Best diabetic diet for controlling Diabetes

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (diabetic diet) உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.

      நீரிழிவு அல்லது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு தேவையான ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சீரான உணவு (diabetic diet) பட்டியலை தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

மாவுச்சத்து இல்லாத காய்கறிகள்

vegetables

     கீரைகள், ப்ரோக்கோலி, காலிஃப்ளவர், குடை மிளகாய், சுரக்காய், தக்காளி, பச்சை பீன்ஸ், மற்றும் வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் குறைந்த அளவு கார்போஹைடிரேட்டுகள் மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளது. ஆனால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்த காணப்படுகிறது.

முழு தானியங்கள்

whole grains diabetic diet

     சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை காட்டிலும் அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பழுப்பு அரிசி, கினோவா, முழு தானிய ரொட்டி, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்றவை முழு தானியங்கள் ஆகும்.

மெலிந்த புரதங்கள்

lean protein

      இந்த புரதம் ஆனது பசியை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் ரத்த சர்க்கரை மேலாண்மைக்கும் மிகவும் உதவுகிறது. கோழி, மீன், டோஃபு, டெம்பே, பருப்பு வகைகள், குறைந்த கொழுப்புள்ள பால் ஆகியவை மெலிந்த புரதத்தின் மூலமாகவும்.

ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகள்

healthy fat diabetic diet

     ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படுகிறது மற்றும் கார்போஹைடிரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவக்கவும் உதவுகிறது. பாதாம், அக்ரூட், சியா விதைகள், ஆளி விதைகள், ஆலிவ் எண்ணெய் ஆகியவை ஆரோக்கியமான கொழுப்புகளின் ஆதாரங்கள் ஆகும்.

பழங்கள்

fruits

     இந்த பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. ஆனால் இயற்கையாகவே பழங்களில் சர்க்கரை உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைத்து பழங்களையும் எடுத்து கொள்ளக் கூடாது. குறைந்த சர்க்கரை அளவு உள்ள பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் பழ சாறாக எடுத்துக் கொள்ளாமல் முழு பழங்களாக சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியத்திற்கு நல்லது. பெர்ரி, செர்ரி, ஆப்பிள், பேரிக்காய், சிட்ரஸ் பழங்கள், கிவி, ப்ளம்ஸ், அவகேடோ ஆகியவை குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழங்கள் ஆகும்.

குறைந்த கொழுப்புள்ள பால்

     இதில் கொழுப்புகளின் அளவு குறைவாக இருக்கும் ஆனால் கால்சியம் மற்றும் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இது வழங்குகிறது. கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் எடுத்து கொள்வது நல்லது. இதற்கு மாற்றாக இனிப்பு சுமை இல்லாத பாதாம் பால் அல்லது சோயா பால் போன்றவைகளும் எடுத்து கொள்ளலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள்

omega 3 fish

      சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற ஒமேகா 3 கொழுப்பு உள்ள மீன்கள் இதய ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல ஆதாரம் ஆகும்.

    நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்து கொள்ள கூடாத உணவுகளை பற்றியும் தெரிந்து கொள்ளலாமே!

நன்றி !!

Share

Leave a Reply