coriander rice - south Indian style recipe

How to make south Indian style coriander rice (கொத்தமல்லி சாதம்) recipe ?

தேவையான பொருட்கள்

  • வேக வைத்த சாதம் 1 கப்
  • கொத்தமல்லி 1 கட்டு சிறியது 
  • கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் 
  • உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன் 
  • வேர்க்கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் 
  • முந்திரி 7 முதல் 8
  • பெரிய வெங்காயம் 2 
  • பச்சை மிளகாய் 3 
  • இஞ்சி 1 துண்டு சிறியது 
  • பூண்டு 4 பல்
  • எண்ணெய் தேவையான அளவு 
  • உப்பு தேவையான அளவு

Preparation Time

20 to 30 min

Serving People

2

குறிப்பு 1

      கொத்தமல்லி சாதத்திற்கு தேவையான மசாலாவை தயாரிக்கும் போது மூடி வைத்து வேக விட கூடாது ஏனென்றால் அதன் பசுமை நிறம் மாறிவிடும்.

குறிப்பு 2

      பொதுவாக கொத்தமல்லி சாதத்திற்கு புளிப்பு சுவை சேர்க்க மாட்டார்கள். ஆனால் உங்களுக்கு புளிப்பு சுவை விருப்பப்பட்டால் இறுதியாக சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி கொள்ளவும்.

குறிப்பு 3

      கொத்தமல்லி சாதத்திற்கு கருவேப்பிலை உபயோகப்படுத்த கூடாது. கொத்தமல்லி சாதத்தின் சுவையை மாற்றிவிடும்.

கொத்தமல்லி பியூரி செய்முறை

     ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தமாக கழுவி எடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கட்டு கொத்தமல்லி இலை, 2 பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். கொத்தமல்லி சாதத்திற்கு தேவையான கொத்தமல்லி பியூரி தயார்.

கொத்தமல்லி சாதம் (Coriander rice) செய்முறை

     ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறியதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை கடலைப்பருப்பு, வேர்க்கடலை பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது வதங்கியதும் அதில் 1 பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நீள வாக்கில் நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் அதில் நாம் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி பியூரியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்பொழுது எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வேக விட வேண்டும்.

     கொத்தமல்லி சாதத்திற்கு தேவையான கொத்தமல்லி மசாலா தயார். இந்த கலவையில் நாம் வேகவைத்து எடுத்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது புளிப்பு சுவை தேவைப்படுபவர்களுக்கு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விட வேண்டும். இப்பொழுது சுவையான, மணமான கொத்தமல்லி சாதம் (Coriander rice) தயார்.

நன்றி !!

Share

Leave a Reply