symptoms of pregnancy

The most common symptoms of pregnancy after periods is a missed period

கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகளைப் பற்றி பார்ப்போம்.

    கர்ப்பம் என்பது என்னதான் ஒரு பெண்ணுக்கு சந்தோஷம் மற்றும் உற்சாகம் போன்ற காலகட்டமாக இருந்தாலும் அந்த நேரத்தில் ஒரு சில அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். ஒரு பெண் கருவுற்ற பின் அவர்களது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது.

    இந்த தருணத்தில் அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற அதிக அளவு ஹார்மோன்கள் உற்பத்தி செய்கிறது. இதுவே அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணங்களாகும்.

தவறவிட்ட மாதவிடாய்(Missed period)

missed periods

    கர்பகாலத்தில் முக்கியமான முதல் அறிகுறி இந்த Missed periods ஆகும். இதில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் பங்களிக்கிறது. இந்த ஹார்மோன்கள் கர்ப்பப்பையின் புரணியை அடர்த்தியாக்குவதால் மாதவிடாய் தடுக்கப்படுகிறது. Beta HCG ஹார்மோனை சோதிப்பதன் மூலம் நாம் கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம். பொதுவாக இரண்டு வழிகளில் பரிசோதிக்கலாம். ஒன்று ரத்தத்தின் மூலமாகவும் மற்றொன்று சிறுநீர் மூலமாகவும் பரிசோதிக்கலாம்.

    இப்பொழுது உங்களுக்கு ஒழுங்கான மாதவிடாய் சுழற்சி என்றால் 45 நாட்கள் கழித்து pregnancy test kit வாங்கி வீட்டிலேயே பரிசோதித்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

குமட்டல் மற்றும் வாந்தி

vomit

    குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை கற்பத்தின் ஒரு பொதுவான அறிகுறி ஆகும். பொதுவாக கர்ப்பத்தின் ஆறாவது வாரத்தில் தொடங்கி 12 வது வாரம் வரை நீடிக்கும். ஆனால் இவை பெண்களுக்கு பெண்கள் மாறுபடும். ஒரு சில பெண்கள் கர்ப்பம் முழுவதும் இந்த அறிகுறியை அனுபவிக்கிறார்கள். அதுவே ஒரு சில பெண்களுக்கு சுத்தமாக இந்த அறிகுறியே இருக்காது.

மனநிலை மாற்றங்கள்

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக அவர்களுக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் வழக்கத்தை காட்டிலும் சற்று அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். ஒரு சில சமயங்களில் அதிக மகிழ்ச்சியாகவும் ஒரு சில சமயங்களில் அதிக சோகமாகவும் இருப்பார்கள்.

உணவு விருப்பங்கள் மற்றும் வெறுப்புகள்

food cravings

     அதிகபட்ச பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளை அதிகமாக விரும்புவார்கள், ஒரு சில உணவுகளை அதிகமாக வெறுப்பார்கள். பொதுவாக ஒரு சில கர்ப்பிணி பெண்களுக்கு இனிப்பு போன்ற சுவையை அதிகமாக விரும்புவார்கள் மற்றும் ஒரு சில கர்ப்பிணி பெண்கள் புளிப்பு, காரம் போன்ற சுவைகளை அதிகமாக விரும்புவார்கள். இவை அவர்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக தான் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

மார்பக மாற்றங்கள்

     ஒரு பெண் கர்ப்பம் தரித்த உடன் அவர்களது உடம்பில் அதிக அளவு ஹார்மோன்கள் உற்பத்தியாகிறது. அந்த அதிக அளவு ஹார்மோன் காரணங்களால் அவர்களது மார்பகங்கள் ஆனது சற்று பெரிதாக ஆரம்பித்து விடும்.

உடல் சோர்வு

tired

     முதல் மூன்று மாதங்கள் மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் கர்ப்பிணி பெண்ணின் உடலானது மிகவும் சோர்வுற்று காணப்படும். ஏனென்றால் அவர்கள் வயிற்றில் வளர்ந்து வரும் கருவை ஆதரிக்க உடலானது அதிக அளவு கடினமாக வேலை செய்கிறது. இதன் காரணமாகத்தான் கர்ப்பிணி பெண்கள் வழக்கத்தை காட்டிலும் சற்று சோர்வாக இருப்பார்கள்.

அதிகமாக சிறுநீர் கழித்தல்

     பொதுவாக கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பையில் உள்ள கருவானது வளர்ந்து கொண்டிருக்கும். அவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் கர்ப்பப்பையானது சிறுநீர்ப்பையை அதிகமாக அழுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள். இவை கர்ப்பம் தரித்த ஆறு வாரங்களில் இருந்து  தொடங்குகிறது. இதையும் தாண்டி ஒரு சில கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் அடங்காமை மற்றும் சிறுநீர் கசிவு போன்ற பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள்.

மலச்சிக்கல்

     மலச்சிக்கல் என்பது கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக அனுபவிக்கும் ஒரு பிரச்சினையாகும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக செரிமான அமைப்பானது மெதுவாகிறது. இதன் காரணமாக மலம் கழிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. மேலும் வளர்ந்து வரும் கர்ப்பபையானது குடல் மீது அழுத்தத்தை செலுத்துவதன் மூலம் இந்த மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஆதலால் இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக அதிக அளவு தண்ணீர் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தோல் மாற்றங்கள்

skin changes

     பொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக தோலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அவற்றுள் சில முகப்பரு, சருமம் கருமையாதல், கருவளையம், கழுத்து கருமை, ஸ்ட்ரெச் மார்க்குகள் போன்ற தோல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

வீக்கம்

     வீக்கமானது உடலில் உள்ள கூடுதல் திரவம் மற்றும் ரத்த நாளங்களில் வளரும் கருவின் அழுத்தத்தால் ஏற்படுகிறது. இந்த கர்ப்ப காலத்தில் அதிகரித்த திரவ அளவானது நஞ்சுக்கொடி மற்றும் வளரும் குழந்தையை ஆதரிக்கவும் உதவுகிறது. வீக்கம் பொதுவாக பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் உருவாகிறது. அதுவும் ஒரு சிலருக்கு கைகள், முகம் மற்றும் உடலின் மற்ற பகுதிகளிலும் ஏற்படுகிறது.

முதுகு வலி

     பொதுவாக இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் இந்த அறிகுறியானது ஏற்படுகிறது. வயிற்றில் வளரும் கருவின் அதிக எடை காரணமாகவும் மற்றும் உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாகவும் முதுகு வலி வருகிறது.

மூச்சுத் திணறல்

     பொதுவாக கடைசி மூன்று மாதங்களில் அனைத்து கர்ப்பிணி பெண்களும் எதிர்கொள்ளும் ஒரு அறிகுறி ஆகும். இந்த அறிகுறையானது பெரும்பாலும் வளர்ந்து வரும் கர்ப்பப்பையால் ஏற்படுகிறது. மேலும் ஒரு சில ஹார்மோன் மாற்றங்களின் காரணமாகவும் இந்த மூச்சு திணறல் ஏற்படுகிறது.

தலைச்சுற்றல் மற்றும் மயக்கம்

    இவை முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான அறிகுறி ஆகும். பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாகத்தான் முதல் மூன்று மாதங்களில் தலை சுற்றல் மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படுகிறது.

பிறப்புறுப்பு ரத்தப்போக்கு

   கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பு ரத்தப்போக்கு ஏற்படலாம். லேசான ரத்தப்போக்கு சாதாரணமாக இருக்கும். அதுவே அதிகமான ரத்தப்போக்கு, தசைப்பிடிப்பு வலியுடன் ரத்தப்போக்கு ஆகியவை இருந்தால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசகரை  பரிந்துரைப்பது நல்லது.

     இந்த அனைத்து அறிகுறிகளும் கற்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் ஆகும். இருப்பினும் இந்த அறிகுறிகள் பெண்களுக்கு பெண்கள் மாறுபடும். இவை சாதாரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு அறிகுறிகள் தான். இருப்பினும் மருத்துவ ஆலோசகரை ஒரு முறை அணுகி உறுதி செய்து கொள்வது நல்லது.

    இதே போல் வயிற்றில் உள்ளது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை கண்டறிவதற்கும் ஒரு சில அறிகுறிகள் உள்ளது.

நன்றி !!

Share

Leave a Reply