lemon rice recipe home cooking

How to make tasty south indian style lemon rice (எலுமிச்சை சாதம்) recipe?

தேவையான பொருட்கள்

  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • கடுகு 1 டீஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன் 
  • பச்சை கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் 
  • வேர்க்கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் 
  • முந்திரி 7 முதல் 8 
  • வர மிளகாய் 3
  • கருவேப்பிலை தேவையான அளவு 
  • உப்பு தேவையான அளவு
  • மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
  • 2 பெரிய எலுமிச்சம் பழம்
  • ஒரு கப் வடித்த சாதம்

குறிப்பு 1

    சாதம் சூடாக இருக்கும் போதே அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சாதம் உதிரி உதிரியாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

குறிப்பு 2

      எலுமிச்சை சாதம் செய்வதற்கு நாம் எடுத்துக் கொள்ளப்படும் எலுமிச்சையானது நன்கு பழமாக இருக்க வேண்டும்.

குறிப்பு 3

      எலுமிச்சை பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுக்கக் கூடாது. அவ்வாறு நன்கு பிழிவதால் எலுமிச்சை சாதமானது கசப்பு ஏறி விடும். ஆதலால் எலுமிச்சை பழத்தை லேசாக பிழித்து அதில் உள்ள சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

Preparation Time

20 to 30 min

Serving People

2

எலுமிச்சை சாதம் ( lemon rice) செய்முறை

  1. முதலில் சூடான ஒரு கப் சாதத்தில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
  2. அடுப்பில் ஒரு கடாயை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாய் சூடு ஏறியதும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை கடலை பருப்பு, வேர்க்கடலை பருப்பு, முந்திரி ஆகியவற்றை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்
  3. பிறகு அதில் கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும்.
  4. இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு அதில் நாம் பிழிந்து எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  5. ஆற வைத்து எடுத்து வைத்துள்ள ஒரு கப் சாதத்தை இந்த கலவையில் சேர்த்து நன்று கிளறி விட வேண்டும். இப்பொழுது இந்த கிளறிய சாதத்தை இரண்டு நிமிடம் மிதமான சூட்டில் அடுப்பில் வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான ஹோட்டல் ஸ்டைல் எலுமிச்சை சாதம் ( Lemon rice) தயார். இந்த சூடான சுவையான எலுமிச்சை சாதத்தை அப்பளம், வடகம், உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறவும். இந்த  காமினேஷன் சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும்.

இதே போல் சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்றும் தெரிந்து கொள்ளலாமே!

நன்றி !!

Share

Leave a Reply