face wrinkles

இளம் வயதிலேயே முக சுருக்கத்தால் கவலைப்படுகிறீர்களா? Easy Home Remedy for Face Wrinkles

     ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி வயது அதிகமானாலும் இளமையாக தோற்றம் அளிக்கவே விரும்புவார்கள். ஆனால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் இளமையை மறைக்கிறது. எனவே வீட்டில் உள்ள இந்த நான்கு பொருட்களை வைத்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் முக சுருக்கத்தை போக்கி இளமையாக தோற்றமளிக்கலாம்.

      பொதுவாக முக சுருக்கங்கள் என்பது வயது முதிர்வு நிலையில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வாகும். நம் தோலில் ஏற்படும் மடிப்புகள், ஏற்றத்தாழ்வு, முகடுகள் போன்றவற்றை முக சுருக்கம் என்று கூறப்படுகிறது.

     இது மட்டுமல்லாமல் மரபியல், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களாலும் சிறு வயதிலேயே முக சுருக்கங்கள் ஏற்படுகிறது. எனவே முக சுருக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

முக சுருக்கத்திற்கான காரணங்கள்

முகத்தில் ஏற்படும் அசைவுகளால் தோன்றும் சுருக்கங்கள் (dynamic)

     முகம் சுளித்தல், கண்களை சிமிட்டுதல் மற்றும் வாய் விட்டு சிரித்தல் போன்றவற்றினால் முகத்தில் உள்ள தசைகள் அசைகிறது. இந்த முக தசையின் அசைவினால் சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக தான் நாளடைவில் நெற்றி, புருவம் மற்றும் கண்களின் ஓரங்களில் சுருக்கங்கள் ஏற்படுகிறது.

நிலையான சுருக்கம் (static)

      வயதாகும் போது தோலின் எலாஸ்டின் மற்றும் கொலாஜன் ஆகியவை வயதுக்கு ஏற்ப குறைந்து கொண்டே இருக்கும். அப்போது தோலின் நெகிழ்வுத் தன்மை இழக்கப்படுகிறது. இதன் காரணமாக தான் வயதாகும் போது தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணங்கள்

      சூரிய ஒளியிலிருந்து வெளியாகும் UV கதிர்வீச்சு ஆனது வயதான தோற்றம் மற்றும் தோல் சுருக்கம் போன்றவற்றிற்கு காரணமாகிறது. ஏனென்றால் புற ஊதா கதிர்கள் நம் தோலில் உள்ள எலாஸ்டின் மற்றும் கொலாஜன் போன்றவற்றை சேதப்படுத்துகிறது. அதன் காரணமாக தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல், மோசமான ஊட்டச்சத்து, ஊட்டச்சத்து பற்றாக்குறை, போதுமான நீரேற்றம் இல்லாமை போன்ற வாழ்க்கை முறை காரணங்களாலும் இந்த முக சுருக்கங்கள் (face wrinkles) ஏற்படும்.

தோலின் செல் புதுப்பித்தல் குறைதல்

      வயதாகும் போது தோலில் ஏற்படும் செல் புதுப்பித்தல் பணியானது குறைகிறது. இதனால் தோலின் செல்கள் விகிதம் குறைகிறது. எனவே இறந்த சரும செல்கள் தோலின் மேற்பரப்பில் குவிகிறது. இதன் காரணமாகவும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுகிறது.

சருமத்தின் ஈரப்பதம் குறைதல்

      நமது சருமமானது மென்மையாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு ஈரப்பதம் ஒரு முக்கிய காரணமாகும். தோலின் நீரேற்றம் தன்மை குறைவாக இருந்தால் ஈரப்பதமும் குறைவாக இருக்கும். வயது அதிகமாகும் போதும் ஈரப்பதம் குறைந்து கொண்டே போகும். இதன் காரணமாகவும் சுருக்கங்கள் ஏற்படும். நம் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக் கொண்டு வர வேண்டும்.

மரபியல் காரணம்

      ஒரு சிலருக்கு மரபணு காரணமாக தோலில் சில மாற்றங்கள் இருக்கலாம். இதன் காரணமாகவும் சுருக்கங்கள் ஏற்படலாம்.

     முதுமையின் காரணமாக ஏற்படும் சுருக்கங்களை சரி செய்வது சாத்தியம் இல்லை. ஏனென்றால் இது ஒரு இயற்கையான நிகழ்வு. ஆனால் இளம் வயதிலேயே கண்கள், நெற்றி, தாடை, கன்னங்கள் மற்றும் புருவங்களுக்கிடையில் ஏற்படும் சுருக்கங்களை எளிமையாக சரி செய்யலாம்.

      நமது ஹோம் ரெமடியுடன் சேர்த்து பின்வரும் வழிமுறைகளை சரியாகப் பின்பற்றினால் நம் முகத்தில் உள்ள சுருக்கங்களை எளிமையாக சரி செய்யலாம்.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு

      தொடர்ச்சியாக சன் ஸ்கிரீன் (sun screen) உபயோகித்தல் மற்றும் அதிக சூரிய ஒளியின் போது வெளியே செல்வதை தவித்தல் ஆகியவை சூரிய ஒளியிலிருந்து வரும் UV கதிர்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.

தோல் பராமரிப்பு

     கிளென்சர் மற்றும் மாய்ஸ்ரைசரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் நம் தோல் ஆரோக்கியமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

     சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, நம் உடலுக்கு தேவையான நீரேற்றம் ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகும். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் நம் தோலானது எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிகமாக பேஷியல் செய்வதை தவிர்த்தல்

     ஒரு சிலர் அதிகமாக பேஷியல் செய்வதை ஒரு வழக்கமாக வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர் அதிகமாக பேஷியல் செய்யும்போது நம் முக அசைவுகளானது அதிகமாக இயங்குகிறது. அவ்வாறு அசைவுகள் அதிகமாகும் போது அந்த இடத்தில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

முக சுருக்கத்திற்கான (face wrinkles) பெஸ்ட் ஹோம் ரெமெடி

amla
aloe vera

       நம் வீட்டில் எளிமையாக கிடைக்க கூடிய இந்த நான்கு பொருளைக் கொண்டு முக சுருக்கத்தை சரி செய்யலாம். அதற்கு முதலில் ஒரு பெரிய நெல்லிக்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துருவிய நெல்லிக்காயை பிழிந்து அதிலிருந்து ஒரு ஸ்பூன் அளவு சுத்தமான நெல்லிக்காய் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் சாறுடன் இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்ற நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது முக சுருக்கத்தை போக்குவதற்கான ஃபேஸ் பேக் தயாராகி உள்ளது. இந்த ஃபேஸ் பேக்கை நம் முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது 20 நிமிடம் கழித்து குளிந்த நீரில் சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். இந்த ஹோம் ரெமடியை வாரத்திற்கு மூன்று நாட்கள் பயன்படுத்தி வந்தால் விரைவில் முக சுருக்கங்கள் மறைந்து விடும்.

நன்றி !!

Share

Leave a Reply