how to grow hair faster

How to grow hair faster, longer and thicker ?

உங்களுக்கு இளம் வயதிலே முடி ரொம்ப கொட்டுகிறதா? முடி கொட்டுவது நின்று நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இதை மட்டுமே செய்யுங்கள்.

            மனிதராக பிறந்த அனைவருக்கும் முடி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. முடி ஒருவரின் அழகை நிர்ணயிக்கிறது. இந்த தலைமுடியை பாதுகாக்க நிறைய பேர் அதிக நேரத்தை வீணடிக்கிறார்கள். இந்த முடிகொட்டுவதை நிறுத்த இப்பொழுது மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி அதிகமாக பயன்படுத்தி ஏமாந்து போகிறார்கள்.

           இனி அந்த தவறை யாரும் செய்யாதீர்கள். நம் முடியை பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் ஒரு சில வழிமுறைகள் உள்ளது. அதை பயன்படுத்தினாலே போதும் எப்போதும் முடி கொட்டவே கொட்டாது. பிறகு அடர்த்தியாகவும், நீளமாகவும் காடு போல வளர்ந்து கொண்டே இருக்கும். 

          முதலில் முடி கொட்டுவதற்கான காரணங்கள் என்னென்னவென்று பார்ப்போம். முடிக்கு தேவையான வைட்டமின் ஏ, இ, சி, பி 5, பி 6 சத்துக்கள், இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து போன்ற  குறைபாடு காரணமாகத்தான் கொட்டுகிறது. பிறகு முறையான தூக்கம் இன்மை, மன உளைச்சல், சுத்தமாக வைத்துக் கொள்ளாதது பெரிய காரணங்களாலும் முடி கொட்டுகிறது.

            எனவே இதைத் தடுக்க நாம் என்னென்ன பண்ண வேண்டும் என்று இனி பார்க்கலாம். முதலில் நாம் மேலே பார்த்தது போல் அன்றாட உணவில் வைட்டமின்கள், புரதச்சத்து மற்றும் இரும்பு சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மூணு முதல் நாலு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 

              ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். மனதில் எதையும் போட்டுக் கொண்டு குழப்பிக் கொண்டே இருக்கக் கூடாது எப்பவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் தலையில் உள்ள அழுக்கு மற்றும் பொடுகு தொல்லை விலகும். 

             இப்படி தலையை சுத்தமாக வைத்துக் கொண்டாலே முடிவு உதிர்வதை குறைத்துக் கொள்ளலாம். பிறகு முக்கியமான ஒன்று சந்தையில் விற்கப்படும் அதிக ரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தவே கூடாது.

        இப்பொழுது முடி உதிர்வதை தடுத்து நீளமாக வளர எவ்வாறு ஹேர் பேக் செய்வது என்று பார்ப்போம்.

ஹேர் பேக் செய்முறை 

            ஒரு கைப்பிடி அளவு வெந்தயத்தை எடுத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் இரண்டு முதல் மூன்று செம்பருத்தி பூ, கருவேப்பிலை ஒரு கைப்பிடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த பேஸ்ட்டை தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் கொடுத்து சிறிது நேரம் ஊற வைத்து தலைக்கு குளிக்கவும். 

           இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்ய வேண்டும். அதுவே உங்கள் தலையில் முடி கொட்டி  வழுக்கை விழுந்து விட்டதா கவலை வேண்டாம். சின்ன வெங்காயத்தை ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்துக் கொண்டு அதை வடிகட்டி அந்த சாறை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாற்றை முடிவேரில் நன்றாக தேய்த்து மசாஜ் கொடுக்கவும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்து வந்தால் வழுக்கை இருந்த இடமே தெரியாது. 

            மேலும் உங்கள் முடி மிருதுவாகவும் அழகாகவும் தெரிய வேண்டுமென்றால் முட்டை வெள்ளை கருவை எடுத்து முடி முழுவதும் பரவுவது போல் மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் நமது முடியானது மிருதுவாகவும், அழகாகவும் தோற்றமளிக்கும். இந்த வழிமுறைகளை செய்து முடித்தவுடன் இயற்கையான முறையில் செய்த ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலையை அலசவும்.

         இப்போது நாம் வீட்டிலே உள்ள பொருளை வைத்து எப்படி இயற்கையான முறையில் ஷாம்பு மற்றும் சீயக்காய் தூள் தயாரிப்பது என்று பார்ப்போம். 

home made shampoo and powder

இயற்கையான முறையில் ஷாம்பு செய்முறை

தேவையான பொருட்கள் 

           பூந்திக்கொட்டை 100 கிராம் 

          சீயக்காய் 250 கிராம் 

          காய்ந்த நெல்லிக்காய் ஒரு கைப்பிடி 

          வெந்தயம் ஒரு கைப்பிடி 

          கற்றாழை சிறிதளவு.

           முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அதை வெதுவெதுப்பாக சூடு படுத்திக் கொள்ளவும். பிறகு அதில் அனைத்து பொருட்களையும் போட்டு ஒரு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து இந்த பூந்திக்கொட்டையில் உள்ள கொட்டைகளை அகற்றிவிட்டு அனைத்து பொருட்களையும் ஒரு நாள் இரவு முழுவதும் அந்த தண்ணீரிலே ஊற விட வேண்டும். மறு நாள் காலையில் ஒரு வெள்ளைத் துணியில் அந்த பொருட்களை வடிகட்டி பார்த்தால் இயற்கையான முறையில் ஷாம்பு கிடைக்கும்.

           இப்பொழுது இயற்கையான முறையில் சீயக்காய் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சீயக்காய் செய்முறை

தேவையான பொருட்கள்

          சீயக்காய் ஒரு கிலோ 

          வெந்தயம் 200 கிராம் 

          பாசிப்பயிறு 250 கிராம் 

          பூந்திக்கொட்டை 150 கிராம் 

          காய்ந்த நெல்லிக்காய் 100 கிராம் 

          ஆவாரம் பூ 75 கிராம் 

          செம்பருத்தி பூ 50 கிராம் 

          ரோஜா இதழ் 50 கிராம் 

          வெட்டிவேர் 30 கிராம்

            ஆகியவற்றை நன்றாக வெயிலில் உலர்த்தி காய்ந்ததும் அதை நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும் இப்போது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சீயக்காய் தூளை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். மேற்கண்ட இந்த வழிமுறைகளை பயன்படுத்தினால் முடி கொட்டுவதை தடுத்து நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்கலாம்.

நன்றி !!

Share

Leave a Reply