thengai suduthal, aadi perukku

Aadi perukku பிறந்ததும் தேங்காய் சுட்டு (thengai suduthal) இஷ்ட தெய்வங்களுக்கு படைக்கப்படுவது ஏன் என்று தெரியுமா?

      Aadi Perukku என்பது தமிழ் நாள்காட்டியில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மற்றும் தமிழ் கலாச்சாரத்தில் மங்களகரமான மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆடி மாதத்திற்கு ஒரு சில தனித்துவமான சிறப்பம்சங்கள் உள்ளது.

      ஆடி மாதம் ஆனது அம்மன் போன்ற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதங்களாக கருதப்படுகிறது. இந்த மாதத்தின் போது அம்மனின் தெய்வீக ஆற்றல் உயரும் என்று நம்பப்படுகிறது. இந்த மாதத்தின் போது கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே ஒரு சிறப்பு மிக்க நாளாக கருதப்படுகிறது அதுவும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி என்றும் அழைப்பார்கள்.

      ஆடி வெள்ளிக்கிழமை அன்று அனைத்து அம்மன் சார்ந்த கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், சடங்கு, சம்பிரதாயங்களும் நடைபெறும். ஆடி மாதத்தில் புனித நீராடுவது அல்லது நதிகளில் நீராடுவது தமிழகத்தில் வழக்கமாகும். இவ்வாறு புனித நதிகளில் நீராடுவது உடலையும், ஆத்மாவையும் சுத்தப்படுத்தி கடவுளின் ஆசிர்வாதத்தை பெறுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

      முதலிலே நாம் சொன்னது போல இந்த ஆடி மாதமானது கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்பதால் இந்த மாதத்தில் ஏராளமான கோவில் திருவிழாக்கள், வழிபாடுகள் ஆகியவை நடைபெறும். மேலும் இந்த மாதத்தில் ஒரு முக்கிய சிறப்பு “தேங்காய் பிரசாதம்” என்று கூறப்படுகிறது. இதனை “தேங்காய் காப்பு” என்றும் அழைப்பார்கள். இந்த மாதத்தில் பக்தர்கள் ஆசிர்வாதம் மற்றும் நன்றியை வெளிப்படுத்தும் அடையாளமாக தெய்வங்களுக்கு தேங்காய்களை காணிக்கையாக செலுத்துவார்கள்.

     இவ்வளவு சிறப்பம்சம் மிக்க இந்த ஆடி மாதத்தின் முதல் நாளில் தேங்காய் சுடும் விழா கொண்டாடப்படுகிறது. தேங்காய் சுடும் (thengai suduthal) பண்டிகையானது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆடி 1 அன்று கொண்டாடப்படுகிறது. அதுவும் அமராவதி மற்றும் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள பகுதிகளில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், குமாரபாளையம், பரமத்தி வேலூர், மேட்டூர், திருச்செங்கோடு, ராசிபுரம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் இவற்றை ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த தேங்காய் சுடும் பண்டிகையின் போது செய்யப்படும் தேங்காய் ஆனது இனிப்பு வகை பண்டமாகும். தேங்காய், பொட்டுக்கடலை, எள், அவல், ஏலக்காய், பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு வகை ஆகும்.

     இந்த ஆடிப்பிறப்பன்று  சுடப்படும் தேங்காய்க்கு ஒரு சில வரலாறுகள் உள்ளது. அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

      தேங்காய் சுடும் பண்டிகையை மகாபாரத போருடன் தொடர்பு படுத்தி கூறுகிறார்கள். புராணத்தில் அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் இடையில் மகாபாரத போர் நடைபெற்றது என்று கூறப்படுகிறது. அதுவும் தலை ஆடி என்று அழைக்கப்படும் ஆடி 1 ஆம் தேதி தொடங்கி ஆடி 18 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இதனைப் போர்க்காலம் என்றும் சிலர் கூறுவார்கள். இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று அனைவரும் ஆடி 1ம் தேதி தேங்காயை சுட்டு அவரவருக்கு விருப்பமான தெய்வங்களுக்கு பிரசாதமாக வைத்து வழிபட்டனர். இதன் நினைவின் காரணமாக காலப்போக்கில் இன்றும் இந்த நடைமுறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஒரு சில மக்கள் நம்புகிறார்கள்.

      ஒரு சிலர் மற்றொரு காரணமும் கூறுகிறார்கள். அவை என்னவென்றால் புதிதாக திருமணமான தம்பதியினரை பெண் வீட்டிற்கு அழைத்து வந்து ஆடி 1ஆம் தேதி தலைக்கு எண்ணெய் வைத்து தண்ணீர் ஊற்றி புது துணி உடுத்தி பிறகு இந்த தேங்காயை சுட்டு கடவுளுக்கு பிரசாதமாக வைத்து பூஜை செய்வார்கள். இதற்குக் காரணம்  திருமண தம்பதிகள் தன்னில் உள்ள தீய எண்ணங்களை தவிர்த்து புது வாழ்க்கையை நல்ல எண்ணத்தோடு தொடங்குவது ஆகும்.

நன்றி !!

Share

Leave a Reply