home remedy for lice and dandruff

Lice and Dandruff Problem? வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அவற்றை முற்றிலுமாக எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

    பேன் மற்றும் பொடுகு ஆகியவை நம் தலையில் ஏற்படும் வெவ்வேறு பிரச்சனைகள் ஆகும். இரண்டிற்கும் வெவ்வேறு தனித்தனி காரணங்கள் உள்ளது. முதலில் பேன் தொற்றுக்கான முக்கிய காரணங்களை பார்ப்போம்.

பேன் தொற்றுக்கான முக்கிய காரணங்கள்

  • பேன் (lice) என்பது முடி மற்றும் உச்சந்தலை ஆகியவற்றைத் தாக்கும் ஒரு சில வகையான பூச்சிகள் ஆகும். பொதுவாக பேன் தொல்லை உள்ள நபரிடம் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் மற்றொருவருக்கு இவை பரவும். உதாரணமாக பேன் தொல்லை உள்ள நபர்கள் உபயோகிக்கும் தொப்பிகள், சீப்புகள், ஹெட்போன்கள் போன்ற தனிப்பட்ட பொருட்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றும் நெருக்கமாக விளையாடும் குழந்தைகளிடமும் இவை சுலபமாக பரவுகிறது.
  • தலைக்கு உபயோகிக்கப்படும் சீப்புகள், துண்டுகள் மற்றும் தலையணைகள் போன்றவைகள் மூலமாகவும் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது.
  • கூட்ட நெரிசல்கள் காரணமாகும் பேன்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

பொடுகு தொல்லைக்கான முக்கிய காரணங்கள்

  •  நம் உச்சந்தலையில் இருந்து உதிரும் இறந்த சரும செல்களை பொடுகு (dandruff) என்று கூறப்படுகிறது. நமது உச்சந்தலையில் மலாசீசியா எனப்படும் ஈஸ்ட் போன்ற பூஞ்சைகளின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான் வீக்கம், அரிப்பு மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • உச்சந்தலையின் வறட்சி காரணமாகவும் சரும செல்கள் உதிர்ந்து பொடுகு ஏற்படுகிறது.
  • ஒரு சிலருக்கு ரசாயனம் கலந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் முடி சாயங்கள் போன்ற முடி சம்பந்தப்பட்ட பொருட்கள் சேராமல் எரிச்சல் அல்லது பொடுகு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • ஒரு சிலர் தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் எப்போதாவதுதான் தலை முடியை அலசுவார்கள் அதன் காரணமாகவும் பொடுகு தொல்லை ஏற்படும்.
  • ஒரு சிலருக்கு மருத்துவ ரீதியான பிரச்சினைகள் காரணமாகவும் பொடுகு தொல்லை ஏற்படும். எடுத்துக்காட்டாக ஹார்மோன் சமநிலை இன்மை அல்லது தோல் அலர்ஜி போன்றவைகள் அடங்கும்.

பேன் தொல்லைக்கான அறிகுறிகள்

symptoms of lice
  • உச்சந்தலையில் அரிப்பு
  • கூச்ச உணர்வு
  • கண்களுக்கு தெரியக்கூடிய பேன்கள் மற்றும் அதன் முட்டைகள்
  • உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவைகள் 

பொடுகு தொல்லைக்கான அறிகுறிகள்

symptoms of dandruff lice
  • மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் உள்ள செதில்கள் ஆகும். அவற்றை நம் சட்டை மற்றும் தோள்பட்டைகளில்  காணலாம்.
  • அதிக அளவு அரிப்பு
  • அதிக அளவு வறட்சி அல்லது எண்ணெய் தன்மை

       எனவே இவ்வளவு தொல்லை கொடுக்கும் பேன் மற்றும் பொடுகு பிரச்சனைகளை நான் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முற்றிலுமாக சரி செய்யலாம்.

ஹோம் ரெமடி 1

home remedy 1 lice

    வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் கசகசா ஒரு டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை பாலில் ஊற வைத்து அதனுடன் 6 முதல் 7 மிளகு சேர்த்து மை போல் அரைத்து தலையில் சீயக்காயுடன் தேய்த்து வர வேண்டும். இவற்றை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பொடுகு மற்றும் பேன் தொல்லைகளை சரி செய்யலாம்.

ஹோம் ரெமடி 2

home remedy 2 lice

     அனைவரும் சீதாப்பழத்தை அறிந்திருப்போம். அந்த சீதாப்பழத்தின் விதைகளை எடுத்து நன்கு உலர வைத்து அதை நன்றாக தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சீதாப்பழ விதையின் தூளை பாலில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர வேண்டும். தலையில் உள்ள எண்ணெய் பசையை போக்க சீயக்காய் அல்லது அரப்பு தேய்த்து முடியை சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் தலையில் உள்ள பேன் மற்றும் பொடுகு பிரச்சனைகளை முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.

நன்றி !!

Share

Leave a Reply