fix dark circles with home remedies

How to remove dark circles? Home Remedies – Payanali

கண்ணுக்கு கீழே உள்ள கருவளையம் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? வாருங்கள் பார்ப்போம் வீட்டில் உள்ள பொருளை வைத்து எப்படி கருவளையங்களை சரி செய்வது என்று.

           உங்கள் முகம் என்னதான் வெள்ளையாக இருந்தாலும் கருவளையங்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? இதுவே இப்பொழுது பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு சில முக்கிய காரணங்களும் உள்ளன முதலில் என்னவென்று பார்ப்போம். 

           கண்ணுக்கு கீழே உள்ள பகுதியில் மிகக் குறைந்த அளவு கொலாஜின் மற்றும் எலாஸ்டின் உள்ளதால் நமது கண்ணிற்கு கீழே உள்ள பகுதி மிகவும் மெல்லியதாக இருக்கும். ஆதலால் நாம் அந்தப் பகுதியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். 

           இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அனைவரும் அதிகமாக லேப்டாப், தொலைக்காட்சி மற்றும் மொபைல் உபயோகிக்கின்றன. ஆதலால் கண் சோர்வுற்று கண் கீழே கருவளையமாக தோன்றுகிறது. சூரிய ஒளியின் அதிகமான தாக்கத்தினாலும், வயது முதிர்வினாலும் சுருக்கங்களும் கருவளையமும் உருவாகின்றன. இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அதிகப்படியான ரசாயன அழகு சாதன பொருட்களை உபயோகிப்பதாலும் கருவளையம் தோன்றுகிறது. 

           தூக்கம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியம் ஒன்று. சராசரி மனிதனுக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூக்கம் அவசியம். எனவே இந்த தூக்கம் இன்மை காரணமாகவும், உடல் சோர்வு காரணமாகவும் கண்ணிற்கு கீழே கருவளையம் தோன்றுகிறது. இவ்வாறு கருவளையம் வருவதற்கான காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். 

           முதலில் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். தினமும் 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும். பின்பு ஒரு சராசரி மனிதன் ஏழு முதல் எட்டு மணி வரை கண்டிப்பாக உறங்க வேண்டும். அதிகப்படியான சூரிய ஒளியில் செல்வதை தவிர்க்கவும். ஒரு நாளைக்கு முகத்தை 3 முதல் 4 முறையாவது வெறும் தண்ணீரில் கழுவ வேண்டும். இப்போது மார்க்கெட்டில் அதிகப்படியாக ரசாயனம் கலந்த அழகு பொருட்களை கண்ணிற்கு கீழே உள்ள மென்மையான பகுதியில் உபயோகப்படுத்தக் கூடாது.

            இப்படிப்பட்ட கருவளையத்தை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம் வாருங்கள். இரண்டு தக்காளி பழத்தை எடுத்து அதை நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு ஐஸ் கியூப் ட்ரெயில் ஊற்றி அதை ஐஸ் கட்டியாக மாற்றிக் கொள்ளவும். தினமும் இரண்டு முறை இந்த தக்காளி சாறு ஐஸ் கட்டியை கண்ணிற்கு கீழே மசாஜ் செய்து கொடுக்கவும்.  

           இப்போது ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை நன்கு கலந்து  ஒரு பேஸ்ட் ஆக மாற்றவும். இப்பொழுது இந்த பேஸ்டை கண்ணிற்கு கீழே தடவி வந்தால் இரண்டே வாரத்தில் கருவளையம் இருக்கும் இடம் மறைந்து போகும். 

           மற்றொரு முறை ஆரஞ்சு சாறுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து தடவி வர கருவளையம் நீங்கும். 

           இதுபோன்ற நிறைய அளவு குறிப்புகள் வேண்டும் என்றால் எங்கள் பக்கத்தை பின் தொடரவும் .

நன்றி !!

Share

Leave a Reply