Healthy food for pregnant women and baby

Food for pregnant women | Ensure the health of unborn child.

உங்க Pregnancy time ல எந்த மாதிரி உணவு எடுத்துக்கிட்டா உங்களுக்கும் உங்க கருவிலே உருவாகிய குழந்தைக்கும் Healthy ஆ இருக்கும்னு பார்க்கலாம்.

Pregancy time ல கொஞ்சம் பேருக்கு மூன்று மாதம் வரைக்கும் vomit இருக்கும், சிலருக்கு 7 மாதம், இன்னும் சிலருக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் vomit இருந்துட்டே தான் இருக்கும். இதனாலேயே பெரும்பாலும் நாம் சாப்பிடுகிற உணவு வெளியே வந்திடும். நீங்க vomit எடுத்தாலும் பரவாயில்லை திரும்பவும் சாப்பிடுங்க, நீங்க எடுத்துக்கிற உணவில் தான் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். சிலர் ரொம்ப vomit பன்னி tired ல food எடுத்துக்க மாட்டாங்க, அப்படி இருக்கிறவங்க கண்டிப்பா juice ஆவது குடிக்கணும். ஆனா, பழங்கள முடிஞ்ச அளவுக்கு கடித்து சாப்பிடுவது தான் நல்லது.

Vomit அதிகமா இருக்குதுனா நீங்க கிஸ்மிஸ் பழம், அதாவது உலர் திராட்சை நிறைய சாப்பிட்டு வந்தீங்கனா vomit control ஆகும்.  ரொம்ப மயக்கமா இருந்தா குளுக்கோஸ் குடியுங்கள்.

தண்ணீர் குறைந்தது ஒரு நாளைக்கு நாளிலிருந்து 6 லிட்டர் குடிக்கணும். அப்பதான் உங்க கர்ப்பப்பைக்கும் தேவையான அளவு உங்க குழந்தைக்கும் தண்ணீர் கிடைக்கும்.  உங்க கர்ப்ப காலத்தில் அடிக்கடி Urine வரும்.  அதனால நீங்க தண்ணீர் குடிக்கிறத avoid பண்ணிடாதீங்க.  தண்ணீர் குடிக்கிறது ரொம்ப முக்கியம். இது உங்களுக்கு குழந்தை பிறந்து தாய்ப்பால் வரும்பொழுது உங்களுக்கு தாய்ப்பால் சுரக்க மிகவும் உதவியாக இருக்கும்.

நீங்க கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தைக்கும் சேர்த்து நிறைய கலோரீஸ் எடுத்துக்கொள்ளுங்கள். பொதுவா ஒரு நாளைக்கு நமக்கு 2,200 கலோரி தேவைப் பட்டால், நீங்க உங்க கர்ப்ப காலத்தில் அதிகமாக இன்னும் 300 கலோரி சத்தான உணவை சாப்பிடுங்க, அப்பதான் உங்க வயிற்றுல இதுக்கும் அதுக்கும் சேர்த்து உணவு போகும்.

 முதல் 4 மாதம் வரைக்கும், ஒரு நாளைக்கு 6 தம்ளர் பால் எடுத்துக்கோங்க. அப்ப தான் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.

இரும்புச்சத்து உள்ள உணவு பொருள் ரொம்பவும் முக்கியம். இரும்புச்சத்து எந்த உணவுப் பொருட்களில் அதிகமாக இருக்கிறது என்று நாம் இப்பொழுது பார்க்கலாம். 

ப்ரோக்கோலி (Broccoli),

பேரிச்சம்பழம் (Dates),

முருங்கைக்கீரை (Drumstick Leaf),

தர்பூசணி (Water Melon), 

உலர் திராட்சை (Dry Grapes), 

காய்ந்த சுண்டைக்காய் (Sundai-kaai) Turkey Berry,

வெல்லம் (Jaggery), 

பனங்கற்கண்டு (Panankarkantu) Palm Sugar Crystal,

பாதாம் (Badam),

ஆட்டு ஈரல் (Goat Liver)  

இதை  அடிக்கடி சாப்பிட்டு வர இதில் இரும்புச் சத்து அதிகமா இருக்குது.

உங்க கர்ப்பகாலத்தில் உங்களோட உடல் எடை அதிகமா இருக்கும், அதனால கால் குடைச்சல், குதிகால் வலி போன்றவை ஏற்படும். இந்த வலியை சரிசெய்ய நீங்கள் தினசரி வாழைப்பழம் தூங்குறதுக்கு முன்னாடி சாப்பிடுங்க. இதனால் குறைவாகும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் (Pottasium) அதிக அளவில் இருக்கு.

நாம் பொதுவா மூன்று வேளை சாப்பிடுவோம், ஆனா உங்க கர்ப்ப காலத்துல, நீங்க ஆறு வேளையும் உணவு எடுத்துக்கங்க. குறிப்பா – தானியங்கள், பருப்பு வகைகள், பயிர்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் கண்டிப்பா சாப்பிடவேண்டும். புரதச்சத்து இருக்கிற உணவு சாப்பிடனும்.  பால், தயிர்,  பாலாடைக்கட்டி,  வெண்ணெய், நெய்,  மோர் விலை எல்லாம் நல்ல புரதச் சத்து அதிகமா இருக்கு.

பழங்கள பொருத்தவரையில் ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளம்பழம், அவகேடா, பேரிக்காய், குறிப்பா குழந்தை வளர்ச்சிக்கு உதவும். குழந்தையோட வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் (Folic Acid) ரொம்ப முக்கியம். விட்டமின் கே, சி பொட்டாசியம் சத்து இதுல கிடைக்குது.  இது இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.

ஒரு அவகோடா பழம் உருவாக 9 மாத காலம் ஆகும்.  உங்க Delivery க்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இருந்து நீங்க சாப்பிடுங்க, அது உங்களுடைய சுகப் பிரசவத்துக்கு உதவி செய்யும்.  இந்த சிற்றுண்டி உணவாக சுண்டல், பாதாம், பேரிச்சம் பழம் இதையெல்லாம் நீங்க சாப்பிட்டு வாங்க. அதுக்கு நல்ல Healthy ஆன குழந்தை பிறக்கும்.. 

நன்றி !

Share

Leave a Reply