Table of Contents
ஊட்டி என்றால் அனைவரின் நினைவிற்கு வருவது தொட்டபெட்டா மற்றும் பொட்டானிக்கல் கார்டன். ஆனால் இதே போல் நிறைய சுற்றுலா தளங்கள் ஊட்டியில் உள்ளன. ஒரு முறை போகும்போது இந்த சுற்றுலா தலங்களை மிஸ் பண்ணாதீங்க. வாங்க இப்பொழுது ஊட்டியை சுற்றி பார்க்கலாம்.
உதகமண்டலத்தின் சுருக்கமான பெயர் தான் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஊட்டியானது தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊட்டிக்கு இன்னொரு பெயரும் உண்டு மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறார்கள்.
இப்பொழுது நாம் இந்த ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்க்கலாம் வாருங்கள்.
பொட்டானிக்கல் கார்டன்
பொட்டானிக்கல் கார்டனை தாவரவியல் பூங்கா என்றும் அழைப்பார்கள். இதன் பெயரிலே உள்ளது இந்தப் பூங்காவானது தாவரங்களால் நிறைந்த இயற்கை சூழல் மிகுந்து காணப்படுகிறது. இந்த தாவரவியல் பூங்காவானது 55 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.
இங்கு ஆயிரக்கணக்கான குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள், மரங்கள், செடிகள், கொடிகள் உள்ளன. மையப் பகுதியில் 20 மில்லியன் ஆண்டுகள் கொண்ட ஒரு பெரிய மரம் அமைந்துள்ளது. இங்கு மூலிகை செடிகள், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள், இந்திய வரைபடங்கள் ஆகியவை உள்ளன. குழந்தைகளுக்கு பிடித்த இயற்கை சூழல் அமைந்த ஒரு பகுதியாக உள்ளது.
இத்தாலிய முறைப்படி ஆரம்பிக்கப்பட்ட ஒரு தாவரவியல் பூங்காவாக விளங்குகிறது. இங்கு மே மாதம் பூக்கள் திருவிழா நடைபெறும். அந்த மே மாதத்தில் நாம் சென்றால் இந்த திருவிழாவை காணலாம்.
ரோஸ் கார்டன்
இங்கு நூற்றுக்கணக்காக ரோஸ் குடும்பத்தைச் சார்ந்த ரோஸ் செடிகள் அமைந்துள்ளது. மற்ற காலங்களில் சென்றால் அங்கு அந்த அளவிற்கு இயற்கை சூழ்ந்து இருக்காது. ஆனால் அதுவே மே மாதம் சென்றால் கண்ணிற்கு குளிர்ச்சியாக ஆயிரக்கணக்கான மலர்களை பார்த்து ரசிக்கலாம்.
பைன் பாரஸ்ட் மற்றும் வென்லாக் டவுன்ஸ் படப்பிடிப்பு தளம்
இந்த இரண்டு இடமும் பக்கம் பக்கமாக தான் உள்ளது. காதலர்கள் மற்றும் புதிதாக திருமணமானவர்களுக்கு இந்த இடம் பொருந்தும். ஏனென்றால் இது மிகவும் அமைதியான ஒரு இடம். இந்தப் பைன் ஃபாரஸ்ட் நிறைய மரங்கள் கொண்டதாகவும் அமைதியான சூழல் கொண்டதாகவும் இருக்கும். இங்கு படகு சவாரியும் இருக்கும். இங்கு நிறைய பிரபலமான படங்கள் எடுத்துள்ளனர். காதலர்களுக்கான ஏற்ற ஒரு இடமாக இருக்கும். அதற்குப் பக்கத்திலே தான் வென் லாக் டவுன் படப்பிடிப்பு தளமும் உள்ளது. இது ஒரு நல்ல இயற்கை சூழல் மிகுந்த இடமாக இருக்கும். இங்கு குதிரை சவாரியும் உள்ளது.
பைக்காரா லேக் போட்டிங் மற்றும் பைக்காரா பால்ஸ்
பைக்காரா என்பது கிராமத்தின் பெயரை குறிக்கும். இந்தப் பைக்காரா லேக் ஐ பைக்காரா டாம் என்றும் அழைப்பார்கள். இது ஊட்டியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு படகு சவாரி ஆனது மிகவும் பிரபலமானது. அதிவேக படகு சவாரி மற்றும் மோட்டார் படகு சவாரி இந்த இரண்டும் உள்ளது. அங்கு படகு வீடும் மற்றும் ஹோட்டல் வசதிகளும் உள்ளது. இங்கிருந்து சிறுது தொலைவிலேயே பைக்காரபால்ஸ் உள்ளது. இதன் நுழைவாயில் இருந்து சுமார் 300 மீட்டர் உள்ளே செல்ல வேண்டும். மிகவும் அழகான மற்றும் அமைதியான இயற்கை சூழல் அமைந்த ஒரு நீர்வீழ்ச்சியாக இது அமைகிறது.
முதுமலை நேஷனல் பார்க் மற்றும் யானைகள் கேம்ப்
ஊட்டி போகும் போது மறக்காமல் இந்த முதுமலை நேஷனல் பார்க்கை ஒருமுறை சுற்றிப் பாருங்கள். இங்கு வேன் சபாரி மற்றும் ஜீப் சபாரி இரண்டும் உள்ளது.
இங்கு நிறைய மிருகங்கள் பராமரித்து பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஒரு நல்ல சுற்றுலா தளமாக அமையும். இங்கு ஹோட்டல் வசதியும் மற்றும் கேண்டின் வசதியும் உள்ளது. அதற்குப் பக்கத்திலேயே யானைகள் கேம்பும் அமைந்துள்ளது. அங்கு யானைகளை தனியாக பராமரித்து வளர்க்கப்பட்டு வருகிறது.
சாக்லேட் மற்றும் டீ தூள் தயாரிப்பு ஃபேக்டரி
இது பெரிய அளவில் அமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை ஆகும். இங்கு எப்பொழுதுமே சாக்லேட் மற்றும் டீத்தூள் ஆகியவை தயாரித்துக் கொண்டே இருப்பார்கள். நம்மை அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க அனுமதிப்பார்கள் மற்றும் எப்படி எல்லாம் டீத்தூள் தயாரிக்கப்படுகிறது என்பதை விளக்கமாக பார்க்கலாம். இங்கு நிறைய வகையான சாக்லேட் மற்றும் டீ தூள் தயாரிக்கப்படுகிறது. நமக்கு சாம்பிள் டீ மற்றும் சாம்பிள் சாக்லேட் தருவார்கள். நாம் அதை டேஸ்ட் பண்ணி பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளலாம்.
நன்றி !!
Next Article to Read
- The Spiritual and Scientific Benefits of Hair Washing in Hinduism
- Do you know why they don’t worship with screw pine (தாழம்பூ) for pooja?
- Aadi perukku பிறந்ததும் தேங்காய் சுட்டு (thengai suduthal) இஷ்ட தெய்வங்களுக்கு படைக்கப்படுவது ஏன் என்று தெரியுமா?
- Best tourist spots in Thanjavur. Don’t miss these places!
- Experience the Ooty places to visit. Never miss the chance
Share