food items that should not take during the pregnancy - Payanali note for a healthy baby

Avoid 6 Foods that should not be eaten during pregnancy

நம் கர்ப்பக்காலத்தில் நாம் எந்தெந்த உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில், நமக்கு நிறைய உணவுகள் ஒத்துக் கொள்ளாமல் இருக்கும். அது இயல்பான ஒன்றுதான். நமக்கு பிடித்த உணவுகள் கூட அந்த நேரத்தில் நம் உடலுக்கும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேராமல் போகலாம். அதனால்தான் நாம் ஒவ்வொரு வேலையும் உணவை பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும் என்று சொல்லுவாங்க. இந்த மாதிரி காலத்தில் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைக்கும் சேர்த்து நீங்கள் உணவு சாப்பிடனும். நாம் சாப்பிடும் உணவு சத்து குறையாமல் நம் கருவுக்கும் எந்த குறைபாட்டையும் தராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

சரி, என்னென்ன உணவுகளை நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.

எள்ளு

சேர்க்கப்படும் எந்த உணவுப் பொருட்களாக இருந்தாலும், நீங்கள் அதை தவிர்க்க வேண்டும். Periods சரியாக வேண்டும் என்றால் நாம் எள்ளுருண்டை சாப்பிடுவோம். நம் கருவைக் கலைக்க எள்ளுருண்டை தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை எள்ளு கலந்த எந்த உணவுப் பொருள்களையும் சாப்பிட்டாலும் ஆரம்ப காலக்கட்டத்தில் அது ஆபத்தில் கொண்டு போய் முடியும். எள் விதை கர்ப்பப்பையில் உள்ளிருக்கும் கருமுட்டையை வெளியேற்றும் வகையில் கர்ப்பப்பை தசையை தூண்டும். அதனால்தான் எள் கலந்த உணவுப் பொருட்களை ஆறு மாதம் வரைக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

காபி

இது கர்ப்ப காலம் முழுமையும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. சாக்லேட், காபி இது எல்லாம் நாம் தவிர்க்க வேண்டிய ஒன்று.

Fast Food- Pizza, Burger Fridge Storage

போன்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள். இது வயிற்றில் வளரும் குழந்தையோட நாளமில்லா சுரப்பி செயல்பாட்டை குறைபாடு செய்யும். இதனால் கர்ப்பக்கால பிரச்சினையோடு வேறு சில பிரச்சினைகளும் ஏற்படலாம். மற்றும் குளிர்பானங்கள் குழந்தையோட ஆரோக்கியமான வளர்ச்சியை குறைக்கவே செய்யும்.

1/2 Boiled Egg, Raw Egg

கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இந்த மாதிரி நாம் முட்டை உண்ணும் போது, நமது உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். முட்டையை வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்.

முளைக்கட்டிய பயிறு

பொதுவாக நாம் உடல் எடையைக் குறைக்க உண்ணும் ஒரு உணவு. ஆனால் இது நம்முடைய கர்ப்பக்காலத்தில் முளைக்கட்டிய பயிரை நாம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதில் ஒரு பாக்டீரியா உருவாகும், அது நம் வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்கும்.

ரொம்ப காரமான (Spicy Foods) உணவுகளை தவிர்த்திடுங்கள்.

காரமுள்ள உணவு சாப்பிட்டால் இதயத்தை பாதிக்கும்.

மீன் (Fish)

வகைகளில் இருக்கும் அதிக அளவு பாதரசம், நம் வயிற்றில் இருக்கும் குழந்தைகளோடு மூளை வளர்ச்சியும், நரம்பு மண்டலத்தோடு வளர்ச்சியும் குறைபாட்டை உண்டாக்கும். அதனால் கடலில் வாழும் பெரிய மீன்களை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

உங்க கர்ப்பக்காலத்தில் ரொம்ப சத்துள்ள உணவு பொருட்களை நீங்க சாப்பிட்டால்கூட, முதல் முறை அது உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை, இரண்டாவது முறையும் நீங்கள் சாப்பிடும் பொழுது அது உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கண்டிப்பா அந்த உணவை நீங்க தவிர்த்திடுங்கள்.

நன்றி !!

Share

Leave a Reply