10 Important food for during Pregancy

10 Important Food for During Pregnancy’s | Eating a healthy and balanced diet during pregnancy

கரு உருவாவதில் இன்று பல பெண்களுக்கு ஒரு கனவு போல இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த கரு நமக்கு உருவானால் அதை நாம் எப்படி தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்

Folic Acid உணவுகள்:

கர்ப்பத்தின் போது கருவில் வளரும் குழந்தைக்கு வளர்ச்சி மிகவும் முக்கியம். போதுமான ஃபோலிக் ஆசிட் சத்து இல்லை என்றால் கருவில் உருவாகி இருக்கும் கருவிற்கு பாதுகாப்பு இல்லாமல் போகும். அதனால் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.  தினமும் நான் உணவிலிருந்து  800 மைக்ரோ கிராம் ஃபோலிக் ஆசிட் உணவுகளை தினமும் சாப்பிடவேண்டும். சரி, இந்த ஃபோலிக் ஆசிட் எந்த மாதிரியான உணவுகளில் இருந்து கிடைக்கும் என்று பார்க்கலாம். பசலைக்கீரை பீன்ஸ் அப்புறம் சிட்ரஸ் பழங்கள், குறிப்பா சிட்ரஸ் அதிகமுள்ள பழங்கள் ‘ஆரஞ்சு’ மிக முக்கிய பங்கு உள்ளது.

Avacoda

அவகோடா வெண்ணை போல் வளவளப்பான தன்மை கொண்டது. இதில் பல அற்புதமான ஊட்டச் சத்துக்கள் இருக்கிறது. விட்டமின் ஏ, சி அப்புறம் பொட்டாசியம் சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது. ஒரு பாதியை நாம் சாப்பிட்டால் அதில் 82 மைக்ரோகிராம் அளவு  போலேட்  சத்துக்கள் கிடைக்கும்.  அதாவது ஒரு நாளைக்கு நமக்கு 21 சதவிகிதம் போலேட் சத்து தேவைப்படுகிறது. அதன் பாதி  அவகோடா தருகிறது. இந்தப் பழம் உருவாக ஒன்பது மாதம் காலம் தேவைப்படுகிறது. குழந்தைக்கும் கரு வளர்ச்சிக்கும் ரொம்ப முக்கியமான பங்கு இதில் இருக்கிறது.

Sweet Potato

சக்கரவள்ளி கிழங்கு, இதில் நாம் ஹார்மோன் இம்பேலன்ஸ் ல இருந்து ஹார்மோன் பேலன்ஸ் பண்ற சத்து இருக்கு. விட்டமின், கேரோட்டின் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது, கருவை தக்க வைக்க உதவுகிறது.

Nuts

நட்ஸ் வகைகளை நாம் மிகவும் முக்கியமாக சாப்பிடக் கூடியது – பாதாம், பிஸ்தா, வால்நட், கருப்பு திராட்சை. தினமும் இரவில் பாதாம் 2 எடுத்து தண்ணீரில் ஊற வைத்து, தோலுரித்து காலையில் சாப்பிட்டு வாங்க. பிஸ்தா ரோஸ்ட் பன்னி சாப்பிடக்கூடாது. வால்நட் தினமும் ரெண்டாவது சாப்பிட்டு வரவேண்டும். இவை அனைத்தும் உங்கள் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.

Apple

ஆப்பிளில் விட்டமின்கள் அதிகளவில் இருக்கிறது. கர்ப்பமானதும் நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் கருவின் வளர்ச்சிக்கு ரொம்பவும் நல்லது.

Curd

கர்ப்பமாக இருக்கும் போது தயிர், மோர் சாப்பிட்டால் குளிர்ச்சி தரும் என்று சொல்வார்கள். ஆனால் தயிரில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. நம் கருவில் வளரும் குழந்தைக்கு கால்சியம் சத்து மிகவும் அதிக அளவில் தேவைப்படும். பொதுவாக நம் கால்சியத்தில் இருந்து தான்  நம் கருவிற்கு தேவையான கால்சியத்தை எடுத்துக் கொள்ளும். அதனால் உங்களுக்கு அதிக அளவு கால்சியம் தேவைப்படும். தினமும் ஒரு கப் தயிர் உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கும் உங்கள் கருவிற்கும் தேவையான கால்சியம் போதுமான அளவு கிடைக்கும் இதனால் கால்சியம் குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

Egg

முட்டைக் கர்ப்பிணிகளுக்கு தேவையான புரதச்சத்தை தரும். இதில் விட்டமின் டி கால்சியமும் அதிக அளவில் இருக்கிறது. இதனால் தினமும் நீங்கள் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளலாம்.

Black Grapes

கருப்பு திராட்சையை உங்களுக்கு நாள் தள்ளி போனதில் இருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். கருப்பு திராட்சையை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, அந்த தண்ணீரை குடித்து வந்தால் உங்கள் கர்ப்பப்பைக்கு வலுவையும் உங்கள் கருவுக்கு நல்ல பலத்தையும்  தருகிறது.

Banana

வாழைப்பழம் கண்டிப்பாக சாப்பிடவும். வாழைப் பழத்தில் விட்டமின், மினரல்ஸ் அதிக அளவில் இருக்கிறது. நீங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்க முடியும்.

நாள் தள்ளி போனால் நீங்கள் அசைவ உணவை சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். 

தினமும் 7 டம்ளர் வரை தண்ணீர் குடியுங்கள்.

மேற்சொன்ன அனைத்தும் உங்கள் கருவுக்கும் கருவின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கிய பங்காக இருக்கும்.

நன்றி !!

Share

Leave a Reply