங்கள் உண்டு. ஒரு பழைய கதையில் தாழம்பூவானது பொய் சாட்சி கூறியதாகவும் அதற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டுள்ளது என்றும் சிலர் நம்புகிறார்கள்.

Screw Pine [தாழம்பூ] பொய் சாட்சி சொன்ன கதை

       ஒருமுறை காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும், படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் போட்டி ஏற்பட்டது. அந்த போட்டியின் முடிவில் இருவரும் நான் தான் பெரியவன், நான் தான் பெரியவன் என்று வாக்குவாதம் செய்து கொண்டனர். அவர்களது வாக்குவாதத்தை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான் உங்கள் இருவரில் யார் பெரியவர்கள் என்று தெரிய வேண்டும் அவ்வளவுதானே? அதற்கு நான் ஒரு நிபந்தனை வைக்கின்றேன். எனது முடியையும், அடியையும் யார் முதலில் பார்த்து வருகிறார்களோ அவர்களே பெரியவர் என்று கூறினார்.

       இருவரும் அந்த நிபந்தனையை ஒப்புக்கொண்டு விஷ்ணு நான் உங்கள் அடியை காணப் போகிறேன் என்று வராக அவதாரத்தை எடுத்து அடியை நோக்கி சென்றார். பிரம்மரோ அன்னப்பறவையாக அவதாரம் எடுத்து அவரது முடியை காண சென்றார். நாட்கள் பல கடந்தும் விஷ்ணுவால் அடியை காண இயலவில்லை ஆதலால் சிவபெருமானிடம் தனது தோல்வியை விஷ்ணு ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மரோ அன்னப்பறவையாக உருவெடுத்து சிவபெருமான் முடியை காண பறந்தார் பறந்தார் பறந்து கொண்டே இருந்தார். ஆனால் ஆண்டுகள் மட்டுமே கழிந்தன. முடியை காண இயலவில்லை.

      அப்பொழுது பிரம்மர் மேலிருந்து கீழ் இறங்கி வந்த தாழம்பூவை சந்தித்தார். பிரம்மர் கேட்டார் தாழம்பூவிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என்று அதற்கு தாழம்பூ சிவபெருமானின் முடியில் இருந்து வருகிறேன் என்று கூறியது. அப்படியா? நான் முடியை காண அருகில் வந்து விட்டேனா என்று பிரம்மர் கேட்டார் அதற்கு தாழம்பூ கூறியது இல்லை இல்லை அதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும். நான் கீழே இறங்கியே பல ஆண்டுகள் ஆகிறது.

அப்பொழுது பிரம்மருக்கு ஒரு யோசனை தோன்றியது. தாழம்பூவிடம் நான் சிவபெருமானின் முடியை பார்த்துவிட்டேன் என்று சிவனிடம் நீ சாட்சி சொல்ல வேண்டும் என்று  உதவி கேட்டார். அதை ஒப்புக்கொண்ட தாழம்பூ சிவபெருமானிடம் பொய் சாட்சி கூறியது. பொய் சாட்சி சொன்னதை கண்டறிந்த சிவபெருமான் பெரும் கோபம் கொண்டு பிரம்மருக்கு இனி தனிப்பட்ட கோவில்கள் எதுவும் கிடையாது என்றும், தாழம்பூவை பார்த்து இனி உன்னை எந்த வழிபாட்டிற்கும் யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்று சாபம் கொடுத்தார்.

Screw pine chitthar story - pooja restrictions - payanali

      “ஆனால் உண்மையான காரணம் என்னவென்று சோதனை செய்ததில் தாழம்பூவில் எதிர்மறை விசைகள் செயல்படுவதாக தெரிய வருகிறது. ஆதலால் இந்த அழகான நறுமணம் மிக்க தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தப்படுவதில்லை.”

நன்றி !!

FAQ

தாழம்பூ (Screw Pine Plant) செடிகளின் பயன்பாடுகள் என்ன?

தாழம்பூ செடிகளின் இலைகள் வாசனையை மிகுந்த நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவை சுற்றி சுழல் வடிவில் வளரும் மற்றும் பளபளப்பாக உள்ளன. தாழம்பூவில் உள்ள நறுமணம் விளையும் சிறப்பு பகுதியாகும்.

தாழம்பூவின் மருத்துவ பயன்பாடுகள் என்ன?

தாழம்பூவின் வேர்கள் மற்றும் இலைகள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகின்றன. அதன் பயன்களை மேற்கொள்ள உதவுகிறது.

தாழம்பூவின் பயன்படுத்தப்படும் உண்மைகள் என்ன?

தாழம்பூவின் பயன்படுத்தப்படும் நறுமணங்கள் மனிதர்களின் உடலில் நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.

Share

Leave a Reply